மழைக்காலத்திற்கான பைக் பராமரிப்பு டிப்ஸ்

Bike Maintenance Tips in Tamil

மழை காலத்தில் பைக்கில் பயணம் செய்வது புதிய அனுபவமாக இருக்கும். ஆண்டு முழுவதும் பைக்கை பயன்படுத்தும் போது மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விட இந்த சீசனில் பைக்கை பயன்படுத்தும் போது அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. இந்த சீசனில் சாலையில் மழை நீரால் சறுக்கி கொண்டே செல்லும் மற்றும் பைக்கை எளிதாக ஒட்டி செல்ல அதிக கவனம் தேவைப்படும். நன்றாக பைக்கை ஒட்டி செல்பவராக இருந்தாலும், பைக்கை ஸ்டார்ட் செய்யும் முன்பு சில சோதனைகளை செய்து கொள்ள வேண்டும். அவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்.

Bike Maintenance Tips for Monsoon

சரியான நேரத்தில் தொடர்சியாக பராமரிப்பு

தொடர்சியாக சரியான நேரத்தில் பராமரிப்பை மேற்கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். சரியான பைக்கை சர்வீஸ் செய்து வைத்திருப்பதால், பைக்கை சோதனை செய்ய அதிக நேரம் செலவிட தேவை இருக்காது. எனவே, மழை காலத்தில் தொடர்ச்சியான இடைவெளியில் பைக்கை சோதனை செய்து கொள்ள வேண்டும்.

Anti Rust

நான்கு சக்கர வாகனம் போன்று அல்லாமல், டூவிலர்கள் கடுமையான காலநிலை ஏற்ப தானாகவே மாறி கொள்ளும், முதலில், யாரும் ஈரமான சீட்டில் அமர விரும்ப மாட்டார்கள். நீங்கள் வாகனத்தை ஓட்டினாலும், இல்லாவிட்டாலும், வாகனத்தின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கும். இதனால், எலெக்ட்ரிக் பிரச்சினைகள், துருப்பிடித்தல் போன்றவை ஏற்படலாம். ஆகையால் மழை காலங்களில் பைக்குகளை ஷெட்களில் பார்க்கிங் செய்ய வேண்டும். மழை காலங்களில், மரத்திற்கு அடியில் பைக்கை நிறுத்தினால், மரத்தின் கிளை உடைந்து பைக்கின் மேல் விழ வாய்ப்புள்ளது.

Teflon Coating

டெப்லான் கோட்டிங் மற்றும் ஆண்டி-ரஸ்ட் பாதுகாப்பு லேயர் உருவாக்குதல்

தற்போதைய கால கட்டத்தில் பெரும்பாலான பைக்குகள் பைபர் பாடிஒர்க் உடன் கிடைகிறது. இருந்த போதும், கிளாசிக் மோட்டர் சைக்கிள்களான ராயல் என்பீல்ட் மற்றும் சில ஸ்கூட்டர்கள் இன்னும் மெட்டல் பாடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, மெட்டல் பாடியை துருப்பிடிப்பதில் இருந்து பாதுகாக்க டெப்லான் கோட்டிங் மற்றும் ஆண்டி-ரஸ்ட் பாதுகாப்பு லேயர் உருவாக்க வேண்டும்.

Tyre Checking

டயர்களை செக் செய்வது

மழைகால சீசனில் ரோடுகள் அதிகமாக வழுக்கும் என்பதால், டயர்களை சரியான வடிவத்தில் வைத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. ரப்பர்கள் தேய்யும் தன்மை கொண்டதால், மழை சீசனுக்கு முன்பு பைக் டயர்களை மாற்ற வேண்டும். உங்கள் பைக்கின் டயர் சோதனை செய்ய, டயரில் உள்ள இடைவெளியில் ஒரு காயினை சொருகி, அதன் ஆழம் எவ்வளவு உள்ளது என்று சோதனை செய்து கொள்ள வேண்டும். குறைந்தது இந்த ஆழம் இரண்டு மில்லி மீட்டர் அளவு இருக்க வேண்டும். இதுமட்டுமின்றி டயரில் ஏற்றப்படும் காற்றின் அளவும் சரியாக இருக்க வேண்டும்.

Chain Maintenance

செயின் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்

மழை சீசன் என்றாலே சேறும் சக்தியும் அதிகமாக இருக்கும். இவை பைக்கின் பல பகுதிகளில் படியும். இதே சகதிகள் செயின் டிரைவ்வில் படிவதால், இரண்டு வகையான பிரச்சினைகள் வரும். ஒன்று சகதிகளை அகற்ற வாட்டர்வாஷ் செய்தால், செயின் டிரைவில் உள்ள லுபிரிக்கேன்ட்டும் வெளியேறிவிடும், இரண்டாவதாக, தூசு அதிகமாக படிவதால், அதிக உராய்வை உண்டாக்கும். அதனால், சுத்தமாக வைத்து கொள்வதும், ஒவ்வொரு 500 கிலோ மீட்டருக்கும் லுபிரிக்கேன்ட் செய்வதும் அவசியமாகும். சேறு படிவதால் இன்ஜின் பிளாக் ஆவதுடன், இன்ஜின் கூலிங் ஆற்றலையும் குறைக்கும்.

Break Adjustment

பிரேக்களை செக் செய்வது

உங்கள் பைக் டிஸ்க் அல்லது டிரம் பிரேக் கொண்டதாக இருந்தாலும், மழை தண்ணீர் காரணமாக அதன் ஆற்றலை இழக்கும். ஆகையால், பைக்கை எடுத்து கொண்டு செல்லும் முன்பு, பிரேக்கை சரி பார்த்து கொள்வது அவசியமாகும். டிஸ்க் பிரேக் ஆக இருந்தால் டிஸ்க்-கை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். பைக்கின் பிரேக்கிங் ஸ்டைலும் முக்கியமாக பார்க்கப்பட வேண்டும். மெதுவாகவும், குறிப்பிட்ட இடைவேளியுடனும் பைக்கை ஓட்டுவது நல்லது. மழை காலத்தில் உங்கள் பைக் ஸ்கிட் ஆக வாய்ப்புள்ளது.

மேற்குறிய டிப்ஸ்களை பயன்படுத்தி பாதுகாப்பாக மழை சீசனில் பைக்குகளை ஒட்டி, பைக் ரைடு-ஐ என்ஜாய் செய்யலாம்.