2019 வெஸ்பா ரேஞ்ச் அறிமுகம் செய்தது பியஜியோ; துவக்க விலை ரூ. 91,130

Piaggio Launches 2019 Vespa

பியஜியோ நிறுவனம் அப்ரிலியா எஸ்ஆர் 150ரேஞ்ச் ஸ்கூட்டர்களை 2019 மாடல்களுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தி வரும் நிலையில், இன்று தனது 2019 வெஸ்பா ரேஞ்ச் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர்களில் VXL 150 வகை 91.140 ரூபாய் விலையிலும், டாப்-என்ட் SXL வகைகள் 97 ஆயிரத்து 276 ரூபாய் விலையில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிய விலைகள் அனைத்து புனேவில் எக்ஸ் ஷோரூம் விலையாகும். புதிய வெஸ்பா 150 ரேஞ்ச் ஸ்கூட்டர்கள், தற்போது புதிய காஸ்மெடிக் மற்றும் வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
Piaggio Launches 2019 Vespa Front

You May Like:அறிமுகமானது 2018 அப்ரிலியா எஸ்ஆர்150; விலை ரூ. 70,031

இந்த ஸ்கூட்டர்கள் தற்போது புதியதாகவும் கவர்ந்திழுக்கும் கலர் ஆப்சன்களில் வெளியாகியுள்ளது. இதில், மேட் ரோஸியோ டிராகன், மேட் எல்லோ மற்றும் அஜூரோ புரோவெஸ்ஸா போன்ற கலர்களை உள்ளடக்கியதாக இருக்கும். இத்துடன் புதிய மெசின்களால் கட் செய்யப்பட்ட அலாய் விளம்பு கொண்ட வீல்களுடன் வெளியாகியுள்ளது.

கூடுதலாக பியஜியோ நிறுவனம் தனது புதிய பிளாக் லிமிடெட் எடிசன் வெஸ்பா நோட்டி ஸ்கூட்டர்களை காட்சிக்கு வைத்துள்ளது. 125cc இன்ஜின்களை கொண்டுள்ள இந்த ஸ்கூட்டர்கள், ஏற்கனவே இந்தியாவில் விற்பனை வந்து விட்டது. மேலும் இந்த இந்த ஸ்கூட்டர்களின் விலை 68 ஆயிரத்து 829 ரூபாயாக்கும் (புனேவில் எக்ஸ் ஷோ ரூம் விலை).
Piaggio Launches 2019 Vespa 3

You May Like:ராஜ்புதன கஸ்டம்ஸ் ஸ்பெஷல் எடிசன்களாக இந்தியாவில் வெளியாகிறது டுகாட்டி மான்ஸ்டர் 797

புதிய ஸ்கூட்டர் அறிமுகம் குறித்து பேசிய இந்த நிறுவனத்தின் டூவிலர் பிசினஸ்களுக்கான தலைவர் ஆஷிஷ் யக்மி, இந்தியாவில் வெஸ்பா அறிமுகம் செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் ஆகியுள்ளதையும், ஏப்ரிலியா அறிமுகம் செய்யப்பட்டு இரண்டு ஆகியுள்ளதையும் கொண்டாடுவதில் பெருமை கொள்கிறோம் என்றார்.

You May Like:நிசான் சன்னி ஸ்பெஷல் பதிப்பு அறிமுகம்; விலை ரூ. 8.48 லட்சம்

மேலும் பேசிய அவர், இந்த இரண்டு பிராண்டுகளும் அறிமுகம் செய்யப்பட்டது முதல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுமட்டுமின்றி வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் புதிய ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்வதில் மக்ழிச்சி கொள்கிறோம். இதுமட்டுமின்றி எங்கள் தயாரிப்புகளில் உலகளாவிய கண்டுபிடிப்புகளையும் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம். இந்தாண்டின் இறுதியில் 300 மோட்டாப்லேஸ்ஸ்களை இந்தியாவில் வெற்றிகரமாக அறிமுகம் செய்ய உள்ளோம் என்றார்.
Piaggio Launches 2019 Vespa 5

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


இதுமட்டுமின்றி, பியஜியோ நிறுவனம் தங்கள் ஸ்கூட்டரில், புதிய தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட கனெக்டிவிட்டி வசதிகளையும் இணைந்துள்ளனர். மொபைல் அப்ளிகேஷன்களுக்கு உதவும் இந்த வசதிகள் வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா ஸ்கூட்டர்களில் பொருத்தப்பட்டுள்ளது.
Piaggio Launches 2019 Vespa 1

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


ஆண்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் என இரண்டிற்கும் இந்த புதிய மொபைல் அப்ளிகேஷன்கள் சப்போர்ட் செய்யும். இத்துடன் புதிய வசதிகளாக டிஷ்டிரஸ் பட்டன், பைண்ட் மை வேகிக்ல் பங்க்ஷன், அருகில் உள்ள பெட்ரோல் ஸ்டேஷன்கள் மற்றும் சர்வீஸ் ஸ்டேஷன்களை அறிந்து கொள்ளும் வசதிகள் இடம் பெற்றுள்ளது. இதுமட்டுமின்றி இந்த அப்ளிகேஷன் தொடர்ச்சியாக அப்டேட் செய்யப்படும் என்றும் பியஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
Piaggio Launches 2019 Vespa 2

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


இன்ஜின் ஆப்சன்களை பொறுத்தவரை, புதிய வெஸ்பா 150 ரேஞ்ச் ஸ்கூட்டர்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மேலும், இவை 150cc சிங்கிள் சிலிண்டர் இஞ்சின்கள், இவை 11.4bhp ஆற்றலுடன் 7000rpm மற்றும் 11.5Nm பீக் டார்க்யூவில் 5500 rpm கொண்டதாக இருக்கும்படி டூயின் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின்கள் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

வெஸ்பா நோட்டிகளை பொருத்தவரை, 125cc, ஏர்-கூல்டு இன்ஜின், 10bhp மற்றும் இது 10.6Nm டார்க்யூ-வை செயல்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினும் CVT டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.