விசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்

Kawasaki Z900 2019

புதிய 2019 கவாசாகி Z900 விசுவல் மாற்றங்களுடன் ஏற்கனவே வெளியாகியுள்ள மாடலில் இருந்து சிறிய மாற்றங்களுடன் வெளியாகியுள்ளது. 2019 கவாசாகி Z900 மோட்டார் சைக்கிள்களில் மெக்கனிக்கல் ரீதியாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Kawasaki Z900 2019

You May Like:SWM சூப்பர் டூயல் டி இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 6.80 லட்சம்

புதிய 2019 கவாசாகி Z900 மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மோட்டார் சைக்கிள்களின் விலை 7.68 லட்ச ரூபாயாகும். (எக்ஸ் ஷோ ரூம் விலை, டெல்லியில்). இந்த புதிய மாடல்கள், பெர்ல் பிளாட் ஸ்டார்டஸ்ட் ஒயிட்/ மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக், மெட்டாலிக் மூன்டஸ்ட் கிரே/ என்போனி மற்றும் மெட்டாலிக் பிளாட் ஸ்பார்க் பிளாக்/மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் என மூன்று கலர் ஆப்சன்களில் கவாசாகி நிறுவனம் டீலர்ஷிப்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் மூன்டஸ்ட் கிரே/ என்போனி கலர் ஆப்சன்களில் வெளியான 2019 காவசாகி Z900 மோட்டார் சைக்கிள்கள் குறைந்த அளவிலேயே விற்பனை செய்யப்பட உள்ளன . புதிய 2019 கவாசாகி Z900 விசுவல் மாற்றங்களுடன் ஏற்கனவே வெளியாகியுள்ள மாடலில் இருந்து சிறிய மாற்றங்களுடன் வெளியாகியுள்ளது. 2019 கவாசாகி Z900 மோட்டார் சைக்கிள்களில் மெக்கனிக்கல் ரீதியாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

2019 Kawasaki Z900 peformance

You May Like:ரூ. 7.46 லட்சம் ரூபாயில் விற்பனைக்கு வந்தது 2018 சுசூகி வி-ஸ்ட்ரோம் 650 XT ABS

மேலும் இந்த மோட்டார் சைக்கிள்கள், 948cc ஆற்றல் கொண்டதாகவும், இன்லைன் நான்கு சிலிண்டர் இன்ஜின் 6 ஸ்பீட் டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டிருக்கும். எரிபொருள் இன்ஜெக்ஷக்டட் இன்ஜின்கள், 123 bhp மற்றும் 98.6 Nm டார்க்யூவை உருவாக்கும். இந்த இன்ஜின்கள் 6-ஸ்பீட் டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள சிலிப் அசிஸ்டெண்ட் கிளாட்ச் வசதிகள் விரைவாக கியர் ஷாப்ட்களுடன் இணைவதுடன், அதிவேகமாக செல்லும் போது திடீரென பிரேக் பிடிக்கும் போது ஏற்படும் பாதிப்புகளை குறைக்க உதவும்.

2019 Kawasaki Z900 colours

You May Like:ரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ

இந்த புதிய மோட்டார் சைக்கிள் குறித்து பேசிய கவாசாகோ மோட்டார்ஸ் பிரைவேட். லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், யூட்டா யமஷிதா, Z900 மோட்டார் சைக்கிள்கள், இந்தியாவில் விற்பனையாகும் மலிவான சூப்பர் பைக்காகும். விலை மட்டுமின்றி, இது ஒரு பேக்கேஜ் போன்றே வெளியாகியுள்ளது. Z900 இந்திய மார்க்கெட்டில் அதிகளவில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், கவாசாகி மோட்டார் சைக்கிள்களை வாங்கும் வாடிக்கையாளர்கள், கவாசாகி மோட்டார் உதிரி பாகங்களை பயன்படுத்தி கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். 2019 கவாசாகி Z900களில் முன்புற வீல்லில் 300mm டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற வீல்லில் சிங்கிள் சிலிண்டர்களுடன் கூடிய 250mm டிஸ்க் பிரேக்களையும் கொண்டுள்ளது. டூயல் சேனல் ABSகளும் இந்த மோட்டார் சைக்கிளில் இடம் பெற்றுள்ளது.