அறிமுகமானது ஹோண்டா எக்ஸ்-பிளேட் ஏபிஎஸ்; விலை ரூ. 87,776

Honda X-Blade

எக்ஸ்-பிளேட் மோட்டார் சைக்கிள்கள் ஹோண்டா நிறுவனத்தின் 162.71cc HET இன்ஜின் மூலம் இயங்குகிறது. இந்த இன்ஜின் 13.93bhp ஆற்றலில் 8,500rpm-லும், பீக் டார்க்யூவில் 13.9Nm ஆற்றலில் 6,000rpm-லும் இயங்கும்.

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் எக்ஸ்-பிளேட்-களை ஏபிஎஸ் (ஆண்டி லாக் பிரேகிங் சிஸ்டம்) உடன் டெல்லியில் நடந்த 2018 விவோ புரோ கபடி லீக் இறுதி போட்டியின் போது அறிமுகம் செய்தது. ஹோண்டா எக்ஸ்-பிளேட் ஏபிஎஸ்-களின் விலை 87,776 ரூபாய் (எக்ஸ் ஷோ ரூம் விலை டெல்லியில்).

புதிய ஹோண்டா எக்ஸ்-பிளேட் ஏபிஎஸ் மோட்டார் சைக்கிள்களில் தற்போது கவுல், முன்புற ஃபோர்க் கவர்களுடன் வீல் ரிம் ஸ்டிரிப்கள் போன்றவை பொருத்தப்பட்டுள்ளது. எக்ஸ்-பிளேட் மோட்டார் சைக்கிள்கள் ஹோண்டா நிறுவனத்தின் 162.71cc HET இன்ஜின் மூலம் இயங்குகிறது. இந்த இன்ஜின் 13.93bhp ஆற்றலில் 8,500rpm-லும், பீக் டார்க்யூவில் 13.9Nm ஆற்றலில் 6,000rpm-லும் இயங்கும்.

Honda X-Blade

You May Like:NCAP கிராஷ் டெஸ்ட்டில் இந்தியாவில் முதல் காராக 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றது டாடா நெக்ஸான்

எக்ஸ்-பிளேட் மோட்டார் சைக்கிள்கள், மேட் மார்வல் ப்ளூ மெட்டாலிக், மேட் ஃப்ர்சன் சில்வர் மெட்டாலிக், பெர்ல் ஸ்பார்டன் ரெட், பெர்ல் இக்னேசியஸ் பிளாக் மற்றும் மேட் மார்ஷல் கிரீன் மெட்டாலிக் என ஐந்து கலர்களில் கிடைக்கிறது.

புதிய எக்ஸ்-பிளேட் மோட்டார் சைக்கிள்கள் அறிமுகம் குறித்து ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் பிரெசிடன்ட் மற்றும் சிஇஓ தெரிவிக்கையில், 150-180cc மோட்டார் சைக்கிள் பிரிவில் எங்கள் நிறுவன நிலையை உறுதி படுத்தி கொள்ளும் வகையில் எக்ஸ்-பிளேட் மோட்டார் சைக்கிள்கள், அதிநவீன ஸ்டைல் மற்றும் சிறந்த டெக்னாலஜிகளுடன் இளைய தலைமுறையை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய எக்ஸ்-பிளேட் மோட்டார் சைக்கிள்கள், மூலம் 2 வீலர் பயணத்தை புதிய மேம்படுகளுடன் மற்றும் அதிக டெக்னாலஜி கொண்டதாக மாற்றியுள்ளோம் என்றார்.

You May Like:இந்தியாவில் அறிமுகமானது ரோல்ஸ் ராய்ஸ் சுள்ளினான்; விலை ரூ. 6.95 கோடி

எக்ஸ்-பிளேட் மோட்டார் சைக்கிள்கள் அறிமுகம் விழாவில் பேசிய, ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவன சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் சீனியர் துணை தலைவர் யத்விந்தர் சிங் குலீரியா, புதிய எக்ஸ்-பிளேட் மோட்டார் சைக்கிள்கள், ஸ்டைல் மற்றும் அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை நாள்தோறும் பயன்படுத்தும் இளைய தலைமுறைக்காக பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

xblade abs

You May Like:ரூ. 1.11 கோடி விலையில் அறிமுகமானது ஜாகுவார் XJ50

மேலும் பேசிய அவர், புதிய எக்ஸ்-பிளேட் மோட்டார் சைக்கிள்கள், ஏபிஎஸ் பொருத்தப்பட்டுள்ள விற்பனை வந்துள்ளதால், இதில் பயணம் செய்பவரின் நம்பிக்கையை அதிகரிக்கும். ஸ்போர்ட்ஸ் ஸ்டைலில் உள்ளதால், புதிய எக்ஸ்-பிளேட் மோட்டார் சைக்கிள்கள், ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகளை விரும்புபவர்களையும் கவரும். இதுமட்டுமின்றி அதிக ஸ்டைல் கொண்ட இந்த பைக்கை விவோ புரோ கபடி லீக் 2108 நடைபெறும் அனைத்து நகரங்களில் ஹோண்டா நிறுவனம் காட்சிபடுத்தும் என்றார்.