உங்கள் காரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்.

Protect Car Paint from Sun Light

சூரிய ஒளியில் இருந்து வரும் அல்ட்ரா வயலெட் கதிர்கள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக இந்த கதிர்கள் மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.  இந்த கதிர்கள் மனிதர்களின் தோல் பகுதியில் பாதிப்பை உண்டாகும்.

இப்படி மனிதர்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் இந்த கதிர்கள் படுவதால் காரின் பெயின்ட் என்னவாகும். என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த கதிர்களில் இருந்து உங்கள் காரின் பெயிண்டை எப்படி பாதுகாத்து கொள்வது என்பது பற்றி இந்த கட்டுரையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய ஒளியில் இருந்து வரும் அல்ட்ரா வயலெட் கதிர்கள் படுவதால், காரின் பெயிண்ட்கள் பாதிப்படைகின்றன. இதனால், காரை நிறுத்தும் போது, சூரிய ஒளி படாமல், கவர் செய்யப்பட்ட கார் பார்க்கிங்களில் நிறுத்த வேண்டும். இதன் மூலம் உங்கள் காரின் பெயிண்டை பாதுகாக்கலாம். இது கோடை காலத்தில் சாத்தியமான என்றால், சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. ஏன்னென்றால், உங்கள் அலுவலக பார்க்கிங் கவர் செய்யப்பட்ட பார்க்கிங்-ஆக இருக்கா வேண்டும்? அதுமட்டுமின்றி நாள் முழுவதும் காரை ஒட்டி செல்லும் போது சூரிய ஒளி படமால் செல்ல முடியுமா?

எனவே இது பிராக்டிகலாக முடியாத ஒன்று, சரிய எப்படி உங்கள் கார் பெயிண்ட்களை பாதுகாப்பது என்பதை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை கடைபிடியுங்கள்.

 

காரை தொடர்ந்து கழுவுங்கள்


உங்கள் காரை குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ச்சியாக கழுவி வருவது, உங்கள் காரின் பெயிண்ட் மீது சூரிய ஒளி பட்ட அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறைய வாய்ப்புள்ளது. இந்த முறையில் முதலில் உங்கள் காரில் உள்ள அழுக்குகளை காட்டன் துணி கொண்டு சுத்தம் செய்து விட வேண்டும். தொடர்ந்து கார்களில் உள்ள சகதி போன்றவற்றை அகற்ற, ஆட்டோமேடிக் கிளே பார் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இவை பெயிண்ட்களை விட்டு விட்டு கறைகளை மட்டுமே அகற்றும்.

 

கையால் காரில் வெளிப்புற பாகங்களி துடைத்து சுத்தம் செய்யுங்கள்


உங்கள் காரின் பெயிண்ட்கள் சில இடங்களில் உதிருந்து இருக்காலம். இதனால் உங்கள் காரின் வெளிப்புறத்தை உங்கள் கையால் காட்டன் துணியை எடுத்து கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இதனால், காரின் எந்தெந்த இடத்தில் பெயிண்ட் பாதிப்பு அடைந்துள்ளது என்பதை உங்களால் எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.

 

காரை பாலிஷ் செய்து கொள்ளுங்கள்


உங்கள் காரின் வெளிப்புறத்தை பளபளவென்று வைத்து கொள்ள காரை வாக்ஸ் பாலிஷ் செய்து கொள்வது நல்லது. இந்த பாலிஷ் மூலம் குறைந்த அளவு சூரிய ஒளி காரின் வெளிப்புறத்தில் பட்டு ஊடுருவும். இதனால் உங்கள் காரின் பெயிண்ட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

உங்கள் காரை பாலிஷ் செய்ய நீங்கள் முடிவு செய்து விட்டால், சரியான கார் வேகஸ்-ஐ தேர்வு செய்வது அவசியமாகும். மார்க்கெட்டில் பல்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வேகஸ் பாலிஷ்கள் கிடைக்கின்றன.

அதில் முக்கிய வகைகளை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

நேச்சுரல் கார் வேக்ஸ்

இது பீஸ்வேகஸ் போன்று இயற்கை முறையில் செய்யப்படும் வேகஸ் பாலிஷ் ஆகும்.

பெயின்ட் சீலன்ட்

இது முழுவதுமான மனிதர்களால் தயாரிக்கப்பட்ட பொருளாகும். இவை சிந்தடிக் வேகஸ் மூலம் உருவாக்கப்படுகிறது.

கிளினர் வேகஸ்

இந்த வேகஸ்கள் படிபடியாக சுத்தம் செய்யும். இதில் கார்னுபா வேகஸ் போன்ற இயற்கையான வேகஸ்கள் உள்ளன.

கிளினர் சீலன்ட்

இந்த வேகஸ்களும்  சுத்தம் செய்வதுடன் பாதுகாப்பும் அளிக்கிறது. இவை சிந்தடிக் பொருட்கள் மூலம் தயாரிக்கப்படுபவை ஆகும்.

பினிஷிங் வேகஸ்

இந்த வேகஸ்சின் பெயரை போலவே, இந்த வேகஸ் முழுவதையும் சுத்தம் செய்யாது. ஆனால் காருக்கு சிறந்த தோற்றத்தை அளிக்கும்.

பினிஷிங் சீலன்ட்

இந்த வேகஸ்களும் காரின் வெளிபுரத்திற்கு பாதுகாப்பு அளிக்கிறது. இவை சிந்தடிக் பொருட்கள் மூலம் தயாரிக்கப்படுபவை

ஹைபிரிட்ஸ்

இவை நேட்சுரல் மற்றும் சிந்தடிக் என இரண்டு வகையான வேகஸ்களின் காம்பினேஷன் ஆக இருக்கும்.

இதில் உங்கள் காருக்கு ஏற்ற ஒரு வேகஸ் கொண்டு பாலிஷ் செய்து கொள்ளலாம்.

 

காரை கவர் செய்து நிறுத்த வேண்டும்


காரை சூரிய ஒளியில் பாதுகாக்க சிறந்த வழிகளில் ஒன்று, காரை கவரால் மூடி நிறுத்துவதேயாகும். எப்போதெல்லாம் காரை நீங்கள் பார்கிங் செய்கிறீர்களோ, அப்போதெல்லாம் காரை கவரால் மூடி வைக்க வேண்டும். இதன் மூலம் சூரிய ஒளி மட்டுமின்றி, தூசுகள் படிவத்தில் இருந்தும் காரை பாதுகாக்க முடியும். இதுபோன்று கவர் போட்டு மூடி வைப்பதால் வேறு எந்த மாற்றமும் ஏற்படாது.

காரை கவர் போட்டு மூடி வைப்பதால் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்

1. கார் ஈரமாக இருக்கும் போது, கவரை போட்டி மூடி வைக்க கூடாது. இப்படி மூடி நாள் அந்த ஈரபதம் காரணமாக பாதிப்பு ஏற்படலாம்.

2. காரை மூடி வைக்கும் கவரும் ஈரமாக இருக்க கூடாது

இதுமட்டுமின்றி கார்களை பாதுகாக்க, வாட்டர்புரூப் கவர்களும் விற்பனை வந்துள்ளது. இந்த கவர்கள் பல்வேறு கலர்களில் கிடைக்க்றைத்து.