புதிய டிசைனில் பிஎம்டபிள்யூ 9சென்டா

BMW 9Cento News

பல்வேறு புதிய வசதிகளுடன் வெளிவர இருக்கும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 9சென்டா பைக் குறித்த விபரங்களை இத்தாலின் லேக் கோமோ மாகாணத்தில் உள்ள கோன்கோர்சோ டி எல்கன்ஸா வில்லா டி ஈஸ்டேவில் (Concorso d’Eleganza Villa d’Este) வெளியிட்டது பிஎம்டபிள்யூ நிறுவனம். 9 சென்டா பிஎம்டபிள்யூ நிறுவன வடிவமைப்பு குழுவினரால், தங்கள் நிறுவனத்திலேயே வடிவமைக்கப்பட்ட பைக் ஆகும்.

பிஎம்டபிள்யூ 9சென்டா டிசைன், ரேசிங், அட்வென்சர் மற்றும் தொலைத்தூர பயணம் மேற்கொள்ளும் வசதிகள் கொண்ட மூன்று மோட்டார் சைக்கிள்களின் டிசைன்களின் கலவையாகும் என்று 9சென்டா குறித்து பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த பைக்கின் இன்ஜின் அமைப்பு, பிஎம்டபிள்யூ எஃப் 850 ஜிஎஸ் பைக்கில் உள்ளது போன்ற பேர்லல்-டுவின் இன்ஜினாக இருந்த போதும், அதிலிருந்து சற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது

பிஎம்டபிள்யூ 9சென்டா வடிவமைப்பின் முக்கிய சிறப்பு அம்சமே, வாகனம் ஓட்டுபவரின் இருக்கை வடிவமைப்பேயாகும். இந்த இருக்கையை கீழ்புறமாக ஒரு மின்காந்தம் மூலம் இணைக்க முடியும். இதை வாகனம் ஓட்டுபவர் எளிதாக பொருத்தவோ, அகற்றவோ முடியும். மேலும் வாகனம் ஓட்டுபவர்கள் அமர்ந்து செல்ல அதிகளவு இடம் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

வாகனத்தை ஒட்டி செல்பவர் இருக்கைக்கு கீழ் வால் பகுதியில் எல்.ஈ. டில் லைட் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ் மாடலில் உள்ளதை போன்று மோட்டார் சைக்கிளின் அதிகபட்ச எடையை காட்டும் அகலமான திரையும் வடிவமைக்கப் பட்டுள்ளது.

இந்த பைக் கார்பன் ஃபைபர் வலுவூட்டப்பட்ட பிளாஸ்டிக் பிரேம் மற்றும் இருக்கைக்கு பின்புறம் லேசான அலுமினிய கேரியர் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள சஸ்பென்சன் வசதிகள் தொலை தூர பயணங்களுக்கு ஏற்ற வகையில் சிறப்பாகவும், வசதியாகவும் இருக்கும்.

இந்த பைக் குறித்த எந்த தொழில்நுட்ப குறிப்பையும் பிஎம்டபிள்யூ நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. மேலும் இந்த பைக் தயாரிப்பு நிலையில் உள்ளது குறித்த தகவலையும் அந்த நிறுவனம் வெளியிடவில்லை.

ஆனால் பிஎம்டபிள்யூ மோட்டாரட் இந்த ஆண்டு இறுதியில் EICMA 2018 மாதிரியை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பைக்கை வெளியிடும் முன்பே, மார்க்கெட்டில் இருந்து வரும் இந்த பைக்கை குறித்த தகவல்களை பெற்று, அதற்கேற்றவாறு எதிர்காலத்தில் இந்த பைக்கில் சில மாற்றங்களை செய்வது குறித்து முடிவெடுக்க உள்ளதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.