அறிமுகமானது 2018 அப்ரிலியா எஸ்ஆர்150; விலை ரூ. 70,031

Aprilia SR150 Launched

எஸ்ஆர்-கள் தற்போது பல்வேறு புதிய மேம்பாடுகளுடனும், உயர்தரம் கொண்டதுடன் எதிர்கால போட்டிக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது.

அப்ரிலியா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட ஸ்டாண்டர்ட் எஸ்ஆர்150 மோட்டர் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய எஸ்ஆர் 150 கார்பன் மற்றும் எஸ்ஆர் 150 ரேஸ் வகை ஸ்கூட்டர்கள் முறையே 73 ஆயிரத்து 500 மற்றும் 80 ஆயிரத்து 211 ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மேற்குறிய விலைகள் அனைத்து புனேவில் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
Aprilia SR150 Launched 180901

You May Like:ராஜ்புதன கஸ்டம்ஸ் ஸ்பெஷல் எடிசன்களாக இந்தியாவில் வெளியாகிறது டுகாட்டி மான்ஸ்டர் 797

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


ஏற்கனவே எஸ்ஆர் 150 ஸ்கூட்டர்கள் இந்தியாவில் சிறந்த செயல்திறன் கொண்ட ஸ்கூட்டர்களாக இருந்த போதிலும் அப்ரிலியா நிறுவனம் புதிய வசதிகளுடன் புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய எஸ்ஆர் 150 ஸ்கூட்டர்கள் புதிய கலரில் (எஸ்ஆர் 125 போன்று ப்ளு மற்றும் கிரே கலரில்) வெளிந்த போதும் இதில் இடம் பெற்றுள்ள கிராப்பிக்களில் சில மாற்றங்களை செய்துள்ளது. ரேஸ் வகைகளில் புதிய கிராபிக்களுடன் பெரிய வின்ட் ஸ்கிரீன் மற்றும் கூடுதலாக போன் கனெக்டிவிட்டி வசதியும் இடம் பெற்றுள்ளது.
Aprilia SR150 Launched 180902

You May Like:நிசான் சன்னி ஸ்பெஷல் பதிப்பு அறிமுகம்; விலை ரூ. 8.48 லட்சம்

புதிய எஸ்ஆர் 150 கார்பன் வகைகள், லிமிட்டெட் எடிசன் மாடல்களாகவே வெளிவந்துள்ளது. மேலும் இதில் கார்பன்-பைபர் இமிடேட்டிங் கிராபிக்ஸ் பாடி ஒர்க்குகளும் இடம் பெற்றுள்ளது. மூன்று ஸ்கூட்டர்களும் புதிய டிகி-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளச்சர்களை கொண்டுள்ளது. இவை டிஜிட்டல் டிஸ்பிளேகளுடன் பெட்ரோல் அளவு, ஓடாமீட்டர் மற்றும் டிரிப் மீட்டர்களை உள்ளடக்கியதாக இருக்கும். ஸ்பீடோ,இன்னும் அனலாக் யூனிட்டாகவே இருந்து வருகிறது.
Aprilia SR150 Launched 180903

You May Like:ரூ. 20.59 லட்சத்தில் அறிமுகமானது ஜீப் காம்பஸ் பிளாக் பேக் பதிப்பு

இந்த ஸ்கூட்டர்களின் சீட்டின் அடியில் USB சார்ஜிங் போர்ட்டு ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. எஸ்ஆர் 150 ஒரே அளவிலான 120/70 R14 டயர்களை (முன்புறம் மற்றும் பின்புறத்தில்) கொண்டுள்ளது ஆனால் இது வெவ்வேறு டிசைனில் இருக்கும்.
Aprilia SR150 Launched 180904

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


ஆற்றலை பொறுத்தவரை, எஸ்ஆர் 150 ஸ்கூட்டர்கள் ஏர்-கூல்டு, சிங்கள் சிலிண்டர் மோட்டாருடன், 10.06hp மற்றும் 10.9Nm டார்க்கியூ உடன் இயங்கும். பிரேக்குகளை பொருத்தவரை முந்தைய ஸ்கூட்டர்களில் இடம் பெற்ற அதே செட்டப்பை கொண்டுள்ளது. முன்புறமாக 220mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 140mm டிரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.
Aprilia SR150 Launched 180905
இந்த ஸ்கூட்டரில்மோனோஷாக் இடம் பெற்றுள்ள போதிலும் இதில் தற்போது பிரி லோடட் அட்ஜெட் செய்து கொள்ளும் வசதி இடம் பெற்றுள்ளது. அப்ரிலியா எஸ்ஆர்150 ஸ்கூட்டர்களின் பெட்ரோல் டேங்க்கின் கொள்ளவு 6.5 லிட்டர் ஆகும்.