இந்தியாவில் அறிமுகமானது 2019 சுசூகி வி-ஸ்ட்ரோம் 650XT ABS; விலை 7.46 லட்சம்

2019 Suzuki V-Strom 650XT ABS Launched In India

சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனம், 2019 சுசூகி வி-ஸ்ட்ரோம் 650XT ABS பைக்களை இந்தியாவில் 7.46 லட்சம் ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம்) அறிமுகம் செய்துள்ளது. 2019 சுசூகி வி-ஸ்ட்ரோம் 650XT ABS பைக்கள் பல்வேறு வகையில் மேம்படுத்தபட்டுள்ளது. புதிய மாடலில் மாற்றியமைக்கப்பட்ட கிராபிக்ஸ் மற்றும் கூடுதலாக ஹசார்ட் லைட்கள் மற்றும் சைடு ரிப்ளெக்டர்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். புதிய வசதிகள் சேர்க்கப்பட்டதால், 2019 சுசூகி வி-ஸ்ட்ரோம் 650XT ABS பைக்களின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

2019 Suzuki V-Strom 650XT ABS Colors

You May Like:2019 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்ஸ் லேண்ட்மார்க் எடிசன் இந்தியாவில் அறிமுகமானது விலை ரூ.53.77 லட்ச ரூபாய்

புதிய எடிசன் அறிமுகம் குறித்து பேசிய சுசூகி இந்தியா நிறுவன மேனேஜிங் டைரக்டர் சாத்தொஷி உச்சிடா, கடந்த ஆண்டு சுசூகி வி-ஸ்ட்ரோம் 650XT பைக்கள் அறிமுகம் செய்யப்பட்ட போது பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 2019 மாடல் அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் புதிய 2019 சுசூகி வி-ஸ்ட்ரோம் 650XT பைக்கள் புதிய வசதிகளுடன், வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

2019 Suzuki V-Strom 650XT ABS Specifications

You May Like:ரூ. 1.15 லட்ச விலையில் அறிமுகமானது ஓகினாவா ஐ-ப்ரைஸ் இ-ஸ்கூட்டர்

2019 சுசூகி வி-ஸ்ட்ரோம் 650XT பைக்களில் எந்த விதமான மெக்கனிக்கல் மாற்றமும் செய்யப்படவில்லை. இவை 645cc வி-டுவின் மோட்டார்களுடன் 70bhp 68Nm பீக் டார்க்யூவில் இயங்கும். இந்த மோட்டார் 6-ஸ்பீட் கியர்பாக்ஸ் மற்றும் மூன்று மோடு கொண்ட டிராக்ஷன் கண்ட்ரோல் (2 மோடு + ஆப் மோடு) கொண்டதாக இருக்கும். இத்துடன் டூயல் சேனல் ABS கொண்டிருக்கும். இந்த பைக்கள் சாம்பியன் எல்லோ மற்றும் பெர்ல் கிளசியர் ஒயிட் என இரண்டு கலர்களில் கிடைகிறது.

You May Like:புதிய 2019 கேடிஎம் RC 200 ABS அறிமுகம்; விலை ரூ 1.88 லட்சம்

2019 சுசூகி வி-ஸ்ட்ரோம் 650XT ABS பைக்களில் 19 இன்ச் முன்புற வீல்கள் மற்றும் 17 இன்ச் ஸ்போக்ஸ் வீல்கள் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் ஷோட் பிரிட்ஜ்ஸ்டோன் பேட்டிலக்எஸ் டயர்களும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கள் 43mm டெலஸ்கோபிக் போர்க்களுடன் முன்புறம் 150mm டிராவல் மற்றும் பின்புறத்தில் லோடுகளுக்கு ஏற்ப அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் மோனோஷாக் போன்றவைகளும் பொருத்தப்பட்டுள்ளது.

பிரேக்கை பொறுத்தவரை, இதில், டோகிகோ 2 பிஸ்டன் பிராண்ட் கிளிப்பர் மற்றும் பின்புறத்தில் சிங்கிள் நிசான் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. வி-ஸ்ட்ரோம் 650XT பைக் 216Kg எடை கொண்டதாகவும், இதன் பெட்ரோல் டேங்க் 20 லிட்டர் கொள்ளவு கொண்டதாகவும் இருக்கும்.