2019 ஹோண்டா CBR400R ஸ்போர்ட்டி லுக்கில் வெளியானது

2019 Honda CBR400R Bikes in India

ஹோண்டா நிறுவனம் தற்போது 400cc பைக்களை தயாரிக்கும் முயற்சியில் காலடி வைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக புதிய CBR400R பைக்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்போர்ட்ஸ் பைக்களின் டிசைன்கள் கவாசாகி நிஞ்ஜா 400 பைக்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும். புதிய பைக்கள் 2019 CBR500R பைக்களை அடிப்படையாக கொண்டதாக இருக்கும். மேலும் இதில் இடம் பெற்றுள்ள பெரியளவிலான மாற்றமே குறைந்த இன்ஜின் திறன் கொண்டதாக இருக்கும்.

CBR400R டிசைன் பைக்கள் மேம்படுத்தப்பட்டு CBR500R-ஆக கடந்த ஆண்டு EICMA ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் பாடி வடிவமைப்பு 500R போன்றே இருந்தாலும், இதில் கூடுதலாக கலர் ஸ்கீம்கள் உள்ளன.

You May Like:இந்தியாவில் அறிமுகமானது லம்போர்கினி ஹூரன் எவோ; விலை ரூ.3.73 கோடி

2019 Honda CBR400R Bike News

புதிய CBR400R பைக்கள், சிலிக் மற்றும் ஸ்போர்ட்ஸ் லுக்கை 2018ம் ஆண்டு CBR500R பைக்களில் இருந்து பெறப்பட்டதாக இருக்கும். லுக்கை பொறுத்தவரை 400R பைக்களில் கூடுதலாக புதிய ரைடிங் பொசிஷன்களை ரேஸ் பைக்கள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹோண்டா நிறுவனம் தெரிவிக்கையில், CBR400R பைக்கள் ஸ்டைலாக இருப்பதுடன் முழு வேகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ஸ்போர்ட்ஸ் பைக்களுக்கான முற்றிலும் புதிய LED லைட்டிங் பொருத்தப்பட்டுள்ளது.

You May Like:ரெனால்ட் டஸ்டர் AMT விலை குறைந்தது ; இப்போது விலை ரூ. 12.10 லட்சம்

புதிய மாடல் 399cc ஆற்றலில், லிக்யூட்-கூல்டு, டூவின்-சிலிண்டர் இன்ஜின்களை கொண்டுள்ளது. இது 46hp ஆற்றலில் 9,000rpm மற்றும் 38Nm டார்க்யூவில் 7,500rpm-லும் இயங்கும். மேலும் இந்த பைக்கின் இண்டெக் சிஸ்டமை ஹோண்டா நிறுவனம் மறுசீரமைப்பு செய்துள்ளது. மேலும் இதில் சிலிப்பர் கிளட்ச்களுடன் 6 ஸ்பீட் கியர்பாக்ஸ்களையும் பயன்படுத்தியுள்ளது. மேலும் இந்த பைக்கில் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளச்சர் பொருத்தப்பட்டுள்ளது.

சஸ்பென்சன்களை பொறுத்தவரை, இதில் டெலிஸ்கோபிக் போர்க் மற்றும் மோனோஷாக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்களில் சிங்கிள் டிஸ்க் பிரேக்களை முன்புறம் மற்றும் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் முன்புற டயர்கள் 120/70-17 மற்றும் ரியர் பகுதியில் 160/60-17 அளவில் இருக்கும். மேலும் இந்த பைக்களின் எடை 192kg எடை கொண்டதாக இருக்கும். இது முழு எடையாக இருக்காது என்றபோதும், பின் நாட்களில் இந்த எடை கொண்டதாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. இந்த பைக்களின் பெட்ரோல் செலவிடும் திறன் 41kpl-ஆகும். பைக்’ 60kph வேகத்தில் பயணிக்கும் நிலையில் இருக்கும். இந்த பைக்கின் பெட்ரோல் டேங்க் அளவு, 500R-ல் உள்ளதை போன்றே 17 லிட்டராக இருக்கும்.

You May Like:2019 ரெனால்ட் க்விட் ரூ. 2.66 லட்ச விலையில் அறிமுகமானது

2019 Honda CBR400R Latest Bike News in Tamil

2019 ஹோண்டா CBR400R பைக்கள், ஜப்பான் கிரான்ட் பிரிக்ஸ் ரெட், மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் மற்றும் பெர்ல் கிளார் ஒயிட் என மூன்று கலரில் கிடைக்கிறது. இந்த பைக்களின் விலை இந்திய மதிப்பில் 5.16 லட்சமாக இருக்கும். மேலும் இந்த பைக்கள் 4.31 லட்ச விலை கொண்ட கவாசாகி நிஞ்ஜா 400 பைக்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

இந்த புதிய பைக்களுக்கான இந்திய அறிமுகம் பற்றிய தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இருந்த போதும் விரைவில் இந்தியாவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.