இந்தியாவில் 650cc ராயல் என்ஃபீல்ட் டுவின்ஸ் விரைவில் அறிமுகம்

Royal Enfield News Tamil

இந்தியாவில் ராயல் என்ஃபீல்ட் பைக்குகளுக்கு எந்த ஒரு அறிமுகமும் கொடுக்க  வேண்டிய அவசியமில்லை. தற்போது இந்த நிறுவனம்,   புதியதாக இரண்டு 650cc பைக்குகளை இந்தாண்டு நவம்பரில் அறிமுகம் செய்ய உள்ளது.

ராயல் என்பீல்ட் தற்போது கிளாசிக், புல்லட் மற்றும் தண்டர்பேர்டு மாடல்களை தயாரித்து வருகிறது. இவை அனைத்தும், 350cc அல்லது 500cc இன்ஜின் கொண்டதாக உள்ளது.  இந்நிலையில்,  இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதன் மூலம், ராயல் என்பீல்ட் நிறுவனம் 650cc மிடில் வெயிட் பைக் வகைகளை தயாரிக்க தொடங்கியுள்ளது.

 

மேற்குறிய இரண்டு வகை பைக்குகளும், நிறுவனத்தின் முதல் 650cc, பேரலல் டூவின், ஆயில்-கூல்டு இன்ஜின்கள் பொருத்தப்பட்டு, உள்ளுரிலேயே தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட உள்ளது. இந்த இன்ஜின்கள் 47.7PS ஆற்றல் மற்றும் 52Nm டார்க்யூகளுடன் வழக்கமான எரிபொருள் இன்ஜெக்ஷன்களுடன்,6-ஸ்பீட் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.  இந்த புதிய ராயல் என்பீல்ட் 650 மோட்டார் சைக்கிள்களின் விலை 3-4 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் என்ஃபீல்ட் 650 மோட்டார் சைக்கிள்கள்

  • இவை கான்டினென்டல் GT 650 மற்றும் இன்டர்செப்டர் 650 என்ற பெயரில் வெளியாகும்.
  • அனைத்து 650cc பைக்குகளும் பேர்லால் டுவின், ஆயில்-கூல்டு மோட்டர் கொண்டதாக இருக்கும்.

இந்த பைக்குகள் இந்தியாவில் இந்தாண்டின் நவம்பர் மாதத்தில் அறிமுகம்  செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.