Battle of the Kings-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹார்லி-டேவிட்சன்

Harley Davidson

ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் மாற்றியமைக்கப்பட்ட பைக்குகளை உருவாக்கும் போட்டியை உலகவில் நடத்துவதில் புகழ் பெற்றது. இந்த போட்டியால் பிரபலம் அடைந்த இந்த நிறுவனம், இந்தாண்டு வரை இந்த போட்டியை இந்தியாவில் நடத்தவில்லை. இறுதியாக அமெரிக்காவை சேர்ந்த இந்த ஹார்லி-டேவிட்சன் நிறுவனம், Battle of the Kings போட்டியை இந்தியாவில் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் போட்டியில் இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள 10 ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் டீலர்ஷிப்பில் பணியாற்றும் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த போட்டியில் பங்கேற்க உள்ளவர்கள் தங்கள் கஸ்டமோஸ்டேஷன்களை 5 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் அமைக்க வேண்டும், இதுமட்டுமின்றி ஹார்லி-டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 அல்லது ஹார்லி-டேவிட்சன் ஸ்ட்ரீட் ராட் பைக்குகளை பயன்படுத்தி  Battle of the Kings போட்டியில் புதிய பைக்கை உருவாக்க கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 10 பைக்குகளும், பொது வாக்கெடுப்பு முறை மூலம் ஜூலை 23 முதல் தேர்வு செய்யப்படும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியா போட்டியாளர்கள் தவிர உலகில் உள்ள 250 ஹார்லி-டேவிட்சன்  டீலர்ஷிப்களை சேர்ந்தவர்களும் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளன. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து பங்கேற்று வெற்றி பெறும் பைக்குள் வரும் நவம்பர் 8 முதல் 11ம் தேதி வரை இத்தாலியின் மிலனில் நடக்கும் 2018 EICMA மோடார் சைக்கிள் ஷோவில் காட்சிபடுத்தப்பட்டு, இறுதி வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார்.. கடந்த ஆண்டு, வெற்றி பெற்ற 1,200cc ரோடுசட்டர்-ஐ அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட “பாம்டிராக்” பைக்கை  இத்தாலியின் ஹார்லி-டேவிட்சன் பெர்குஜியா தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.