178 செகண்டுகளில் விற்று தீர்ந்தது ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 பெகாசஸ்

Royal Enfield Classic 500 Tamil News

எதிர்பார்த்து போலவே, லிமிட்டெட் எடிசன் ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் குறைந்த நேரத்தில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. 250 யூனிட் கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன், ராயல் என்ஃபீல்ட் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விற்பனைக்கு வந்தது, விற்பனைக்கு வந்த 178 செகண்டுகளில், 250 யூனிட்களும் விற்பனையானது. உலகளவில் 1000 யூனிட் கிளாசிக் 500 பெகாசஸ் எடிசன் மட்டுமே விற்பனைக்கு வந்தது.

இரண்டாம் உலக போரின் போது பிரிட்டன் ராணுவத்தில் சேவை புரிந்த ஒரிஜினல் பிளேயிங் பிளா மோட்டார் சைக்கிளின்  நினைவாக உருவாக்கப்பட்ட இந்த யூனிட்கள், சர்வதேச அளவில் ஆலிவ் டிராப் கிரீன் மற்றும் சர்விஸ் பிரவுன் ஆகிய இரண்டு கலரில் வெளியானது. ஒவ்வொரு ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 பெகாசஸ் யூனிட்டின் விலை 2.40 லட்சம் ரூபாயாகும். (டெல்லியில் ஆன்ரோடு விலை)

சாதனை விற்பனை குறித்து பேசிய ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் பெகாசஸ் பதிப்பு, தலைவர் ருத்ரத்சிங் சிங், பெகாசஸ் மோட்டர் சைக்கிள்கள் விற்பனை,  ராயல் என்ஃபீல்ட்க்கு உள்ள பெரியளவிலான வரவேற்பு உள்ளது என்பதை  மீண்டும் எங்களுக்கு உணர்த்தியுள்ளது. எதிர்பார்த்ததை விட விரைவாக 250 மோட்டார் சைக்கிள்கள் 178 செகண்டுகளில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது என்றார்.

அனைத்து யூனிட்களின் பெட்ரோல் டேங்கிலும் மெரூன் மற்றும் புளு கலரில் பெகாசஸ் சின்னம் இடம் பெற்றுள்ளது. இது அதிகாரப்பூர்வ  பாராசூட் படைப்பிரிவின் முத்திரை ஆகும். இதுமட்டுமின்றி இந்த பைக்கில்,பிரவுன் ஹான்டில்பார் கிரிப்கஸ், பிராஸ் பக்கிள் உடன் கூடிய லெதர் ஸ்டிராப், ஏர் பில்டர் பாக்ஸ் மற்றும்  மிலிட்டரி ஸ்டைல் கன்வாஸ் பென்னிர்ஸ் இடம் பெற்றுள்ளது. இது மட்டுமின்றி டேங்கில் தனித்துவம் கொண்ட சீரியல் நம்பரும் எழுதப்பட்டிருக்கும்.