எந்த பைக் வாங்கினால் எவ்வளவு ரூபாய் சேமிக்கலாம்? இந்த மாதத்திற்கான டிஸ்கவுண்ட் அறிவிப்பு

Kawasaki Z900
Save up to Rs 97,000

கவாசாகி Z900 மோட்டார் சைக்கிள்களை வாங்கி ரூ.97,000 வரை சேமிக்கலாம்

கவாசாகி Z900 மோட்டார் சைக்கிள் மாடல்களில் இரண்டு யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு தயாரக வைத்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்களில் ரூ.97,000 மதிப்பு கொண்ட உதிரி பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது, மோட்டர் சைக்கிளை வாங்குபவர்கள், ரூ.97,000 மதிப்பு கொண்ட உதிரி பாகங்கள், இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த உதிரி பாகங்களில் கிராஷ் புரேடைக்ஷன், சீட் கவ்ல் மற்றும் ஒரு பெரிய  அளவிலான விண்ட்ஸ்கிரின் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

Kawasaki Z1000
Save up to Rs 4.5 lakh

கவாசாகி Z1000 மோட்டார் சைக்கிள்களை வாங்கி ரூ.4.5 லட்சம் வரை சேமிக்கலாம்

Kawasaki Z1000 Bike News in Tamilகவாசாகி நிறுவனம்,  பெரும்பாலான 2017 மாடல் மோட்டார் சைக்கிள்களை பெரியளவு டிஸ்கவுண்ட் விலையில் விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. மேலும்,  இரண்டு கவாசாகி Z1000 மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்களுக்கு ரூ.4.5 லட்சம் வரை டிஸ்கவுண்ட் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.  இந்த மோட்டார் சைக்கிள்கள் 2017 ல் தயாரிக்கப்பட்டது என்றாலும், தற்போது பிராண்ட் நியூ மாடலாகவே விற்பனைக்கு வந்துள்ளது. Z1000 மோட்டார் சைக்கிள்கள், 1,042cc, நான்கு சிலிண்டர் மோட்டார், 142hp மற்றும் 111Nm டார்க்யூ கொண்டதாக இருக்கும். மும்பை மற்றும் டெல்லியில் இந்த மோட்டார் சைக்கிள்களுக்கான டிஸ்கவுண்ட் முறையே ரூ.4.5 லட்சம் மற்றும் ரூ.4 லட்சமாகவும் இருக்கும். பெங்களூர் மற்றும் கொல்கத்தாவில் இந்த மோட்டார் சைக்கிள்களுக்கான டிஸ்கவுண்ட் ரூ.2.5 லட்ச ரூபாயாக இருக்கும்.

TVS Apache RTR 160
Save up to Rs 7000

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 (முந்தைய ஜெனரேசன்), ஆர்டிஆர் 180 மோட்டார் சைக்கிள்களை வாங்கி ரூ.7000 வரை சேமிக்கலாம்

Apache RTR 160 Bike News in Tamilகொல்கத்தாவில் உள்ள டிவிஎஸ் டீலர்கள், ஜனவரி மற்றும் பிப்ரவரியில் தயாரிக்கப்பட்ட முந்தைய ஜெனரேசன் அப்பாச்சி ஆர்டிஆர் 160 மோட்டார் சைக்கிள்களை ரூ.5000 வரை டிஸ்கவுண்ட் விலையில்  இன்னும் விற்பனை செய்து வருகின்றனர். இதேபோன்று, அதே காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆர்டிஆர் 180 மோட்டார் சைக்கிள்களை ரூ.7000 வரை டிஸ்கவுண்ட் விலையிலும் விற்பனை செய்து வருகின்றனர்.

Suzuki Access 125
Save up to Rs 7000

சுசூகி அக்செஸ் 125 ஸ்கூட்டரை வாங்கி ரூ. 7,000 வரை சேமியுங்கள்

Suzuki Access 125 Bike News in Tamilசுசூகி அக்செஸ் 125 ஸ்கூட்டர்கள், அதிக செயல்திறன் கொண்ட ஸ்கூட்டர் என்ற நிலையை உறுதி செய்துள்ளதோடு, அதிக நேர்த்தியுடனும், பல்வேறு  வசதிகளுடனும்,  சிறந்த நம்பகத்தன்மை மற்றும் செயல்திறன் கொண்ட ஸ்கூட்டராக விளங்குகிறது. இந்தியாவின் மிகபெரிய விற்பனையாளரான சுசூகி நிறுவனம், டெல்லியில்  சுசூகி அக்செஸ் 125 ஸ்கூட்டர்களை வாங்குபவர்களுக்கு 4,500 ரூபாய் வரை கேஸ்பேக் வழங்குகிறது. இதுமட்டுமின்றி, டெல்லி, கொல்கத்தா மற்றும் சென்னையில் உள்ள கார்ப்பரேட் ஊழியர்களுக்கு கூடுதலாக 2,500 ரூபாய் கேஸ் டிஸ்கவுண்ட் வழங்கபடும் என்றும் சுசூகி  நிறுவனம் அறிவித்துள்ளது.

TVS Jupiter
Save up to Rs 4300

டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டரை வாங்கி 4.300 வரை சேமியுங்கள்

TVS Jupiter Bike News in Tamilகடந்த 2013ம் ஆண்டில், டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து, ஸ்கூட்டர் மார்க்கெட்டில் நுழைந்தது டிவிஎஸ் நிறுவனம். ஆண்களை வாடிக்கையாளர்களை குறிவைத்தே அறிமுகம் செய்யப்பட்ட  இந்த ஜுபிடர் ஸ்கூட்டரை சென்னை மற்றும் டெல்லியில் ரூ. 3,000  டிஸ்கவுண்ட்டில் வாடிக்கையாளர்கள் வாங்கி கொள்ளலாம். இத்துடன் பேடிஎம் டிஸ்கவுண்ட் ரூ.1,300-யும் சேர்த்து, வாடிக்கையாளர்கள் மொத்தமாக ரூ. 4.300 வரை சேமிக்கலாம். இந்த டிஸ்கவுண்டுகளுடன் பெங்களூர் டீலர்கள், ஸ்கூட்டரின் உதிரி பாகங்களுக்கு 30 சதவிகித டிஸ்கவுண்டையும் வழங்க உள்ளனர்.

Honda Navi
Save up to Rs 5000

ஹோண்டா நாவி ஸ்கூட்டரை வாங்கி ரூ.5,000 வரை சேமிக்கலாம்

Honda Navi Bike News in Tamilகடந்த 2016ம் ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் ஹோண்டா நாவி முதல் முறையாக காட்சிபடுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், எதிர்பாராதவிதமாக, தற்போது ஒயில்ட்கார்டு என்ட்ரி மூலம் விற்பனைக்கு வந்துள்ளது. தற்போது மேம்படுத்தப்பட்ட மாடலாகவும், சில வசதிகள் இணைக்கப்பட்டும் ஹோண்டா நாவி ஸ்கூட்டர் வெளியாகியுள்ளது. ஹோண்டா நாவி பழைய வெர்சன் ஸ்கூட்டர்களுக்கு, டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னை டீலர்ஷிப்கள், ஸ்டுடண்ட் டிஸ்கவுண்ட்டாக ரூ.5,000 வழங்குகிறது. இந்த டிஸ்கவுண்டை பெற விரும்புவர்கள் தங்கள் ஸ்டுடண்ட் அடையாள அட்டையை காட்டி பெறலாம்.

Triumph bikes
Save up to Rs 25,000

ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள்களை வாங்கி ரூ.25,000 வரை சேமிக்கலாம் 

தங்களிடம் எந்த வகையான ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்களுக்கு ரூ. 25,000 மதிப்பு கொண்ட உதிரி பாகங்களை இலவசமாக அளிக்க உள்ளதாக மும்பையில் உள்ள ட்ரையம்ப் டீலர்ஷிப் தெரிவித்துள்ளது.

Bajaj Pulsar RS200
Save up to Rs 5000

பஜாஜ் பல்சர் RS200 மோட்டார் சைக்கிள்களை வாங்கி ரூ.5,000 வரை சேமிக்கலாம்

2017-ம் ஆண்டு மாடல் RS200 மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.5,000 டிஸ்கவுண்ட் வழங்க உள்ளதாகவும், இரண்டு  மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே விற்பனை உள்ளதால், இந்த மோட்டார் சைக்கிள்-ஐ வாங்க விரும்புபவர்கள் தங்களை உடனடியாக தொடர்பு கொள்ளலாம் என்று பஜாஜ் நிறுவனத்தின் மும்பை டீலர் அறிவித்துள்ளது.

Bajaj CT100
Save up to Rs 9000

பஜாஜ் சிடி 100 கிக் ஸ்டார்ட் அலாய் மோட்டார் சைக்கிளை வாங்கி ரூ.9000 வரை சேமிக்கலாம்

பல்வேறு டிஸ்கவுண்ட் வழங்கி வரும் பஜாஜ் நிறுவனம், தங்களது மிகவும் சிறந்த மோட்டார் சைக்கிளாக விளங்கும்  பஜாஜ் சிடி 100 (கிக் ஸ்டார்ட் அலாய் வீல் வைப்ரண்ட்) மோட்டார் சைக்கிள்களுக்கு பெரியளவில் டிஸ்கவுண்ட்டாக ரூ.9000 வரை டிஸ்கவுண்ட்-ஐ அறிவித்துள்ளது. ரூ. 41,000 விலையில் விற்பனை செய்யப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள், தற்போது  ரூ. 32,000 விலையில், சராசரியாக 25 சதவிகித சேமிக்கும் விலையில் (டெல்லியில் எக்ஸ் ஷோரூம் விலை) விற்பனை செய்யப்படுகிறது.

Other discounts
Save up to Rs 2500

மற்ற டிஸ்கவுண்ட்கள் மூலம் ரூ. 2,500 வரை சேமிக்கலாம்

சுஸுகி, டி.வி.எஸ், ஹீரோ, ஹோண்டா, யமஹா, பஜாஜ், யுஎம் மற்றும் மஹிந்திரா உள்ளிட்ட பெரும்பாலான மோட்டார் சைக்கிள்களை பேடிஎம் மூலம் பணம் செலுத்தி வாங்கி  ரூ. 1,000 முதல் 2,500 வரையிலான கேஸ்பேக் பெறலாம்.