அதிவேகமான மோட்டார் சைக்கிள் சாதனையை முறியடித்து பிஎம்டபிள்யூ எஸ் 1000

ஹண்டர் சில்ஸ் ரேசிங் குழுவினர் அதிவேகமாக பயணம் செய்து, அதிகாரப்பூர்வமற்ற புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளனர். பிஎம்டபிள்யூ எஸ் 1000 மோட்டார் சைக்கிளை பயண்படுத்தி இந்த சதானையை இவர்கள் படைத்துள்ளனர். 1,000cc, நான்கு சிலிண்டர் கொண்ட இந்த மோட்டார் சைக்கிள், அதிவேகமாக, அதாவது 242mph வேகத்தில் பயணம் செய்து, இந்த சாதனையை படைத்துள்ளது.

You May Like:செம்படம்பர் 1 முதல் கார், பைக்களின் விலை உயர உள்ளது ஏன் தெரியுமா?

இந்த மோட்டார் சைக்கிளை ஒட்டி சென்ற எரின் சில்ஸ், இதற்கு முன்பு மறைந்த அவரது கணவர் ஆண்டி சில்ஸ் படைத்திருந்த 221mph வேக சாதனையை, 2013-இல் போன்னேவில்வில் உல்ட் பிளாட்ஸில் நடந்த போட்டியில் முறியடித்திருந்தார்.

இந்த குழுவினர் பொலிவியாவில் உள்ள ஐயுனி நகரை அடைவதற்கு முன்பு பல்வேறு சவால்களை சந்தித்துள்ளனர். இந்த குழுவினர், முக்கியமான உபகரணங்கள் மற்றும் முக்கியமான பொருட்கள் ஏற்றி சென்ற கன்டெய்னர்கள் எடுத்து செல்ல தாமதமானதால், இவர்கள் தங்கள் சாதனை இலக்கை அடைய இரண்டரை நாட்கள் தாமதமானது. இவர்கள் இந்த சாதனையை முடிக்க, ஆறு நாட்கள் போதுமானதாக இருக்கும் என்று முன்பே திட்டமிட்டு இருந்தனர்.


பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


இதுமட்டுமின்றி உலர்ந்த ஏரிகள், முதல் நாளிலேயே அவர்களுக்கு சோதனைகள் தொடங்கியது, அவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிளின் இன்ஜின்கள் சேதம் அடைந்ததுடன் பெரியளவில் எலேக்ட்ரானிக் பாதிப்பும் ஏற்பட்டது.

இந்த குழுவில் இடம் பெற்ற மெக்கானிக்கல், இந்த பாதிப்புகளை வேகமாக சரி செய்து, இன்ஜின்களை மீண்டும் உருவாக்கி, காலக்கெடுவுக்குள் சாதனையை அடைய உதவினர். S1000RR மோட்டார் சைக்கிள்களை தனியாக பராமரித்து வந்த அவர்கள், அதை, முந்தைய சாதனையை முறியடிக்க தயார் செய்தும் கொடுத்துள்ளனர்.

You May Like:மாஸ்கோ சர்வதேச மோட்டார் ஷோவில் வெளியிடப்பட்டது ரெனால்ட் அர்கானா கூபே-கிராஸ்ஓவர்

பிஎம்டபிள்யூ மோட்டார் சைக்கிள்கள் அதிகவேகாக மோட்டார் சைக்கிள் என்ற சாதனையை 242mph வேகத்தில் பயணம் செய்து படைத்துள்ளது. துரதிருஷ்டவசமாக இந்த மோட்டார் சைக்கிளால் FIM ரெகார்ட் புத்தகத்தில் இடம் பிடிக்க முடியவில்லை, இருந்த போதும், 229mph வேகத்தில் இரண்டு முறை சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.