சென்னையை அடிப்படையாக கொண்ட பைக் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டு நிறுவனம், தங்கள் மோட்டார் சைக்கிள்களுக்கான விலையை இந்த மாதத்தில் உயர்த்தியுள்ளது. அதாவது தனது 350-500 சிசி மோட்டார் சைக்கிள் விலையை 1500 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு குறித்து ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த போதும், டீலர் மற்றும் ரீடைலர்கள் இந்த விலை உயர்வை இந்த மாதம் முதலே அப்டேட் செய்ய உள்ளனர்.
இந்த விலை உயர்வு அனைத்து மாடல்களையும் குறிப்பாக புல்லட் 350 மற்றும் 500, கிளாசிக் 350 மற்றும் 500 மற்றும் ஹிமாலயன் மாடலை பாதிக்கும். புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கான்டினென்டல் GT 650 மற்றும் இன்டர்செப்டர் 650 பைக்களின் விலையில் எந்த மாற்றும் செய்யப்படவில்லை.
You May Like:ரெனால்ட் டஸ்டர் AMT விலை குறைந்தது ; இப்போது விலை ரூ. 12.10 லட்சம்
புதிய விலை உயர்வை தொடர்ந்து, புல்லட் 350 பைக்களின் விலை 1.34 லட்ச ரூபாய் முதல் தொடங்குகிறது. கிளாசிக் 350 ABS-களின் விலை 1.59 லட்சம் ரூபாயாகும். ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 ABS சிக்னல்ஸ் எடிசன்களின் விலையில் 1500 ரூபாய் அதிகமாகி 1.63 லட்ச ரூபாயாக இருக்கும். இதே போன்று, ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ABS பைக்கள் தற்போது 1.80 லட்ச ரூபாயாக இருக்கிறது. காண்டினேட்டல் GT 650-களின் விலை 2.49 லட்ச ரூபாய் மற்றும் இன்டர்செப்டர் 650 பைக்களின் விலை 2.64 லட்ச ரூபாயாகும். (அனைத்து விலைகளும் டெல்லியில் எக்ஸ்ஷோரூம் விலையாகும்)
You May Like:2019 ரெனால்ட் க்விட் ரூ. 2.66 லட்ச விலையில் அறிமுகமானது
இந்த விலை உயர்வுக்கான காரணத்தை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிவிக்கவில்லை. ஆனாலும் தயாரிப்பு செலவு இந்த விலை உயர்வுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் இந்த நிறுவனம், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் டூயல் சேனல் ABS-களை அறிமுகம் செய்துள்ளது மேலும் புலல்ட் 350 களையும், பாதுகாப்பு வசதிகளுடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த புல்லட் வகைகளில் மேம்பாடுகளை மேற்கொள்ள வரும் ஏப்ரல் மாதம் இறுதி கெடுவாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தாண்டின் இறுதியில் புதிய மோட்டார் சைக்கிள் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இவை பேட்ஜ்டு டிரைல் எடிசன்களாக இருக்கலாம் என்றும் ஸ்பெஷல் எடிசன் மோட்டார் சைக்கிள்கள் புல்லட் 350 மற்றும் 500 போன்று சோதனை செய்யப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த பைக் ஸ்க்ரம்ப்ளர்-ஸ்டைல் வெர்சனாகவும், ரெட்ரோ பைக் போன்று இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. இந்த பைக்களின் அறிமுகம் ஆகும் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை ஆனாலும், இந்தாண்டின் இறுதியில் இந்த பைக் அறிமுகமாகும் என்றும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.