வெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்

கேடிஎம் டீலர்ஷிப்களில் 125 டியூக் வாங்கி கொள்ள வெறும் 1000 ரூபாய் டோக்கன் அட்வான்ஸ் கொடுத்து புக்கிங் செய்து கொள்ளலாம். இந்த மோட்டார் சைக்கிள்கள் இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

கேடிஎம் இந்தியா தனது 125 டியூக் மோட்டார் சைக்கிள்களை இந்தாண்டின் இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதை தொடர்ந்து இந்த மோட்டார் சைக்கிள்களுக்கான புக்கிங் தொடங்கப் பட்டுள்ளதை மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் உள்ள கேடிஎம் டீலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய மோட்டார் சைக்கிளை வாங்க வாடிக்கையாளர்கள் வெறும் 1000 ரூபாய் மட்டும் டோக்கன் பணமாக செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர்.

Apply For Loan

APPLY!

Contact Dealer

CONTACT!

இந்த புதிய மோட்டார் சைக்கிள் எப்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகத நிலையில், வரும் டிசம்பரில் புதிய மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்யப்[படும் என்று தகவல்கள் தெரிவிகின்றன.

இந்த புதிய மோட்டார் சைக்கிள்கள் அறிமுகத்திற்கு பின்னர், அதற்கான டெலிவரி தொடங்கும் என்று கூறப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட கேடிஎம் 125 டியூக் மோட்டார் சைக்கிள்கள் கடந்த 2016ம் ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டது. இவை 250 டியூக் போன்ற ஸ்டைலில் இருந்தது. இந்த மோட்டார் சைக்கிள் அதிக விலை கொண்டதாக இருந்த போதும் 125cc ஆற்றல் கொண்டதாக இருக்கும். இந்த மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

Apply For Loan

APPLY!

Contact Dealer

CONTACT!

புதிய கேடிஎம் டியூக் மோட்டார் சைக்கிள்கள், 124.7cc சிங்கிள் சிலிண்டர், லிக்யுட் கூல்டு இன்ஜின்களுடன், இந்த இன்ஜின் 15bhp மற்றும் 12Nm பீக் டார்க்கியூவில் இயங்கும். இந்த இன்ஜின் 6-ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிளின் முன்புற வீல், USD போர்க் மற்றும் மோனோ ஷாக் சஸ்பென்சன் செட்டப் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. பிரேக்கை பொறுத்தவரை, இதில் 300mm முன்புற மற்றும் 230mm டிஸ்க் பின்புறமும் பொருத்தப்பட்டுள்ளது.

Apply For Loan

APPLY!

Contact Dealer

CONTACT!

சர்வதேச அளவில் 125 டியூக் மோட்டார் சைக்கிள்கள், ஸ்டாண்டர்ட் ABs உடன் வெளி வந்துள்ளது. இது இந்திய-ஸ்பெக் மாடலில் இடம் பெறவில்லை. இருந்தபோதும், ABS இல்லாத காரணத்தால் இந்தியாவில் இந்த மோட்டார் சைக்கிளின் விலை சற்று குறையும். இந்த மோட்டார் சைக்கிள்களில் ABS-க்கு பதிலாக CBS பொருத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி TFT ஸ்கிரீன் ஒன்றும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

Apply For Loan

APPLY!

Contact Dealer

CONTACT!

கேடிஎம் 125 டியூக் மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காகவே தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோட்டார் சைக்களில், முந்தைய மாடல்களில் பயன்படுத்தப்பட்ட உதிரி பாகங்கள் பயன்படுத்தப்பட்ட போதும் இது அதிக விலை கொண்ட மோட்டார் சைக்கிளாக இருந்து வருகிறது. மேலும் மற்ற 125 மோட்டர் சைக்கிள்களுடன் ஒப்பிடும் போது இது அதிக விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஐரோப்பாவில் இந்த 125 டியூக் மோட்டார் சைக்கிள்கள் இளைய தலைமுறை வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Apply For Loan

APPLY!

Contact Dealer

CONTACT!

இந்தியாவில் வெளியாக உள்ள 125cc மோட்டார் சைக்கிள்கள், அதிக ஆற்றல் கொண்டதாக இருக்க வேண்டும், இந்த தேவையை கேடிஎம் டியூக் நிறைவேற்றும் வகையில் உள்ளது. ஆனாலும், இந்த மோட்டார் சைக்கிள் ஜாலியாக பயணம் செல்லும் மோட்டார் சைக்கிள் பிரியர்களுக்கே மிகவும் விருப்பமான மோட்டார் சைக்கிளாக இருந்து வருகிறது. 125 டியூக் மோட்டார் சைக்கிள்கள், யமஹா YZF-R15 V3, யமஹா FZ 25, பஜாஜ் பல்சர் NS 200 போன்ற மோட்டார் சைக்கிள்களுக்கு போட்டியாக இருக்கும். 125 டியூக் மோட்டார் சைக்கிள்களின் விலை 1.50 லட்ச ரூபாயாக இருக்கும் (ஆன் ரோடு விலை). இது கேடிஎம் 200 டியூக் மோட்டார் சைக்கிள் விலையை விட டியூக் மோட்டார் சைக்கிள் விலை 20 முதல் 30 ஆயிரம் குறைவாகவே இருக்கும்.