ஓராண்டில் 100-க்கும் மேற்பட்ட டுகாட்டி மான்ஸ்டர் 821 விற்பனை: டுகாட்டி இந்தியா அறிவிப்பு

Over 100 Ducati Monster 821 Sold In India In Under 1 Year

இந்தியாவில் 100-க்கு அதிகமாக டுகாட்டி மான்ஸ்டர் 821 பைக்களை ஓராண்டிற்குள் விற்பனை செய்துள்ளதாக டுகாட்டி இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. டுகாட்டி மான்ஸ்டர் 821 பைக்களை கடந்த ஆண்டு மே ஒன்றாம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக்கள் அறிமுகம் செய்யப்பட்டது இந்தியாவில் முதல் அதிக விற்பனையாகும் மோட்டார் சைக்கிள்கள் வகையில் இடம் பிடித்தது.

இந்த விற்பனையை நினைவு கூறும் வகையில், டுகாட்டி மான்ஸ்டர் பைக்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் ஸ்பெஷல் அக்ஸ்சரிகளை பெறுவதற்கான வாய்ப்புகளை டுகாட்டி நிறுவனம் வழங்க உள்ளது. இந்த பிரத்தியோக ஆப்பர் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரையிலான கால கட்டத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள டுகாட்டி டீலர்ஷிப்களில் கிடைக்கும்.

Ducati Monster 821

You May Like:2019 ஹோண்டா ஆப்ரிக்கா டூவின் முன்பதிவு இந்தியாவில் தொடங்கியது; விலை ரூ.13.5 லட்சம்

சிறப்பு ஆப்பர்களின் படி, டுகாட்டி மான்ஸ்டர் 821 வாங்கும் வாடிக்கையாளருக்கு, டெர்மினோனி எக்ஸ்ஹாஸ்ட் மற்றும் டுகாட்டி விரைவு ஷிஃப்ட் (DQS) ஸ்டாண்டர்ட்களை பெறுவார்கள். மான்ஸ்டர் 797+ வாடிக்கையாளர்களும் டெர்மினோனி எக்ஸாஸ்ட்களை பெறுவார்கள். இந்த ஆப்பர்களில் பெறப்படும் ஸ்பெஷல் அக்ஸ்சரிகளுக்காக வாடிக்கையாளர்கள் எந்தவிதமான கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை. டுகாட்டி மான்ஸ்டர் 821 பைக்கள் தற்போது 10.99 லட்ச ரூபாயிலும், டுகாட்டி மான்ஸ்டர் 797+ பைக்கள் 8.60 லட்ச ரூபாயிலும் (எக்ஸ் ஷோரூம் விலை, டெல்லியில்) விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஸ்பெஷல் ஆப்பர் குறித்து பேசிய டுகாட்டி இந்திய நிறுவன நிர்வாக இயக்குனர் செர்ஜி கேநோவாஸ், மான்ஸ்டர் பைக்கள் எப்போதும் டுகாட்டி நிறுவன புரோட்டோபோலியோவில் மிகவும் சிறந்த பைக்களாகவே இருந்து வருகிறது. கடந்த ஆண்டு 25ம் ஆண்டு கொண்டாட்டத்துடன், மான்ஸ்டர் 821 பைக்கள் அறிமுகமானது. இதை தொடர்ந்து இந்தாண்டு டுகாட்டி மான்ஸ்டர் 821 ஸ்டைல்களுடன் கூடிய வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்து இழுக்கும். மேலும் அவர்களுக்கு கண்டிப்பாக புதிய அனுபவத்தை கொடுக்கும் வகையில் இந்த பைக்கள் இருப்பதை இந்தியாவில் கொண்டாட முடிவு செய்துள்ளோம் என்றார்.

Ducati Monster

You May Like:2019 பஜாஜ் டோமினார் 400 விலை வெளியானது

மேலும் பேசிய அவர், கூடுதலாக டெர்மினோனி எக்ஸ்ஹாஸ்ட் சிஸ்டம் மற்றும் டுகாட்டி விரைவு ஷிஃப்ட் (DQS) போன்றவை டுகாட்டி மான்ஸ்டர் 821 பைக்களை நகர்ப்புறங்களில் பயணிப்பவர்களுக்கும், ஆர்ப்பட்டமான பயணத்தை விரும்புபவர்களையும் இந்த பைக்களை அதிகளவில் விரும்பும் பைக்களாக மாற்றியுள்ளது. தற்போது, மான்ஸ்டர் 797+ வாடிக்கையாளர்களும் டெர்மினோனி எக்ஸ்ஹாஸ்ட்களை பெறும் ஆப்பரையும் டுகாட்டி நிறுவனம் வழங்கியுள்ளது. இதன் மூலம் பைக் பயணத்தை விரும்புபவர்கள் அதிக மதிப்பு மிக்க பேக்கேஜ்களை பெறுவார்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். மேலும் மான்ஸ்டர் பைக்கள், இந்த பைக் பிரிவில் சாம்பியன் பைக்காக மாறும் என்றும் அவர் தெரிவித்தார்.

You May Like:டி.வி.எஸ். விக்டர் CBS ரூ.54,682 விலையில் அறிமுகமானது

டுகாட்டி மான்ஸ்டர் 821 பைக்கள் 821cc டெஸ்ட்ஸ்டிரட்டா எல்-டூவின் இன்ஜின்களுடன் 108bhp ஆற்றலில் 9,250rpm-லும், அதிகபட்ச டார்க்கான 86Nm-ல் 7,7500rpmலும் இயங்கும். இந்த இன்ஜின்கள் 6-ஸ்பீட் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மான்ஸ்டர் 797+ பைக்கள், 803cc எல்-டூவின் இன்ஜின்களுடன் 72bhp மற்றும் 67Nm ஆற்றலுடன், இந்த இன்ஜின்கள் 6-ஸ்பீட் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும். டுகாட்டி மான்ஸ்டர் 821 பைக்கள், ட்ரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள் ஆர்எஸ், சுசூகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 மற்றும் கவாசாகி Z900 ஆகிய பைக்களுக்கு போட்டியாக இருக்கும்.