டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் 1100 இந்தியாவில் அறிமுகமாகும் தேதி அறிவிக்கப்பட்டது

2018 Ducati Scrambler 1100 Bike News in Tamil

புதிய டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் 1100 மோட்டார் சைக்கிள்கள் வரும் 27ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று டுகாட்டி இந்தியா தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் வழக்கமாக தனது புதிய அறிமுகத்தை அறிவிப்பதை போன்று டுவிட்டரில் அறிவித்துள்ளது. அதிக செயல்திறன் கொண்ட ஸ்கிராம்ப்ளர் 1100, உயர்தரமான ஸ்கிராம்ப்ளர் குடும்பத்தை சேர்ந்த மாடலாகும்.

2018 Ducati Scrambler 1100 Bike News

சர்வதேச அளவில் டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் 1100 மோட்டார் சைக்கிள்கள், ஸ்டாண்டர்ட், ஸ்பெஷல், ஸ்போர்ட் என்று மூன்று வெவ்வேறு வகைகளில் கிடைக்கிறது. இந்த மூன்று வகைகளும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதோடு, இவற்றின் விலை 11 லட்ச ரூபாயாக இருக்கும் (எக்ஸ் ஷோரூம் விலை).

2018 Ducati Scrambler 1100 Engine

டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் 1100-கள், 1,079cc, எல்-டுவின் என்ஜின்களுடன், மான்ஸ்டர் 1100 உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினை எளிதாக இயக்கி விட முடியும், இது 85bhp ஆற்றலுடன் 7500rpm மற்றும் உச்சபட்ச டார்க்யூவில் 88Nm உடன் 4,750rpm-ஆக இருக்கும். இதுமட்டுமின்றி இதில் கம்ப்ரசிவ் எலெக்ட்ரானிக்ஸ் பேக்கேஜ் மற்றும் மூன்று ரைடிங் மோடுகளையும் கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி ஐந்து லெவல் டிராக்ஷன் கன்ரோல் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது. கூடுதலாக இதில், ABS முறையில் கண்ட்ரோல் படுத்தப்படும் இன்டிரியல் அளவு யூனிட் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது.

2018 Ducati Scrambler 1100 India Launch

டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் 1100, 803cc டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் போன்றே இருக்கும். ஆனால், இதில் கூடுதலாக அலுமினியம் பினிசிஷிங்களுடன் கூடிய இன்ஜின் கவர்கள், கிளட்ச் மற்றும் அல்டர்நெட் கவர், டுவின் எக்ஸ்ஹாஸ்டர்கள், பேரலல் பில்லியன் சீட்கள் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன், புதிய LCD இன்ஸ்டுரூமென்ட்பேனல்களுடன், ரைடிங் மோடு மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் குறித்த தகவல்கள் இடம் பெறும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின்னர் இந்த பைக்குள் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது.