ஐ.எஸ்.ஐ. அல்லாத ஹெல்மெட்களுக்கு விரைவில் தடை

ISI Helmet Tamil News

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின் படி, ஐ.எஸ்.ஐ.  தர சான்று பெறாத  2 சக்கர வாகனங்களுக்கான ஹெல்மெட்களுக்கு, அடுத்த 2 மாதங்களுக்கு பின்னர் தடை விதிக்கப்பட உள்ளதாகவும், இந்த ஹெல்மெட்களை தயாரிப்பவர்களுக்கு  தண்டனையாக 2 ஆண்டு ஜெயில் அல்லது 2 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் 2019 ஜனவரி முதல் அமலுக்கு வர உள்ள புதிய தர விதிகளின்படி, ஹெல்மெட் தயாரிப்பாளர்கள், தாங்கள் தயாரிக்கும் ஹெல்மெட்களை 1.5kg எடை கொண்டதாக  தயாரிக்காமல் 1.2kg எடை கொண்டதாக தயாரிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்,   ஐ.எஸ்.ஐ. அல்லாத ஹெல்மெட்களை விற்பனை செய்வது குற்றமாகும். புதிய ஹெல்மெட்களில், அவை ஹெல்மெட்கள் மோட்டார்சைக்கிள்  ஒட்டுபவருக்காக உருவாக்கப்பட்டது என்பதை குறிப்பிட வேண்டும். இந்த அறிவிப்பின் மூலம்  ஐ.எஸ்.ஐ. அல்லாத ஹெல்மெட்கள் பயன்படுத்துவது தவிர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய  ஐஎஸ்ஐ ஹெல்மெட் தயாரிப்பாளர் சங்க தலைவர் ராஜீவ் கபூர், அரசின் இந்த முடிவு, சாலை விபத்துகளை தடுப்பதுடன், போலி ஹெல்மெட்களின் விற்பனையையும் தடுக்கும்.  இதன் மூலம் இந்தியாவில் தங்கள் ஹெல்மெட்களை விற்பனை செய்யும் சர்வதேச பிராண்ட்களான ஆராய், ஷூய், ஏஜிவி மற்றும் ஹெச்.ஜெ.சி மற்றும் சர்வதேச டெஸ்ட்டிங் ஏஜென்சிகளான  டாட், இசிஇ, ஸ்நீல் மற்றும் ஷார்ப் ஆகியவைகளும்  ஐஎஸ்ஐ தர விதிகளை கடைபிடிக்க வேண்டியது தற்போது அவசியமாகியுள்ளது.