‘திரிலிங் ரைடு’ அனுபவத்தை அளிக்கும் கேடிஎம் 125 டியூக் அறிமுகமானது; விலை ரூ. 1.18 லட்சம்

KTM 125 Duke launched

இந்தியாவில் கேடிஎம் 125 டியூக் பைக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்களின் விலை 1.18 லட்ச ரூபாயாகும் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்). இந்த பைக்குகள் இன்று முதல் இந்தியாவில் உள்ள 450 கேடிஎம் ஷோரூம்களில் கிடைக்கும் என்று கேடிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பைக்குகளுக்கான புக்கிங் ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

KTM 125 Duke

You May Like:இந்தியாவில் அறிமுகமானது 2018 மஹிந்திரா அல்ட்ராஸ் ஜி4; விலை ரூ. 26.95 லட்சம்

கேடிஎம் 125 டியூக் பைக்கள் 124.7 cc சிங்கிள் சிலிண்டர் மோட்டர்களுடன் 14.3 bhp ஆற்றலில் 9,250 rpm-லும் பீக் டார்க்யூ 12 Nm-ல் 8,000 rpm கொண்டதாக இருக்கும். இந்த இன்ஜின் 6-ஸ்பீட் மெனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ABS பொருத்தப்பட்டுள்ளது.

KTM 125 Duke ABS

You May Like:புதிய டிசைன் & ஹைபிரிட் ரியர் வியூ மிரர் உடன் வெளியானது 2020 ரேஞ்ச் ரோவர் எவோக்யூ

கேடிஎம் 125 டியூக் பைக்களில் சில பிரிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது டிரில்லிஸ் பிரேம், அலுமினியம் ஸ்விங்ஆர்ம் மற்றும் 43 mm அப் சைடு டவுன் போர்க்கள் முன்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. பின்புறத்தில் 10-ஸ்டெப்களில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான மோனோஷாக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கில் முன்புற வீல்லில், 300 mm டிஸ்க் மற்றும் பின்புற வீல்லில் 230 mm டிஸ்க் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பைக் அறிமுக விழாவில் பேசிய பஜாஜ் ஆட்டோ நிறுவன உயர் அதிகாரி அமித் நந்தி, கேடிஎம் பைக்கள் அதிக திறன், சிறந்த டிசைன்களுடன் திரிலிங் ரைடு அனுபவத்தை அளிக்கும். 125 டியூக் பைக்கள் புதிய மைல்கல்லாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக் மூலம் ரைடர்கள் உலகளவிலான ரேஸிங் அனுபவத்தை பெறலாம் என்றார்.

KTM Bikes in India

You May Like:ரூ. 1.6 லட்ச விலையில் அறிமுகமானது கேடிஎம் 200 டியூக் ஏபிஎஸ்

தற்போது, இந்தியாவில் உள்ள 125cc பிரிவு பைக்களில், அதிக திறன் கொண்டதுடன், ஃபன்-டு-ரைடு பைக்களில் ஒன்றாக கேடிஎம் 125cc டியூக் விளங்கி வருகிறது. இருந்தபோதும், பைக் பிரியர்கள் இந்த பிரிவில் அதிக திறன் கொண்ட பைக்காக விளங்கும் கேடிஎம் 125cc டியூக் பைக்கை தேர்வு செய்வார்கள். மேலும் இது அவர்களுக்கு மிகவும் சிறந்த தேர்வாக இருக்கும்.

125 Duke ABS

You May Like:இந்தியாவில் அறிமுகமானது டுகாட்டி பானிகேல் V4R; விலை ரூ. 51.87 லட்சம்

கேடிஎம் 125cc டியூக் பைக்களை எத்தனை பேர் 1.18 லட்ச ரூபாய் கொடுத்து வாங்குவார்கள் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். தற்போது வரை கேடிஎம் பைக்கள், பைக் பிரியர்கள் வாங்கும் விலையிலும் இருப்பதுடன், அதிக திறன் கொண்டதாகவும் விளங்குகிறது.