பஜாஜ் டிஸ்கவர் 110 சிபிஎஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது; விலை ரூ. 53,273

Bajaj Discover 110 CBS Launched

எதிர்வரும் பாதுகாப்பு விதிகளை மனதில் கொண்டுள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மேம்படுத்தப்பட்ட சிறியளவிலான டிஸ்கவர் பைக்களை கம்பைன்ட் பிரேகிங் சிஸ்டம்(CBS)-களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பஜாஜ் டிஸ்கவர் 110 சிபிஎஸ் பைக்களின் தற்போதிய விலை 53 ஆயிரத்து 273 ரூபாயாகும் (எக்ஸ் ஷோரூம் விலை புனேவில்). இந்த பைக்கள் ஏபிஎஸ் அல்லாத மாடல்களை ஒப்பிடும் போது 563 ரூபாய் அதிகமாக இருக்கும்.

கம்பைன்ட் பிரேக்கிங் சிஸ்டம்கள் அதிக பிரேக் கண்ட்ரோல்களுடன் மோட்டார் சைக்களில் 125cc ஆற்றலை விட குறைவான ஆற்றலில் இருந்தால், CBS பொருத்த வேண்டும் என்ற விதி கட்டாயமாக்கப்பட உள்ளது. பெரியளவிலான டூவிலர்கள் இதே போன்று ஆண்டி லாக் பிரேக்ஸ் அல்லது ABS கண்டிப்பாக பொருத்தப்பட வேண்டும். இந்த விதிமுறை வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட உள்ளது.

Bajaj Discover 110 CBS

You May Like:ஹோண்டா சிபி யூனிகார்ன் 150 ஏபிஎஸ் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 78,815

பஜாஜ் டிஸ்கவர் 110 பைக்களை தவிர்த்து, பஜாஜ் பைக்களில் CBS மற்றும் ABS பொருத்தப்பட்டு மற்ற வெர்சன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. CBS தவிர, 2019 பஜாஜ் டிஸ்கவர் 110 பைக்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்த பைக்கள், 115cc சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின்களுடன், இந்த இன்ஜின்கள் 8.6 bhp மற்றும் 9.81 Nm பீக் டார்க்கில் இயங்கும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்களில் 130 mm டிரம் பிரேக்கள் இரண்டு வீல்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி முன்புற டெலிஸ்கோபிக் போர்க்களுடன் பின்புறம் டூவின் ஷாக் அப்சார்பர்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பஜாஜ் டிஸ்கவர் 110 பைக்களில் அழகிய சீட்களுடன் வசதியாக பயணம் செய்யும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது.

You May Like:புதிய கலரில் சர்வதேச அளவில் அறிமுகமானது 2019 சுசூகி GSX-S750

பஜாஜ் டிஸ்கவர் 110 பைக்கள் கடந்த ஆண்டு புதிய டிஸ்கவர் 125 பைக்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக்கள் அந்த ஸ்டைல்களால் பிரபலமடைந்துள்ளதுடன் டிஸ்கவர் பேம்லிகள் பல ஆண்டுகளாக விற்பனையாகி வருகிறது. மேலும் இந்த பைக்களை மறுசீரமைப்பு செய்து தற்போது பஜாஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஸ்டைல் மட்டுமின்றி இந்த பைக்கில் கூடுதலாக டே டைம் ரன்னிங் லைட்களை கடந்த ஆண்டு முதல் பொருத்தப்பட்டு வருகிறது. பஜாஜ் டிஸ்கவர் 110 சிபிஎஸ் பைக்கள், ஹீரோ ஸ்பிலண்டர், ஹீரோ பேஷன், டி.வி.எஸ். விக்டர், ஹோண்டா லிவிங் போன்ற பைக்களுக்கு போட்டியாக இருக்கும்.