இந்திய மார்க்கெட்டில் பயன்படுத்தப்பட்ட பைக்களுக்கான பிரிவில் நுழைகிறது ஹார்லி டேவிட்சன்

Harley-Davidson used bike segment

அதிகாரபூர்வ அறிமுகத்திற்காக, ஹார்லி டேவிட்சன் பைக்குகள் இந்தாண்டு துவக்கம் முதல் குறிப்பிட்ட சேல்ஸ் அவுட்லெட்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

குரூசர் பைக் தயாரிப்பில் உலகளவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்து வரும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம், இந்திய மார்க்கெட்டில் தங்கள் ப்ரீ-ஒன் பைக் பிரிவில் நுழைய உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக அதிகாரபூர்வ அறிமுகத்திற்காக, ஹார்லி டேவிட்சன் பைக்குகள் இந்தாண்டு துவக்கம் முதல் குறிப்பிட்ட சேல்ஸ் அவுட்லெட்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
Harley-Davidson Bikes

You May Like:நியூ-ஜென் போர்ச் காயென்னே கார்கள் அறிமுகம்; விலை ரூ.1.19 கோடி

அமெரிக்காவை மையமாக கொண்ட பைக் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே பயன்படுத்தபட்ட பைக்குகளில் 99 சதவிகித குவாலிட்டி செக் செய்த பின்னரே, தங்கள் பிராண்டில் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும். ஹார்லி-டேவிட்சன் ஒரிஜினல் பைக்குகள், ஓராண்டு வாரண்டியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதே அளவு வாரண்டி தங்கள் பிராண்டில் விற்பனை செய்யப்படும் பயன்படுத்தப்பட்ட பைக்குகளுக்கும் வழக்கப்படும். இதுமட்டுமின்றி வாடிக்கையாளர் தேவைக்கு ஏற்ப 2 அல்லது 3 ஆண்டு வாரண்டிகள் விரிவுபடுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹார்லி-டேவிட்சன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள இன்டிபென்டென்ட் டீலர்ஷிப்களிடம் 17 மாடல் பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த பைக்குகளின் விலைகள் 5.25 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாயாகும் (எக்ஸ் ஷோரூம் விலை).Harley-Davidson Street Rodஹார்லி நிறுவன பைக்குகள், டிரையம்ப் மற்றும் டுகாட்டி பைக்குகளுக்கு போட்டியாக இருக்கும். பயன்படுத்தப்பட்ட பைக்கள் விற்பனையை இந்திய மார்க்கெட்டில் துவக்க  உள்ளதாகவும், விண்டேஜ் பிராண்ட்கள் மூலம் இந்த விற்பனையை துவக்க உள்ளதாகவும்  ராயல் என்பீல்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.