இந்தியாவில் மீண்டும் அறிமுகமானது பென்னெலி டிஎன்டி 300, 302ஆர் மற்றும் டிஎன்டி 600i

Benelli bikes relaunched

பென்னெலி மற்றும் அதன் புதிய பார்ட்னர் அடிஸ்வார் ஆட்டோ ரைடு இந்தியா – மஹாவீர் குரூப் ஆகியவை டிஎன்டி 300, 302 ஆர் மற்றும் டிஎன்டி 600i பைக்களை மீண்டும் அறிமுகம் செய்ய முடிவு செய்தது. இந்த திட்டம் இந்தியாவில் இந்த நிறுவனத்தை விரிவுபடுத்தும் திட்டங்களில் ஒன்றாகும்.

Benelli TNT 300 ABS

You May Like:ரியர் டிஸ்க்குடன் வெளியாகியுள்ளது ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 & 500; விலை ரூ.1.28 லட்சத்தில் தொடங்குகிறது

இந்தியாவில் பென்னெலி நிறுவனம் தற்போது 15 டீலர்ஷிப்களை கொண்டுள்ளது. இதை வரும் 2019ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 25-க்கு மேற்பட்டதாக உயர்த்த முடிவு செய்துள்ளது. மேலும் இந்த மோட்டார் சைக்கிள்கள் வாடிக்கையாளர்களுக்கு முதல் ஐந்து ஆண்டு, அளவில்லா கிலோ மீட்டர் வாரண்டி போன்றவற்றை வழங்குகிறது. இதுமட்டுமின்றி ஆஃப்டர் சேல் சர்விஸ்களை மேம்படுத்தத பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Benelli TNT 300

You May Like:இந்தியாவில் அறிமுகமானது ரோல்ஸ் ராய்ஸ் சுள்ளினான்; விலை ரூ. 6.95 கோடி

பென்னெலி நிறுவன மேனேஜிங் டைரக்டர் விகாஷ் ஜஹபக்ஸ் தெரிவிக்கையில், இந்திய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்குவதே பென்னெலி நிறுவனத்தின் நோக்கமாகும். இதன் தொடர்ச்சியாக குறிப்பட்ட இடைவெளியில் சர்விஸ் செய்து கொள்பவர்களுக்கு, சர்விஸ் கட்டணத்தில் இருந்து 34 சதவிகிதம் வரை டிஸ்கவுன்ட் வழங்குகிறது. இதுமட்டுமின்றி ஐந்து ஆண்டு அளவில்லா கிலோ மீட்டர் வாரண்டிகளும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும். இந்தியாவில் முதல் முறையாக அறிமுகமாகும் சூப்பர்பைக் பிராண்டாக பென்னேலி பைக்கள் இருந்து வருவதோடு, அளவில்லா நன்மைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

Benelli 302R

You May Like:ரூ. 1.11 கோடி விலையில் அறிமுகமானது ஜாகுவார் XJ50

பென்னெலி இந்தியா நிறுவன சிஇஓ கிருஷ்ணா மல்கே தெரிவிக்கையில், எங்கள் நிறுவனம் சார்பில் தொடர்ச்சியாக புதிய மாடல்களின் பைப்லைன்களை அறிமுகம் செய்யப்படுள்ளது. இதுமட்டுமின்றி நாங்கள் இந்தியாவில் டீலர்ஷிப்களை விரிவுபடுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறோம். வரும் 2019ம் ஆண்டின் மார்ச் மாத்தில் 40 டீலர்ஷிப்களாக விரிவுபடுத்த உள்ளோம் என்றார்.

டிஆர்கே 502 மற்றும் டிஆர்கே 502 X டூர்கள் வரும் 2019ம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பென்னெலி நிறுவன பைக்களான புக்கிங் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்ட நிலையில், டிஎன்டி 300, 302 ஆர் மற்றும் டிஎன்டி 600i போன்ற பைக்களை 10,000 ரூபாய் கொடுத்து புக்கிங் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்களின் டெலிவரி இந்த மாதத்தின் இரண்டாம் வாரத்தில் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

Benelli TNT 600i ABS

You May Like:கோலாலம்பூரில் காட்சிப்படுத்தப்பட்டது ஹோண்டா CR-V முஜென் கான்செப்ட்

இந்த பைக்களின் விலை குறித்து பென்னெலி நிறுவனம் இன்னும் முழுமையாக அறிவிக்கவில்லை. டீலர்ஷிப் விரிவாக்கம்,ஆப்டர் சேல்ஸ் சர்விஸ், ஐந்து ஆண்டு அளவில்லா கிலோமீட்டர் இன்சூரன்ஸ் மற்றும் டெலிவரி தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த பைக்களுக்கான முழுமையான விலை அறிவிக்கும் என்று தெரிகிறது. இந்த பைக்களின் அறிமுகம் விலைகளாக டிஎன்டி 300, 302 ஆர் பைக்களின் விலை முறையே 3.50 லட்ச ரூபாய் மற்றும் 3.70 லட்ச ரூபாய் என்றும், டிஎன்டி 600i பைக்களின் விலை 6.20 லட்ச ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.