ரூ. 84,578 விலையில் அறிமுகமானது 2019 டிவிஎஸ் டிவிஎஸ் அப்பாச்சி RTR 180

2019 TVS Apache RTR 180

2019 டிவிஎஸ் அப்பாச்சி RTR 180 புதிய மோட்டார் சைக்கிள்களில் ரேஸ் கிராப்பிக்ஸ்களுடன், புதிய இன்ஸ்டுரூமென்ட் கன்சோல், பிரேம் ஸ்லைடர்களுடன் கூடிய கிராஷ் கார்டு மற்றும் பல வசதிகள் இடம் பெற்றுள்ளது.

2019 TVS Apache RTR 180 ABS

You May Like:இந்தியாவில் புதிய எஸ்யூவி கார்கள் அறிமுகத்தை உறுதிபடுத்தியது ஸ்கோடா

இந்தியாவில் டூயல்-சேனல் எபிஎஸ்களுடன் வெளியாக உள்ள முதல் மோட்டார் சைக்கிள் என்ற பெருமையுடன் 2019 டிவிஎஸ் டிவிஎஸ் அப்பாச்சி RTR 180 வெளியாகியுள்ளது. 2019 டிவிஎஸ் டிவிஎஸ் அப்பாச்சி RTR 180 மோட்டார் சைக்கிள்கள் 84 ஆயிரத்து 392 ரூபாய் விலையில் (விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலையாகும்) விற்பனை வந்துள்ளது.

மேலும், இந்த மோட்டார் சைக்களில் மேம்படுத்தபட்ட பல வசதிகள் இடம் பெற்றுள்ளது. அப்பாச்சி சீரிஸ் மோட்டார் சைக்கிள்கள் மூன்று மில்லியன் விற்பனை இலக்கை இந்த ஆண்டின் முதல் பகுதியில் எட்டியுள்ளதை டிவிஎஸ் நிறுவனம் கொண்டாடி வரும் நிலையில், 2019 டிவிஎஸ் டிவிஎஸ் அப்பாச்சி RTR 180 மோட்டார் சைக்கிள்கள் வெளியாகியுள்ளது.

You May Like:லம்போர்கினி யுரூஸ் ST-X கான்செப்ட் வெளியானது

2019 டிவிஎஸ் டிவிஎஸ் அப்பாச்சி RTR 180 மோட்டார் சைக்கிள்களில், மேம்படுத்தபட்ட ரேஸ் கிராப்பிக்ஸ்களுடன், புதிய இன்ஸ்டுரூமென்ட் கன்சோல், பிரேம் ஸ்லைடர்களுடன் கூடிய கிராஷ் கார்டு மட்டுமின்றி அல்கண்டரா போன்ற சீட்கள் மற்றும் போஜ்டு ஹாண்டில்பார் மற்றும் எடைகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள இன்ஸ்டுரூமென்ட் கிளச்சர்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன் வெள்ளை பின்புறம் கொண்ட லிட் ஸ்பீடாமீட்டர்களும் அதில் டயல் ஆர்ட்களும் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்த மோட்டார் சைக்கிள்கள், பெர்ல் ஒயிட், கிளாஸ் பிளாக், டி கிரே, மேட் ப்ளூ மற்றும் மேட் ரெட் என ஐந்து கலரில் வெளியாகியுள்ளது.

2019 டிவிஎஸ் டிவிஎஸ் அப்பாச்சி RTR 180 மோட்டார் சைக்கிள்கள் 177.4cc ஓவர்-ஸ்கொயர், 2-வால்வ், சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்களுடன், 16bhp ஆற்றலில், 8500rpm ஆகவும், 15.5Nm பீக் டார்க்யூவில் 6500rpm ஆகவும் இருக்கும். இந்த மோட்டார், 5-ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிளின் அதிகபட்ச வேகம் 114kmph-ஆக இருக்கும் என்று டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

You May Like:முதல் முறையாக சூப்பர்கார் ‘SC18 ஆல்ஸ்டன்’-ஐ அறிமுகம் செய்தது லம்போர்கினி

இந்த மோட்டார் சைக்கிள்களில், டெலிஸ்கோபிக் போர்க்கள் முன்புறமும், கியாஸ் மூலம் சார்ஜ் செய்யப்படும் டூயல் ஷாக் அப்சார்பர்கள் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் ஆப்சனலாக எபிஎஸ்-ம் உள்ளது.

MY2019 மோட்டார் சைக்கிள்களில் புதிய அப்டேட்டாக, வெளியாக உள்ள 2019 டிவிஎஸ் டிவிஎஸ் அப்பாச்சி RTR 180 மோட்டார் சைக்கிள்கள் அடுத்த இரண்டு மாதங்களில் விற்பனைக்கு வர உள்ளது.
RTR 160 மற்றும் 200-க்கு இடைப்பட்ட மோட்டார் சைக்கிளாக வெளியாக உள்ளது இந்த 180 மோட்டார் சைக்கிள்களில் அப்பாச்சி சீரிஸ்களில் உள்ளதை போன்ற பழைய இன்ஜின்களே பொருத்தப்பட்டுள்ளது.