ஹார்லி-டேவிட்சன் மூன்று புதிய மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்கிறது

வரும் 2020ல் Adventurer touring மாடல் உள்பட தனது மோட்டர் சைக்கிள்களை முழுவதுமான புதிய வகையில் மாற்றி அமைக்கப்பட்ட உள்ளதாக ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, மிடில்வெயிட் ஸ்ட்ரீட்பைட்டர் மற்றும் புதிய கஷ்டமைஸ்டு மாடல் என 2 புதிய மாடல்களையும் அறிமுகம் செய்ய உள்ளது. ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் தெரிவிக்கையில், புதிய மாடுல்ர் 500cc முதல் 1250cc மிடில்வெயிட் பிளாட்பார்மில் மோட்டர்சைக்கிள்களை உருவாக்க உள்ளதாகவும், மேலும் மூன்று வகைகளில் தயாரிக்கப்பட உள்ளது என்று கூறியுள்ளது.   ஹார்லி-டேவிட்சன் முதல் மாடலாக Adventurer touring மோட்டர் சைக்கிள், ஹார்லி டேவிட்சன் பேன் அமெரிக்கா 1250 ஆகும்.  இந்த பைக்குகளின் புகைப்படங்களை ஏற்கனவே ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனாலும் தயாரிப்பு நிலையில் இந்த மாடல்களில் சில மாற்றங்கள் இருக்கும். இது குறிப்பாக வசதிகள் மற்றும் டிசைனில் இருக்கலாம்.

இதுகுறித்து ஹார்லி-டேவிட்சன் நிறுவனம், “மோர் ரோடுஸ் டு ஹார்லி டேவிட்சன்” வளர்ச்சி திட்டங்களை வகுக்கும் போது வாடிக்கையாளர்களின் தேவையை புரிந்து கொண்டும், ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் 2027 நோக்கங்களை மனதில் கொண்டும் உருவாக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

 “ரோடுஸ் டு ஹார்லி டேவிட்சன்” திட்டம் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்வது, வாடிக்கையாளர்களுக்கான சேவையை விரிவு படுத்துவது மற்றும் டீலர்ஷிப் நெட்வொர்க்கை மேம்படுத்துவது போன்றவதை உள்ளடக்கியதாக இருக்கும். எளிதாவும், சிறிய மாற்றங்களுடனும் கொண்ட மோட்டர் சைக்கிள்களை ஆசிய மற்றும் பெரியளவிலான மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் ஹார்லி டேவிட்சன் வெளியிட்ட அறிவிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி முதல் எலெக்ட்ரிக்மோட்டார் சைக்கிளான ஹார்லி-டேவிட்சன் LiveWire வகைகள் வரும் 2019ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து மேலும் பல எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் மாடல்கள் 2022ல் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல்கள் லேசாகவும், சிறிய அளவிலும், புதிய வாகன ஓட்டிகளை கவரும் வகையிலும் இருக்கும். மேலும் ஹார்லி டேவிட்சன் தெரிவிக்கையில், இது வாடிக்கையாளர் அனுபவங்களை டீலர்களிடம் கொண்டு செய்யும். மேலும் குளோபல் இ.காமர்ஸ் அளிப்பவர்களுடனான உறவை மேம்படுத்தி புதிய ரீடைல் திட்டங்களை உருவாக்க உதவும், இதுசிறிய, நகர புறங்களில் உள்ள ஸ்டோர்பிராண்ட்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.