ரூ. 2.4 லட்சம் மதிப்புள்ள பைக்கை குப்பையில் வீசிய உரிமையாளர்

2018 royal enfield 500 pegasus dump in garbage

சமீபத்தில் கிளாசிக் 350 ஏபிஎஸ் சிக்னல் வெளியிட்டால் வருத்தமடைந்த ஒருவர், தனது என்ஃபீல்ட் பெகாசஸ் 500-ஐ குப்பை தொட்டியில் வீசியுள்ளார். கிளாசிக் 350 ஏபிஎஸ் சிக்னல், இந்திய ராணுவத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தம் வகையில் அறிமுகம் செய்யபபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Like:2018 டாட்சன் ரெடி-கோ லிமிட்டெட் எடிசன் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ 3.58 லட்சம்

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ராயல் என்பீல்ட் நிறுவனம் ராயல் என்ஃபீல்ட் பெகாசஸ் 500 லிமிட்டெட் எடிசன் மோட்டார் சைக்கிள்களை, கிளாசிக் 500-ஐ அடிப்படையாக கொண்டும், சில தனித்துவமிக்க வசதிகளுடன் இராண்டாம் உலக போரின் போது பிரிட்டன் ராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களை நினைவு கூறும் வகையில் வெளியிட்டது. உலக முழுவதும் 250 மோட்டார் சைக்கிள்களை மட்டுமே விற்பனை கொண்டு வந்த இந்த நிறுவனம், இதன் விலையாக 2.40 லட்சமாக அறிவித்திருந்தது. இது கிளாசிக் சிக்னல்ஸ்களை வடை 80 ஆயிரம் அதிகமாகும்.

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ஒரு சில உரிமையாளர்கள், தங்கள் கோபத்தை வெளிக்காட்டி, ராயல் என்பீல்ட் நிறுவனத்திற்கு கடிதத்தையும் அனுப்பியுள்ளனர். அதில், ராயல் என்பீல்ட் நிறுவனம் தங்களை ஏமாற்றி விட்டதாகவும். போகாஸ்-கள் சிக்னல்ஸ் போன்றே இருப்பதால் மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட வேண்டும் என்றார். இது குறித்து அவர்கள் மேலும் பேசுகையில், நாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்கிறோம். ஒரே மாதிரியாக இருத்தபோது போகாஸ் சிறப்பு பதிப்பாக வெளியானது. எங்களுக்கு ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் மீதான ஆர்வம் முழுமையாக குறைந்து விட்டது.

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

பெகாசஸ் வாங்குதில் பல்வேறு சோதனைகளை நாங்கள் சந்தித்தோம் முதலாவதாக கடந்த ஜூலை 10ம் தேதி ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் இணையதளமே முடங்கியது. இதனால் புக்கிங்கை தள்ளி வைத்த ராயல் என்பீல்ட் நிறுவனம், அதற்கான தேதி வெளியிட்டது. இந்த பைக்கை டெலிவரி எடுக்கும் போது மன மகிழ்ச்சியை உருவாக்கவில்லை; மன அழுத்தத்தையே ஏற்படுத்தியது. இந்த பைக்கை புக்கிங் செய்தவர்கள் அனைவரும் பணக்காரர்கள் அல்ல. வங்கி கடன் பெற்றே இந்த பைக்கை புக்கிங் செய்தோம். இருந்தபோதும், யாரும் பைக்கை டெலிவரி எடுக்கும் போது மகழ்ச்சி அடைய செய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

You May Like:சுசூகி V-ஸ்டார்ம் 650 XT இந்தியாவில் அறிமுகமாகிறது ; ஆரம்ப விலை ரூ.7.5 லட்சம்

இதற்கு பதிலளித்த ராயல் என்பீல்ட் நிறுவனம், நாங்கள் எதற்காக இதுபோன்று நினைக்கிறீர்கள் என்பதை புரிந்து கொண்டோம் என்றும், ஆனாலும், உங்களது விலை குறைப்பு கோரிக்கை குறித்து எதுவும் செய்ய முடியாது என்றும் தெரிவித்தனர். மேலும் பெகாசஸ் 500cc மற்றும் சிக்னல் இரண்டு ஒரே பிளாட்பார்மை பகிர்ந்து கொண்டன, ஆனால், அவற்றின் தனித்தன்மை மற்றும் டிசைன்களில் மாற்றுபட்டிருக்கும் என்று தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

இதை தொடர்ந்து உரிமையாளர்கள், பெகாசஸ்-ஐ குப்பை சேகரிக்கும் பணிக்கு கொடுக்க முடிவு செய்தனர். தொடர்ந்து பேசிய வாடிக்கையாளர்கள், நாம் அனைவரும் பெகாசஸ் மோட்டார் சைக்கிள்கல் அந்த பகுதியை சேர்ந்த முனிசிபாலிட்டிகளின் ஸ்வஷ் பாரத் அபியன் பணிகளுக்கு அளிக்க வேண்டும். நிறுவனம் வாடிக்கையாளர்களை மதிக்கவில்லை. இதன் மூலம் நிறுவனம் தனது விற்பனையை அதிகரிக்கவே நினைக்கிறது. நிறுவனம் தங்களை பெருமைகளில், பிடிவாதமாக இருந்தால், நாங்களும் எங்கள் முடிவில் பிடிவாதமாக இருப்போம்.

You May Like:மஹிந்திரா மராஸ்ஸோ இந்தியாவில் அறிமுகமானது, விலை ரூ. 9.9 லட்சம்

பெகாசஸ் உரிமையாளர்கள் அனைவரும் இதே போன்று தங்கள் கோபத்தை காட்ட வேண்டும். இதன் மூலம் நிறுவனத்தின் இதுபோனற செயல்கள் தடுக்கப்படும். ராயல் என்பீல்ட் நிறுவனம் ABS-ஐ பெகாசஸ் மோட்டார் சைக்கிளிலும் இணைக்க வேண்டும். விலைகள் குறைக்கப்பட வேண்டும். என்னென்றால், 350cc மற்றும் 500cc மோட்டார் சைகிள் களுக்கான விலைகள் 50 ஆயிரம் அதிகமாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

2.4 லட்ச ரூபாய் மதிப்புள்ள ராயல் என்ஃபீல்ட் பெகாசஸ் 500-ஐ குப்பை தொட்டியில் அதன் உரிமையாளர் வீசியுள்ளது, அவர் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்திற்கு வெற்று அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது.