டியோ 2018 பதிப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது ஹோண்டோ நிறுவனம்

HMSI Dio 2018 Tamil News

டியோ  2018 பதிப்பினை ஹோண்டோ மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனத்தின் விலை 51 ஆயிரத்து 292 ரூபாயாகும். (இது டெல்லி ஷோரூமுக்கு முந்தைய விலை)

டியோ 2018 ரக பைக்குகள்  9 நிறங்களிலும், ஸ்டாண்டர்ட் மற்றும் டீலக்ஸ் என்ற இரு வேறு வகைகளில் கிடைகிறது.

ஸ்டாண்டர்ட் பைக்குள்,  வைரண்ட் ஆரஞ்சு, பெர்ல் ஸ்போர்ட்ஸ் மஞ்சள், ஸ்போர்ட்ஸ்  ரெட், கேண்டி ஜாசி ப்ளூ, மேட்டி அச்சு கிரே மெட்டாலிக் நிறங்களிலும், டீலக்ஸ் பைக் வகைகள் டாஷில் மஞ்சள் மெட்டாலிக், மேட் மார்ஷல் கிரீன் மெட்டாலிக், பெர்ல் இக்னிஸ் பிளாக், மேட் அச்சை கிரேஸ் மெட்டாலிக் ஆகிய நிறங்களிலும் கிடைக்கும்.

வாடிக்கையாளர்களின் வசதிக்காக  4-இன்-1 லாக், சீட்டை திறக்கும் சுவிச், முன்பக்க ஹுக் மற்றும் பின்னால் செல்வதை கண்காணிக்கும் ஹுக் ஆகிய வசதிகளை வாகன தயாரிப்பாளர்கள் இதில் பொருத்தியுள்ளனர்.

மோட்டோ ஸ்கூட்டர் தற்போது மெட்டல் புழுதி பாதுகாப்பு கருவி பொருத்தப்பட்டே விற்பனை செய்யப்படுகிறது. டீலக்ஸ் வகைகளில், சிறப்பான பயணத்துக்காக புதிய மற்றும் முழுமையான டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மீட்டர்கள், எக்கோ ஸ்பீட் இண்டிகேட்டர் மற்றும் சர்விஸ் செய்ய வேண்டிய நாளை அறிவிக்கும் இண்டிகேட்டர் உள்ளிட்ட 3 பிரிவுகளை கொண்டதாக இருக்கும். இதுமட்டுமின்றி முதல் தரம் கொண்ட தங்க நிற மற்றும் பல்வேறு நிறங்களில் ரிம்களை அமைத்து கொள்ளும் வசதியையும் கம்பெனி அளிக்கிறது.

டியோ  2018 திறன் குறித்து பேசிய ஹோண்டா நிறுவன அதிகாரி யத்விந்தர் சிங் குலரியா, 15 ஆண்டுகால தயாரிப்பு அனுபவத்தில் டியோ  2018 உருவாக்கப்பட்டுள்ளது. இது இளைஞர்களுக்கான பைக் என்பதுடன் மிகவும் ஸ்டைலாகவும், புதிய டிஜிட்டல் மீட்டர், 3 வகை எக்கோ ஸ்பீட் இண்டிகேட்டர் மற்றும் சர்விஸ் செய்ய வேண்டிய நாளை அறிவிக்கும் இண்டிகேட்டர் ஆகியவைகளையும் கொண்டுள்ளது.

இந்த்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் ஸ்கூட்டராக விளங்கும் டியோ, இந்தியாவில் மட்டும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பைக்குளை இறக்குமதி செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது என்றார்.

டியோ  2018 ஹோண்டாவின் 110cc இன்ஜின், மைலேஜ் மற்றும் வேகத்துடன் மிகச்சரியாக ஒத்துழைக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. அணைத்து டியோ பைக்குகளிலும் புதிய LED ஹெட்லைட்கள் மற்றும் பொசிஷன் லைட்களை பொருத்தப்படும் என்று ஹோண்டா நிறுவனம் உறுதியளித்துள்ளது.

டியோ  இன்ஜின், மேம்படுத்தப்பட்ட வேகம், குறைந்த உராய்வு மற்றும் சிறந்த செயல்திறனை கொண்டு இயங்குவதோடு, சிறந்த குளிர்ச்சிசெய்யும் வசதிகளையும் கொண்டுள்ளது.  மேலும்  வாடிக்கையாளர்கள் பயணத்தின்போது தங்கள் ஸ்மார்ட்போன்கள் சார்ஜ் செய்து கொள்ள  மொபைல் சார்ஜ் சாக்கெட் ஒன்று இந்த பைக்கில் இணைக்கப்பட்டுள்ளது.

டியோ-வில் ஸ்டாண்டர்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய கோம்பி ப்ரேக் சிஸ்டம் (CBS) பொருத்தப்பட்டுள்ளது.  இந்த கோம்பி ப்ரேக் சிஸ்டம் (CBS) முன் மற்றும் பின்புற சக்கரங்களுக்கிடையே பிரேக்கிங் ஆற்றலை  ஒரே சமயத்தில் விநியோகிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.