அனைத்து வகையான மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கான சிறந்த மோட்டார் சைக்கிள்

Bike Rider Tamil News

அனைவரும் ஒரே விதமாக மோட்டார் சைக்கிள் பொருத்தமாக இருக்காது. ஸ்கிரம்பளர் (Scrambler) வகை பைக்குகள் நகர்ப்புறகளுக்கான பைக்காகும். இதன் கிரியேடிவ் டிசைன், நீண்ட தூரம், நேராகவும், வளைவுகள் கொண்ட சாலையில்  பயணம் மேற்கொள்ளும் அட்வென்ச்சர் பயணம் செய்பவர்களை இந்த வகை பைக் மகிழ்விக்காது. Hwat வகை பைக்குகள் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

வார இறுதி நாட்களில் பயணம் செய்பவர்களுக்கு…

bmw-R-nineT-scrambler

பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி ஸ்கிரம்பளர் (BMW R nineT Scrambler)

ஸ்கிரம்பளர், டுக்கடி ஸ்கிரம்பளர் போன்று பிரகாசமானவையோ அல்லது மலிவான ட்ரையம்ப் ட்ருக்ஸ்டன் போன்றதோ அல்ல. பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி ஸ்கிரம்பளர், 486 பவுண்ட் எடையுடன், லேசான, குறுக்கிய மற்றும் அகலம் அற்றதாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த ஆண்டின் ஆர் நைன் டி பைக்குகளை விட நேர்த்தியான பராம்பரியத்தோடும், எளிதாக ரேஸ் செல்லும் வகையிலும், ஜெர்மன் தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிளாசிக் பிஎம்டபிள்யூ, காற்றை குளுமையாக்கும் வசதியுடன், தடையான வடிவிலும், 1,170 CC பாக்ஸர் இன்ஜின் கொண்டதாக இருக்கும். இந்த இன்ஜின் 110 குதிரை திறன் மற்றும் 86 பவுண்ட் சுழற்சி திறன் கொண்டது. இதன் மூலம் மணிக்கு 125 மைல் வேகத்தில் எளிதாக பயணம் செய்ய முடியும்.

இரட்டை புகை வெளியேற்றும் குழாய்களுடன் இதை வடிவமைத்துள்ள பிஎம்டபிள்யூ நிறுவனம், பிரேம்களுடன் கூடிய ஸ்கிராப்ளர் சீட், ஆர் நைன் டி மாடலை விட உயரமாக இருக்கும்படி வடிவமைத்துள்ளது. இந்த குழாய்களுடன் இரண்டு முன்புற புகை வெளியேற்றும் குழாய்களும், கிளாசிக் ஸ்கிராப்ளர் பைக்கில் உள்ளது போன்று  அழகாக பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் ஓட்டுவதற்கு வசதிக்காக இருக்கும்.

இந்த பைக்கின் விலை: ரூ.14,40,000

 

ஸ்டைலாகவும், மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க விரும்புபவர்களுக்காக

ஹஸ்ஸ்கர்னா பிளாக் அரோ 401 (Husqvarna Svartpilen 401)

நடுத்தர அளவுடன், ஆரம்ப நிலை ரேஸ்க்கு செல்வபர்களுகாக வடிவமைக்கப்பட்டது ஹஸ்ஸ்கர்னா பிளாக் அரோ 401. இது 115 ஆண்டு பழமையான வரலாறு கொண்ட பைக். இதேபோன்ற பைக்குகள் 1950களில் உருவாக்கப்பட்டன. இந்த பைக் 330 பவுண்ட் எடை கொண்டதோடு, 414 பவுண்ட் எடை கொண்ட டுக்கடி ஸ்கிராப்ளருடன் ஒப்பிட்டப்பட்டுள்ளது. மேலும், தரையிலில் இருந்து 33 இன்ச் உயரத்தில் இதன் சீட் அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இந்த பைக், 75 இன்ச், ஸ்போக்ஸ் உடன் கூடிய வீல்கள் மற்றும் அதிக பிடிமான திறன் கொண்ட டயர்களுடன் ஸ்டைலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிங்கிள் சிலிண்டர், நான்கு ஸ்டிரோக், 373 CC இன்சின் மற்றும் ஆறு கியர்களுடன் நவீனமயமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் விலை: ரூ. 2,80,000

 

நண்பருடன் பயணம் செய்ய விரும்புபவர்களுக்காக…

டுகாட்டி எஸ்டைவில் எஸ் (Ducati xDiavel S)

பன்முக திறன் கொண்ட இந்த பைக்கின் தொழில்நுட்பம் மற்றும் செயல்திறன் டுகாட்டி சூப்பர் பைக் போன்று இருக்கும். ஆனாலும், இரண்டு பேர் பயணிக்கும் வகையிலேயே டிசைன் செய்யப்பட்டுள்ளது. 152 குதிரை திறன் கொண்ட இந்த பைக், உலகிலேயே மிகவும் வேகமான, நவீன தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்ட பைக் ஆகும். இதில், சிறப்பு என்னவென்றால், வேகமாக இயக்க தேவையான  வசதிகள் செய்யப்பட்டுள்ளது தான். இரண்டு பேர் பயணம் செய்ய ஏற்ற இந்த பைக்கில் பயணம் செய்யும் இரண்டு பேரும் கால் வைத்து கொள்ள வசதிக்காக நான்கு வகையாக கால் வைக்கும் இடங்களும், ஐந்து வகையான சீட்கள், மூன்று வெவ்வேறு வடிவிலான ஹென்டில் பார்கள், பயணம் செய்பவர்கள் தேவைக்கேற்ப சாதரான மற்றும் குஷன் சீட் பொருத்தும் வசதிகளும்  இடம் பெற்றுள்ளது.

டுகாட்டியில் பாஷ் ஸ்டோர்ஸ் மற்றும் ஏபிஎஸ், குரூஸ் கண்ட்ரோல், ஹேண்ட்ஸ் ஃப்ரீ மற்றும் பேக்ல்ட் ஹேண்ட்பார்ன் சுவிட்சுகள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த பைக்கின் விலை: ரூ.16,48,000

 

வித்தியாசமான பைக் பிரியர்களுக்காக… 

மோட்டோ கேஸ்ஸி  வி7 3 ஸ்டோன் (Moto Guzzi V7 III Stone)

ஈவான் மெக்ரிகெரின் பிராண்ட் பைக்கை விரும்புபவர்களுக்கு இந்த பைக் வித்தியாசமான பைக்காக இருக்காது. கடந்த 1972ம் ஆண்டில் மோட்டோ கேஸ்ஸி வி7 ஸ்போர்ட் பைக் ஈவான் மெக்ரிகெரின் நிறுவனம் வெளியிட்டது. இந்த பைக்கின் முக்கிய அம்சமே, எளிதான இன்ஜின் வடிவமைப்பு மற்றும் எளிதாக கையாளும் முறையேயாகும். தற்போது நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள வி7 பைக்குள், 1970-களில் வடிவமைக்கப்பட்ட ரேஸிங் பைக்குகளுக்கு பெருமை சேர்க்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வகை பைக்குகள் சில ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியின் வெளியிடப்பட்ட காம்பலாங்கா பைக்குகள் போன்றே உள்ளது. மோட்டோ கேஸ்ஸி  வி7 3 ஸ்டோன் பைக்கின், அழகிய வடிமைப்பு, ஹெல்டில் பார்கள், வளைவான முன்பு அமைப்பு மற்றும் இதன் டயல் டிசைன் மற்றும் புகையை வெளியிற்றும் இரட்டை சிலிண்டர்கள் போன்றவை வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 744CC இன்ஜின் திறனுடன், 416 பவுண்ட் எடையுடனும், 52 குதிரைத்திறன் கொண்டு விளங்குவதே இந்த பைக் இத்தாலியில் சிறந்த பைக் என்ற பெருமையை பெற காரணமாக அமைந்தது.

இந்த பைக்கின் மதிப்பிடப்பட்ட விலை: ரூ.700,000

 

எளிதான பயணத்தை விரும்புவர்களுக்காக…

இந்திய ஸ்கவுட் பாபர் (Indian Scout Bobber)

ஸ்கவுட் பாபர் பைக்குகள் அனைத்தும் ஸ்டைலாக இருக்கும் வகையில் உருவாகப்பட்டுள்ளது. 100 குதிரைத்திறன், ஆறு வேகம் கொண்ட இந்த பைக் 1,133CC இன்ஜின் மற்றும் 72 பவுண்ட் சுழற்சி திறன் கொண்டது. குறைந்த அளவிலான முன்பக்க சஸ்பென்சன், தேவைக்கு ஏற்ற வகையில் முன்புற வடிவமைப்பு மற்றும் ஸ்ட்ரீட் டிராக்கர் ஹேண்டில்பார் இடம் பெற்றுள்ள இந்த பைக்கின் சீட் மிகவும் குறைந்த அளவில் அதாவது தரையில் இருந்து 25.6 இன்ச் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளதால், எளிதான பயணத்தை விரும்புவர்களுக்கு சிறந்த பைக்காக இருக்கும்.

இதன் விலை: ரூ.13,00,000