பிஎம்டபிள்யூ ஜி310 ஆர், பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் வாகனங்களுக்கான முன்பதிவு தொடங்கியது.

BMW G310GS Tamil News

பிஎம்டபிள்யூ ஜி310 ஆர், பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் இரண்டு பைக்குகளும், இன்னும் ஒரு மாத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது.

இந்நிலையில், பிஎம்டபிள்யூ ஜி310 ஆர், பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்குகளுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டு விட்டதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் 50 ஆயிரம் ரூபாய் செலுத்தி இந்த பைக்குகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்தியாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிஎம்டபிள்யூ நிறுவன டீலர்களிடமும், பிஎம்டபிள்யூ இணையதளம் மூலம் ஆன்லைனிலும் இந்த முன்பதிவை செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களில், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படியில் பைக் டெலிவரி செய்யப்படும் என்று பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிவித்துள்ளது.

பிஎம்டபிள்யூ ஜி310 ஆர், பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்குள் இந்தியா சாலைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இந்த பைக்குகள் அதிகளவில் விற்பனையாகும் என்று  பிஎம்டபிள்யூ குழுமத்தின் இந்தியா அதிகாரி விக்ரம் பவாஹ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டில்  பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் மற்றும் 2016ல் ஜி310 ஜிஎஸ் பைக்குகளை அறிமுகம் செய்தது. இந்த் இரண்டு பைக்களும் இந்தியாவின் ஓசூரில் உள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவத்தில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. வெளிநாடு மார்க்கெட்டில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த பைக்குகள், விற்பனை மற்றும் சர்விஸ் சேவைகளை அதிகரிக்கும் நோக்கிலேயே இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக்கின் விலை 2.85 லட்ச ரூபாயாகவும்,  (ஷோரூமுக்கு முந்தைய விலை),  பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக்கின் விலை 3.5 லட்ச ரூபாயாகவும் (ஷோரூமுக்கு முந்தைய விலை) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ ஜி310 ஆர், பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் இரண்டு பைக்களை டெல்லி, மும்பை, புனே, சென்னை, பெங்களூரு, அகமதாபாத் மற்றும் கொச்சி ஆகிய இடங்களில் உள்ள டீலர்களிடம்  சர்விஸ் செய்து கொள்ளலாம். இந்த பைக்குகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் கொல்கத்தா மற்றும் சண்டிகர் டீலர்ஷிப்கள் புதிய பைக்குகளுக்கான புக்கிங்கை மேற்கொள்வார்கள். இதுமட்டுமின்றி பிஎம்டபிள்யூ பைனான்சியல் சர்விஸ் இந்தியா நிறுவனம், இந்த பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்களின் வசதிக்காக, பல்வேறு வகையில் வடிவமைக்கப்பட்ட மற்றும் லோன்களை வழங்க முன்வந்துள்ளது.