பைக்கை குப்பையில் வீசியவரை கவரும் புதிய பைக்?

royal enfield himalayan abs priced rs 179 lakh

ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் சமீபத்தில் கிளாசிக் சிக்னல்ஸ் 350-களை அறிமுகம் செய்தது. இது நாட்டின் முதல் ABS கொண்ட மோட்டார் சைக்கிளாக வெளியானது. இந்நிலையில், ஹிமாலயன் ஏபிஎஸ் மோட்டார் சைக்கிள்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்ட் ஹிமாலயன் ஏபிஎஸ் மோட்டார் சைக்கிள்களின் விலையாக 1 லட்சத்து 78 ஆயிரத்து 833 ரூபாயாகவும், ஹிமாலயன் ஸ்லேட் ஏபிஎஸ் பிரிமியம் விலையாக ரூ. 1,836 ரூபாய் அதிகமாகவும், இதன் ரீடேல் விலை 1 லட்சத்து 80 ஆயிரத்து 669 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. (மேற்குறிய விலைகள் அனைத்தும் மும்பையில் எக்ஸ் ஷோ ரூம் விலையாகும்)

royal enfield himalayan abs

You May Like:விமான வேகத்தில் பறக்கும் கார்… இது பற்றி கொள்ள வேண்டுமா?.

இந்த மோட்டார் சைக்கிள்களில் ஏபிஎஸ் இணைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து 11 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது. இருந்தபோதும் கிளாசிக் சிக்னல்ஸ் 350 அறிமுகம் செய்யபபட்ட உடனே ஹிமாலயன் ஏபிஎஸ் மோட்டார் சைக்கிள்கள் அறிமுகம் குறித்த தகவல் வெளியானது. இரண்டு மோட்டார் சைக்கிள்களும் டூயல் சேனல் ஏபிஎஸ் யூனிட் பொருத்தப்பட்டுள்ளது. இது, ஏற்றுமதி மாடல்களில் உள்ளதை போன்று சுவிட்ச் செய்யும் வகையில் இருக்காது

royal enfield himalayan abs 2

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ராயல் என்பீல்ட் அட்வேன்ட்ச்ர் டூரிங் மோட்டார் சைக்கிள்களின் விலை உயர்ந்துள்ளதற்கு காரணம் இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ( IRDAI (Insurance Regulatory and Development Authority of India)) கொண்டு வந்துள்ள புதிய டூவீலர்கள் வாங்கும் போது ஐந்து ஆண்டு மூன்றாம் தரப்பு காப்புறுதிக் கொள்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளதேயாகும். ஓராண்டு ஆண்டு இன்சூரன்ஸ் மற்றும் ஐந்து ஆண்டு மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் ஆகியவற்றால் ஹிமாலயன் ஏபிஎஸ் வாடிக்கையாளர்கள் தோராயமாக 17,400 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்,

royal enfield himalayan abs 2

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

மும்பையில் ஆன்-ரோடு விலைப்படி ஹிமாலயன் ஏபிஎஸ் மோட்டார் சைக்கிளின் விலை 2 லட்சத்து 18 ஆயிரத்து 693-ஆக இருந்து வருகிறது. ஹிமாலயன் ஸ்லேட் ஏபிஎஸ் மோட்டார் சைக்களுக்காக நீங்கள் 2 லட்சத்து 20 ஆயிரத்து 771 ரூபாய் செலவிட வேண்டியிருக்கும். ஏபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது தவிர இந்த மோட்டார் சைக்கிள்களில் எந்த மெக்கனிக்கல் அல்லது காஸ்மெடிக் மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

royal enfield himalayan abs 4

You May Like:டாட்டா நெக்ஸான் க்ராஸ் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ. 7.14 லட்சம்

இந்தாண்டு இறுதியில் எல்லா வகைகளிலும், டூயல்-சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்டு விடும் என்று அறிவித்துள்ள ராயல் என்பீல்ட் நிறுவனம், இது பாதுகாப்பு வசதிகளை அதிகரிக்கும் முயற்சியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. கடந்த 2017ல், ஹிமாலயன் ஏபிஎஸ் வகைகள் அறிமுகம் செய்யப்பட்ட பொழுது, BS-IV புகார்கள் எழுந்தது. இருந்தபோதும் தற்போது ஏபிஎஸ் பொருத்தப்பட்டு உள்ளதாலும், இன்சூரன்ஸ் பாலிசி கட்டணம் போன்றவைகளால் விலை அதிகரித்துள்ளது. இதனால், அட்வென்ட்சர் டூரர் மோட்டார் சைக்கிள்களின் விற்பனை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.

royal enfield himalayan abs bike news in tamil

ராயல் என்ஃபீல்ட் பெகசுஸ் 500 மோட்டார் சைக்கிளால் அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர் ஒருவர் தான் வாங்கிய மோட்டார் சைக்கிள் ஒன்றை குப்பையில் போட்டது எதிர்ப்பை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.