ரூ. 50,010 விலையில் வெளியானது 2018 ஹோண்டா ஆக்டிவா-i

Honda Activa I 2018 Tamil News

ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் 2018 ஹோண்டா ஆக்டிவா-i வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹோண்டா ஆக்டிவா -i வாகனத்தின் ரீடைல் விலை 50,010 (டெல்லியில் எக்ஸ்-ஷோரூம் விலை). இந்த வாகனத்தின் வரையறுக்கப்பட்ட விலை இதற்கு முந்தை ஸ்கூட்டர் விலையை ஒப்பிடும் போது அதிகமாகவே உள்ளது.

கடந்த 2013ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா ஆக்டிவா-i, பெண்களுக்கான ஸ்கூட்டராகவே இருந்தது. இந்நிலையில், ஹோண்டா நிறுவனம் 110cc ஸ்கூட்டர் விற்பனையில் பெரியளவிலான சாதனை படைத்த நிலையிலும், ஹோண்டா ஆக்டிவா -i விற்பனையில் பெரியளவில் சாதிக்கவில்லை, ஹோண்டா ஆக்டிவா விற்பனையால் இந்த வாகனத்தின் விற்பனை பாதிக்கப்பட்டது.

2018 ஹோண்டா ஆக்டிவா-i-ல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள்

இந்த புதிய வாகனம் கேண்டி ஜெசி புளு, இம்பிரியல் ரெட் மெட்டாலிக், லுஷ் மெஜந்தா மெட்டாலிக், ஆர்சிட் பெர்ப்ல் மெட்டாலிக் மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் ஆகிய ஐந்து கலர்களில் வெளியானது.  மற்ற ஸ்கூட்டர்களில் உள்ளதை போன்று ஹோண்டாவின் புதிய ஆக்சிவா-i வாகனத்திலும் போர்-இன்-ஒன் ஸ்டார்டிங் ஸ்விட்ச், சீட்டை திறக்க தனியாக மற்றொரு ஸ்விட்ச் போன்றவைகளும் இடம் பெற்றுள்ளது. மற்றொரு மாற்றமாக மெட்டாலிக் எக்ஸ்ஹாஸ்ட் மஃப்லெர், பிரண்ட் ஹுக் மற்றும் டுயல்-டோன் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் ஆகியவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டர்களில், மெக்கனிக்கல் ரீதியாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வழக்கமாக பழைய ஸ்கூட்டர்களில் உள்ளது போன்றே, 110cc மோட்டார், ஏர்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் மில், இது 8hp மற்றும் 9Nm டார்க்யூ-வை உருவாக்கும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டர் 90/100-10 வேகத்தில் செல்லும் டுயூப்-லெஸ் டயர்களை கொண்டது. பிரேக்கை பொறுத்த வரை ஆக்டிவா -i ஸ்கூட்டரில் ட்ரம் பிரேக் யூனிட்கள் இரண்டு வீல்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர், டிவிஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட், ஹீரோ பிளசர், யமஹா ரே இசட் மற்றும் சுசூகி லேட்’ எஸ் வாகனங்களுக்கு போட்டியாக வெளியிடப்பட்டுள்ளது.