காரில் உள்ள ஏர்பேக்ஸ் எப்படி இயங்கும் என தெரிந்து கொள்ள வேண்டுமா?

Airbags

நவீன வாகனங்களில் சீட் பெல்ட், டிராக்ஷன் கண்ட்ரோல், ஆண்டி- லாக்  மற்றும் அஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி கார் மோதி விபத்துக்கு உள்ளாகும் நிலையில் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டதே ஏர்பேக்கள் ஆகும்.


 

விபத்துகளில் தலையில் காயம் அடையும் நிலையை எர்பேக்ககள் 24 சதவிகிதம் குறைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், விபத்து நேரத்தில் காரில் செல்பவர்களை பாதுகாக்க அமைக்கப்பட்ட இந்த ஏர்பேக்கள் சரியான நேரத்தில் எப்படி வேலை செய்து, வாகனத்தில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது என்பது வாகனத்தை வாங்குபவர்களில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

 


 

பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட எர்பேக்கள் எப்படி வேலை செய்கிறது என்பது குறித்த தகவல்களை முழுமையாகவும், எளிமையாகவும் உங்களுக்கு விளக்குகிறது Auto News360

 

 

ஏர்பேக்கள் முழுமையாக கம்ப்யூட்டர் உதவியுடன் செயல்படுகிறது. இந்த எர்பேக்கில் என்னென்ன உள்ளது என்பதை கீழே பார்க்கலாம்.

 


 

முழுமையாக கம்ப்யூட்டர் சென்சார்கள் மூலம் இயங்கும் ஏர்பேக்களில் இடம் பெற்றுள்ள முக்கியமான பாகங்கள்:

  • கிராஷ் சென்சார்
  • மேக்னட்
  • பால் பேரிங்
  • காண்டாக்ட் சுவிட்கள்
  • டிகொனாஸ்டிக் ரெசிஸ்டர்
  • SRS கம்ப்யூட்டர்
  • இன்ப்லெட்டர்
  • எர்பேக்ஸ்

 

சென்சார் மூலம் இயங்கும் இந்த ஏர்பேக்கள் அதிவேகமாக கார் செல்வதை அறிந்து கொண்டு, அது குறித்த தகவல்களை SRS கம்ப்யூட்டருக்கு தரும். இதை தொடர்ந்து, அதில் உள்ள இன்ப்லெட்டர்கள் செயல்பட தொடங்கும். அதிவேகமாக செல்லும் காரின் வேகத்தை கணித்து கொண்டே இருக்கும் இந்த இன்ப்லெட்டர்கள் கார் ஏதாவது ஒன்றின் மீது மோதிய உடனே ஏர்பேக்களை வெளியே அனுப்பும்.

 

 

எர்பேக்களின் உள்ளே நடக்கும் கெமிக்கல் மாற்றங்கள் மூலமே ஏர்பேக்கில் நைட்ரஜன் கேஸ் நிரப்பப்பட்டு வெளியே வருகிறது. அதிவேகமாக நடக்கும் இந்த செயல்கள் நாம் கண் சிமிட்டும் நேரத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.