இந்தியாவில் ஆர்தர் 340 மற்றும் ஆதர் S450 ஐ அறிமுகப்படுத்துகிறது ஆர்தர் எனர்ஜி நிறுவனம்

Ather 340 News

எலக்ட்ரிக் இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக ஆர்தர் எனர்ஜி நிறுவனம்,  ஆர்தர் 340 மற்றும் ஆதர் S450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் முறையே ரூ.1,09,750 மற்றும் ரூ.1,24,750 (ஆன் ரோடு விலை) விலைகளில் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஸ்கூட்டர்கள் அதிக விலை  கொண்டதாக உள்ளது. தற்போது பெங்களூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர்கள், அடுத்த கட்டமாக சென்னை, புனே, ஹைதராபாத், புது டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் அறிமுகம் செய்ய ஆர்தர் எனர்ஜி நிறுவனம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆர்தர் 340 வகை ஸ்கூட்டர்களின் அதிகபட்ச வேகம் மணிக்கும் 70 கிலோ மீட்டராகவும்,  ஆர்தர் S450 வகை ஸ்கூட்டர்களின் அதிகபட்ச வேகம் மணிக்கும் 80 கிலோ மீட்டராகவும் இருக்கும் என்று ஆர்தர் எனர்ஜி உயர் அதிகாரி தருண் மேத்தா தெரிவித்துள்ளார்.

இந்த ஸ்கூட்டரில், புஷ் நேவிகேஷன், ஓவர் தி ஏர் அப்டேட்ஸ், பார்க்கிங் செய்யும் போது உதவும் வசதி, ஷார்ஜிங் ஸ்டேஷன் இடங்களை கண்டுபிடிக்கும் வசதி மற்றும் வாகனத்தை ஆய்வு செய்து எச்சரிக்கை  செய்யும் வசதிகள் உள்பட பல ஸ்மார்ட் தகவல் சேவைகள் இடம் பெற்றுள்ளது.

S450 மாடல்கள் 5.4kW BLDC மோட்டருடன் வெளிவருவதால், 18 டிகிரி சாய்வான பகுதியிலும் வாகனத்தை எளிதாக ஒட்டி செல்ல முடியும்.

இந்த ஸ்கூட்டர்களை வாங்குபவர்களின் வசதிக்காக, ஆர்தர் நிறுவனம், விற்பனைக்கு பின்னர் பராமரிப்பு செலவுகளை மேற்கொள்வதற்கான   புதிய சந்தா திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த சந்தா திட்டம் மூலம் வாடிக்கையாளர்கள் பயன் பெறலாம்.

இந்த சந்தா, ஸ்ர்ஜிங் உள்கட்டமைப்பு, சேவை மற்றும் பராமரிப்பு, லேபர் கட்டணம், பழுதான பொருட்களை மாற்ற ஆகும் செலவு ஆகியவற்றுடன் பிரேக் பேட் மாற்ற ஆகும் செலவுகளையும் உள்ளடக்கியதாகவும் இருக்கும் என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த திட்டத்திற்கான ஆண்டு சாந்தா 9 ஆயிரத்து 912 ரூபாயாகவும், மூன்று மாதங்களுக்கான சாந்தா 2 ஆயிரத்து 596 ரூபாயாகவும் வசூல் செய்யப்படும்.

22 ஆயிரமாக அறிவிக்கப்பட்டுள்ள வாகனங்களின் விலையில் FAME மானியம், ஜிஎஸ்டி, சாலை வரி, ஸ்மார்ட் கார்டு கட்டணம், பதிவு அட்டை மற்றும் காப்பீடு ஆகியவை அடங்கும்.

இந்த வாகனம் DC மோட்டார் மற்றும் பேட்டரி பேக் மற்றும் பேட்டரி மேலாண்மை முறை போன்றவைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆர்தர் 340 ஸ்கூட்டர்கள் 0 முதல் 40 கிலோ மீட்டரை 5.1 செகண்டுகளிலும், 450 வகை பைக்குள் 3.9 செகண்டுகளிலும் கடக்கும். இந்த வேகமே, இந்தியாவிலேயே வேகமான இ-ஸ்கூட்டர் என்ற பெயரை இந்த வாகனங்களுக்கு பெற்று தந்துள்ளது.

போக்குவரத்து நெரிசல் நிறைந்த நகர்ப்புறங்களில் 340 வகை ஸ்கூட்டர்கள் 60 கிலோ மீட்டரும், 450 வகை ஸ்கூட்டர்கள் 75 கிலோ மீட்டரும் பயணிக்கும் திறன் கொண்டவை.

இந்த பைக்களுக்காக, பெங்களூரை அடிப்படையாக கொண்ட நிறுவனம், உள்ளுரில் 17 சார்ஜிங் மையங்களை பொருத்தியுள்ளது. மேலும் இதை இந்தாண்டு இறுதிக்குள் 60  சார்ஜிங் மையங்களை பொருத்தவும் அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

வரும் 2020 ஆம் ஆண்டில் 12 பெரிய நகரங்களிலும், வரும் 2022 ம் ஆண்டில் 30 நகரங்களிலும், 130 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ள சார்ஜிங்மையங்களுக்காக  6,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது என்று நிறுவனத்தின் நீண்ட கால திட்டம் குறித்து பேசிய ஆர்தர் நிறுவன உயர் அதிகாரி மேத்தா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், இந்த நிறுவனம் உற்பத்தியை அதிகரித்து, அதிக மார்க்கெட் பிடிக்கவும் முடிவு செய்துள்ளது. இதில் முதல் கட்டமாக வாரத்திற்கு 40 வாகனங்கள் என்று, ஆண்டு இறுதியில் 350 யூனிட்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வாகனம் வாரண்டி  இரண்டு ஆண்டுகள் அல்லது 30,000 கிலோ மீட்டர் ஆகும். இது  முன்பு,  மற்றும் பேட்டரி பேக்களுக்கு  3 ஆண்டுகளுக்கு வாரண்டியாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.