ரூ 85 லட்சம் விலையில் BMW HP4 RACE

BMW HP4 Race Tamil News

பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் HP4 RACE பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் விலை 85 லட்ச ரூபாய் (இந்தியாவில் எக்ஸ் ஷோரூம் விலை).

சாலைகளுக்கு ஏற்றதாக இல்லாமல் ரேஸ் டிரக்கில் பயணம் செய்ய ஏற்ற வகையிலேயே இந்த வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது. மோட்டர்சைக்கிளின் உலகில்  உயர்தரம் கொண்ட ஸ்பெக் பிரேக்ஸ், சஸ்பென்சன் மற்றும் எலெக்ட்ரானிக் போன்றவை இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது.

HP4 RACE வகை பைக்களின் என்ஜின்கள் 215hp திறன், 13,900rpm மற்றும் அதிகபட்ச டார்க்யூ 10,000rpm-ல் 120Nm ஆக இருக்கும்.

ஒவ்வொரு 5,000 கிலோ மீட்டருக்கும் இந்த பைக்கை முழுவதுமாக ரிபில்ட் செய்ய வேண்டும் என்றும், இதில் இடம் பெற்றுள்ள என்ஜின், கியர்பாக்ஸ் ஆகியவை ரேசிங் பைக்குகளில் உள்ளதை போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்த பைக் சிக்ஸ்-ஸ்பீட் கொண்டதோடு, குறைந்த விகித டிரான்ஸ்மிஷன்களுடன் ஆப்டிமைஸ்டு விகிதம் மற்றும் பல்வேறு செகண்டரி விகிதங்களில் பயணிக்கும். இதற்காக பல்வேறு வகைகளை பின்னிஅன்ஸ் மற்றும் செயின் ஸ்ப்ரோகேட்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

உலகளவில் HP4 RACE பைக்கை தயாரித்த முதல் நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ள பிஎம்டபிள்யூ நிறுவனம், இந்த பைக்கின் மெயின்பிரேம் முழுவதுமாக கார்பன் பைபர் மூலம் உருவாக்கியுள்ளது. இந்த கார்பன் பைப்ரின் எடை 7.8kg மட்டுமே. இந்த பைக்கின் முன்புற வீல்களும் கார்பன் பைபர் கொண்டே உருவாகப்பட்டுள்ளது. இதனால் பைக்கின் எடையில் சரசரியாக 30 சதவிகித எடை குறைக்கப்பட்டுள்ளது. அதிகளவில் கார்ப்பன் பைபப்ர் பயன்படுத்தியுள்ளதால், இந்த பைக்கின் எடை சாதாரண பைக்கின் எடையான 208kg-ல் இருந்து 171kg-ஆக குறைந்துள்ளது.

இதுகுறித்து பிஎம்டபிள்யூ தெரிவிக்கையில், இந்த பைக்கின் எடை குறைவாக உள்ளதால், தற்போது சூப்பர்பைக் வேர்ல்ட் சாம்பியன்ஷிப்களில் பயன்படுத்தப்படுகிறது. MotoGP ரேஸ்களில் கலந்து கொள்ள அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் படி இந்த பைக்கின் சிறிது எடை அதிகமாக உள்ளதால் அந்த போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை என்று கூறியுள்ளது.

புதிய  HP4 RACE பைக்குகள் சிறந்த சஸ்பென்சனை வழங்குகிறது. இந்த பைக்கை Ohlins FGR 300 upside-down fork மற்றும் Ohlins TTX 36 GP monoshock  போன்ற ரோட்களில் ஒட்டி செல்லப்பட்டுள்ளது. இந்த பைக்கின் பிரேக்கும் சிறப்பாக உள்ளது, இதில் Brembo GP4 PR மோனோபிளாக் கிளிப்பர்ஸ்களுடன் கூடிய T-டைப் ஸ்டீல் பிரேக் டிஸ்க் பொருத்தப்பட்டுள்ளது. இது 6.75mm தடிமன் கொண்டதாக இருக்கும். முன்புறம்  Brembo ரேசிங் சிங்கிள் டிஸ்க் பிரேக்,  4-பிஸ்டன் WSBK பொருத்தப்பட்ட கிளிப்பர்களுடன் டைட்டானியம் பிஸ்டனும் பைக்கின் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பைக்குகள் Pirelli Diablo Superbike Slick SC2 என்ற சிறியளவிலான டயர்களுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி எலேக்ட்ரானிக் ரைடர் எய்ட்ஸ் (electronic rider aids) மற்றும் ரேஸ் டிராக்கில் செல்லும் போது தகவல்களை அளிக்கும் ஸ்கிரின் ஆகியவைகளும் பொருத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி HP4 RACE பைக்கில், வாகனத்தின் சத்தத்தை வைத்தே வேகத்தை கட்டுப்படுத்தும்  ‘audibly perceptible Dynamic Traction Control’, மற்றும் என்ஜின் வேகத்தை கட்டுபடுத்தி ரேஸ் துவங்கும் முன்பு வாகனத்தை இயக்கும் வசதி  (EBR) போன்றவைகளும் இடம் பெற்றுள்ளது.

இந்த் பைக் ஒரே ஒரு கலர் ஸ்கிமில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. மேலும், உலகளவில் மொத்தமாக 750 யூனிட் மட்டுமே விற்பனை செய்ய இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த பைக்கின் விலை 85 லட்ச ரூபாயாகும். (இந்தியாவில் எக்ஸ் ஷோரூம் விலை). டுக்காட்டியின் Panigale 1299 Superleggera பைக் இந்தியாவில் 1.12 கோடி ரூபாய்க்கு (டெல்லியில் எக்ஸ் ஷோரூம் விலை) விற்பனை செய்யப்படுவதால், HP4 RACE-ன் விலையில் பேரம் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.