ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 ஏபிஎஸ் பைக் ரூ. 1.53 லட்ச விலையில் அறிமுகமானது

ராயல் என்ஃபீல்ட் நிறுவனம், மேம்படுத்தப்பட்ட வகையான கிளாசிக் 350 பைக் டூயல்-சேனல் ஏபிஎஸ் யூனிட்களுடன் கிடைக்கிறது. இதே போன்ற யூனிட்கள் கிளாசிக் 350 சீரிஸ்களான கன்மெட்டல் கிரே, சிக்னல்ஸ் மற்றும் ரெட்டிட்ச் வகைகளில் பொருத்தப்பட்டுள்ளது. ஏபிஎஸ் பொருத்தப்பட்ட பைக்களின் விலை 6,000 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 464 ரூபாய் முதல் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 245 ரூபாய் விலையில் இருக்கும் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்). டூயல் சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்ட பைக்களில் மிகவும் குறைந்த அளவு விலை உயர்வு கொண்ட பைக்களில் ஒன்றாக இந்த பைக் இருந்து வருகிறது.

Royal Enfield Classic 350 ABS

You May Like:ஹோண்டா சிபி யூனிகார்ன் 150 ஏபிஎஸ் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 78,815

மேம்படுத்தப்பட்ட கிளாசிக் 350 பைக்களில் வேறு எந்த மேம்பாடுகளும் செய்யப்படவில்லை. இவை 346 cc, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின்களுடன், மற்ற கிளாசிக் 350 லைன்-அப்களில் உள்ளது போன்றே இருக்கிறது. இந்த பைக்களின் அவுட்புட்களிலும் எந்த மாற்றமும் இன்றி, 19.8hp ஆற்றலில் 5,250rpm-லும் மற்றும் 28Nm டார்க்கில் 4,000 rpm-லும் இயங்கும். மேம்படுத்தப்பட்ட பைக்கள், ஆஷ், பிளாக், செஸ்ட்நெட் மற்றும் சில்வர் என நான்கு கலர் ஆப்சன்களில் கிடைக்கிறது.

தற்போது ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 வகைகள் முழுமையாக மேம்படுத்தப்பட்டு டூயல்-சேனல் ABS-கள் பொருத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 மற்றும் 350 ES பைக்கள் மட்டுமே இன்னும் பாதுகாப்பு வசதிகள் பொருத்தப்படவில்லை. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய பாதுகாப்பு விதிகள் அமலுக்கு வர உள்ளது. இந்த காலக்கெடு வர இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், புல்லட் 350 பைக்களிலும் சில மேம்பாடுகள் செய்யப்படும் என்று தெரிகிறது.