மிகவும் விலையுயர்ந்த ஹார்லி-டேவிட்சன் FXDR 114 வெளியானது

Harley Davidson FXDR 114 Bike News in Tamil

இந்திய மோட்டார் சைக்கிள் மார்க்கெட்டில், தனது புதிய தயாரிப்பான 500cc ஹார்லி-டேவிட்சன் பைகளுக்கு அறிமுகம் செய்ய உள்ளதாக, அமெரிக்காவை சேர்ந்த மோட்டர் சைக்கிள் பிராண்டான ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. தற்போது, ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் அதிக ஆற்றல் கொண்ட FXDR 114 என்ற பெயருடைய மென்மையான மோட்டார் சைக்கிள்களை வெளியிட்டுள்ளது.

Harley Davidson FXDR 114 Dashboard

ஏற்கனவே மேம்படுத்தப்பட்ட CVO-களுடன் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த தொடங்கியுள்ள இந்த நிறுவனம் புதிய FXDR 114 மோட்டார் சைக்கிளின் டிசைன்களை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வடிவமைத்துள்ளது.

Harley Davidson FXDR Bike News

ஆர்ப்பாட்டமான ஸ்டைலுடன் கூடிய பவர் குரூஸர் என்று ஹார்லி நிறுவனத்தால் அழைக்கப்படும் இந்த மோட்டார் சைக்கிள், சாப்ட்டைல் பிளாட்பாரம் மற்றும் ஹார்லியின் மில்வாக்கி-எட்டு 114 இன்ஜினை கொண்டுள்ளது. முன்புறம் மற்றும் பின்புறங்களில் LED லைட்டிங்கள், கீலெஸ் இக்னேஷன் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்டுரூமென்ட் கன்சோல் ஆகியவையும் கொண்டுள்ளது. பல்வேறு அலாய் மற்றும் காம்போசிட் காம்போனேகளுடன் மொத்த எடையை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் ஹார்லி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Harley Davidson FXDR

இதுமட்டுமின்றி புதிய சப்-பிரேம் மற்றும் புதிய ஸ்விங்கிராம் போன்றவைகளும் பொருத்தப்பட்டுள்ளது. FXDR மோட்டார் சைக்கிளில், போர்க் மற்றும் மோனோஷாக், ரியர் சஸ்பென்ஷன் ஆகியவைகளும் உள்ளன. மிகவும் புதிய ஏர்-இன்டெக் பொருத்தப்பட்டுள்ளது. இது NHRA டிராக் பைக்களில் இருந்து கவரப்பட்டதாகும். இந்த மோட்டார் சைக்கிள்கள் 1,868CC இன்ஜின் ஆற்றலுடனும், இது 161Nm டார்க்யூவை உருவாக்கும்.

Harley Davidson FXDR Collections

மிகவும் அதிக விலை கொண்ட மோட்டார் சைக்கிளாக வெளியாகி உள்ள FXDR 114 மோட்டார் சைக்கிள்கள், அமெரிக்கா மார்க்கெட்டில் 21,349 டாலர் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் இந்த மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டால், தற்போதைய சாப்ட்டைல் விலையை விட அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள ஹெரிடேஜ் கிளாசிக் மோட்டார் சைக்கிள்கள் 20.12 லட்ச ரூபாய் விலையில்(எக்ஸ் ஷோரூம் விலை) விற்பனையாகி வருகிறது.