உலகிலேயே அதிக ஆற்றல் கொண்ட மோட்டார் சைக்கிளாக தயாரிக்கப்பட்டு வரும் டுகாட்டி பானிகேல் V4R மோட்டார் சைக்கிள்கள் தற்போது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
You May Like:ரூ. 7.44 லட்ச ரூபாயில் அறிமுகமானது புதிய 2018 மாருதி சுசூகி எர்டிகா
டுகாட்டி பானிகேல் V4R இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்களின் இந்திய விலை 51.87 லட்ச ரூபாயாகும் (எக்ஸ் ஷோரூம் விலை).
அதிக விலை கொண்ட மோட்டார் சைக்கிள் என்ற போதும், இந்தியாவில் 5 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. ஆனாலும் மோட்டார் சைக்கிள்களை விரும்பும் வாகன ஒட்டிகளின் ஷாப்பிங் லிட்டில் டுகாட்டி பானிகேல் V4R மோட்டார் சைக்கிள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். இந்த மோட்டார் சைக்கிள்களுக்கான புக்கிங் வரும் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. மேலும் இந்த மோட்டார் சைக்கிள்களுக்கான டெலிவரி வரும் 2019ம் ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்கி, 2019ம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் நிறைவு பெற உள்ளது.
You May Like:ரூ. 84,578 விலையில் அறிமுகமானது 2019 டிவிஎஸ் டிவிஎஸ் அப்பாச்சி RTR 180
டுகாட்டி பானிகேல் V4R மோட்டார் சைக்கிள் குறித்து பேசிய டுகாட்டி நிறுவன மேனேஜிங் டைரக்டர் செர்கி கானோவாஸ், இந்தியாவில் இந்த மோட்டார் சைக்கிள்களை ரைடு செய்ய தேவையான வசதிகள் உள்ளன. நான் சமீபத்தில் நடந்த தேசிய கப் ரைடில் முதல் ஆளாக பங்கேற்றேன்.
You May Like:இந்தியாவில் புதிய எஸ்யூவி கார்கள் அறிமுகத்தை உறுதிபடுத்தியது ஸ்கோடா
சர்வதேச அளவில் டுகாட்டி நிறுவனத்தின் ரேஸிங் மோட்டார் சைக்கிள் தயாரிப்புகளில் பானிகேல் V4R முக்கிய இடத்தை பெறும். டுகாட்டி பானிகேல் V4R மோட்டார் சைக்கிள்களின் ஸ்டைல், வசதிகள் மற்றும் திறமை போன்றவைகளே இதற்கு காரணமாகும். இந்தியாவில் டுகாட்டி பானிகேல் V4R மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைவதோடு, ரேஸிங் மோட்டார் சைக்கிள்களை விரும்புபவர்களுக்கு டுகாட்டி பானிகேல் V4R புதிய அனுவத்தை கொடுக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.
டுகாட்டி பானிகேல் V4 S உடன் தேவையான பாகங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள டுகாட்டி பானிகேல் V4R, சட்டபூர்வமான சாலையில் பயணம் செய்ய ஏற்றதாக இல்லை என்றபோதிலும் மோட்டார் சைக்கிள் இண்டஸ்ட்ரீஸ்களில் புதிய துவக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
You May Like:லம்போர்கினி யுரூஸ் ST-X கான்செப்ட் வெளியானது
டுகாட்டி பானிகேல் V4R மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் மிகவும் திறன் கொண்ட மோட்டார் சைக்கிளாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்கள் சட்டபூர்வமாக சாலையில் பயணம் செய்ய முடியாத WSBK பிரிவில் ரேஸ் மோட்டார் சைக்கிள்களாக உருவாகியுள்ளது. மேலும் இந்த மோட்டார் சைக்கிள், 1,103cc V4 இன்ஜிகளுக்கு பதிலாக, 998cc V4 டேஸ்மோஸிடிக் ஸ்டிராடால் R இன்ஜின்களை கொண்டிருக்கிறது. இது WSBK ஹோமோலோஜிடேசன் விதிகளுக்கு உட்பட்டதாக இருக்கும். இந்த இன்ஜின்கள் 221bhp மற்றும் 111Nm பீக் டார்க்யூ கொண்டதாக இருப்பதுடன் 6-ஸ்பீட் மெனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
998cc இன்ஜின்கள் லேசாகவும், பெரியளவிலான ஏர் இண்டெக் மற்றும் சிறப்பான செயல் திறன் கொண்டதாக இருக்கும். இந்த மோட்டார் சைக்கிள்கள், வழக்கமான V4 மோட்டார் சைக்கிள்களை விட அதிக வேகம் கொண்டதாக இருக்கும். மேலும் இந்த மோட்டார் சைக்கிள்களின் அதிகபட்ச வேகத்தில் 16,500rpm கொண்டதாக இருக்கும். V4 S மோட்டார் சைக்கிள்கள் 13,000 rpm கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like:முதல் முறையாக சூப்பர்கார் ‘SC18 ஆல்ஸ்டன்’-ஐ அறிமுகம் செய்தது லம்போர்கினி
கூடுதலாக, டுகாட்டி பானிகேல் V4R மோட்டார் சைக்கிள்களில் ஆப்சனலாக அக்ரபோவிக் ரேஸ் எக்ஸ்ஹாஸ்ட் சிஸ்டம் கிடைக்கிறது. இந்த சிஸ்டம் மூலம் 234 bhp திறன் வெளிப்படும். டுகாட்டி பானிகேல் V4R மோட்டார் சைக்கிள்கள் 172 kg எடை கொண்டதாகவும், V4 மற்றும் V4 S மோட்டார் சைக்கிள்களை ஒப்பிடும் போது டுகாட்டி பானிகேல் V4R மோட்டார் சைக்கிள்களின் எடை 2 kg குறைவாகவே இருக்கும்
புதிய டுகாட்டி பானிகேல் V4R மோட்டார் சைக்கிள்களுக்கான புக்கிங் இந்தியாவின் டெல்லி, மும்பை, புனே, அகமதாபாத், பெங்களுரூ, கொச்சி, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உள்ள டீலர்ஷிப்களில் தொடங்கப்பட்டுள்ளது.