2019 ஜனவரியில் 70,000-க்கும் மேற்பட்ட பைக்களை விற்பனை செய்தது ராயல் என்பீல்ட்

Royal Enfield January 2019 sales in India

ராயல் என்பீல்ட் நிறுவனம் 70,000-க்கும் மேற்பட்ட பைக்களை இந்தாண்டின் ஜனவரி மாதத்தில் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. மொத்தமாக 72 ஆயிரத்து 701 மோட்டார் சைக்கிள்களை, உள்நாடு மற்றும் ஏற்றுமதி மார்க்கெட்டில் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதேகால கட்டத்தில் இந்த விற்பனை 7 சதவிகிதமாக குறைந்திருந்தது.

ராயல் என்பீல்ட் நிறுவனம் உள்நாட்டு மார்க்கெட்டில் மட்டும், 70 ஆயிரத்து 872 மோட்டார் சைக்கிள்களை இந்த 2019ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2018ம் ஆண்டை ஒப்பிடும் போது இந்த விற்பனை 76 ஆயிரத்து 205-ஆக இருந்தது. சர்வதேச விற்பனையும் இந்தாண்டின் ஜனவரி மாதத்தில் 1,829 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. இதே கடந்த 2018ம் ஆண்டில் 1,673 மோட்டர் சைக்கிள்களாக இருந்தது.

Royal Enfield January 2019 sales

You May Like:இந்தியாவில் அறிமுகமானது 2019 சுசூகி வி-ஸ்ட்ரோம் 650XT ABS; விலை 7.46 லட்சம்

கடந்த 2018ம் ஆண்டின் ஏப்ரல் மாதம் முதல் ஜனவரி 2019ம் ஆண்டு வரை ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் மொத்த விற்பனை 5 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஓராண்டுக்கு முன்பு 6 லட்சத்து 71 ஆயிரத்து 328 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்த இந்த நிறுவனம். 2018-19ம் ஆண்டில் 7 லட்சத்து 2 ஆயிரத்து 637-ஆக உயர்ந்தது. 2018 ஏப்ரல் முதல் 2019 ஜனவரி மாதம் வரையிலான உள்நாட்டு விற்பனை, 5 சதவிகிதம் உயர்ந்து, 6 லட்சத்து 55 ஆயிரத்து 667 முதல் 6 லட்சத்து 86 ஆயிரத்து 773-ஆக உயர்ந்தது. சர்வதேச விற்பனை இதே கால கட்டத்தில் ஒரு சதவிகிதம் உயர்ந்து 15 ஆயிரத்து 661 முதல் 15 ஆயிரத்து 864 யூனிட்களாக இருந்தது.

2019 January Royal Enfield Sales

You May Like:ரூ. 1.15 லட்ச விலையில் அறிமுகமானது ஓகினாவா ஐ-ப்ரைஸ் இ-ஸ்கூட்டர்

ராயல் என்பீல்ட் நிறுவனம் தனது சர்வதேச விற்பனையை, புதிய 650 டூவின்களை அறிமுகம் செய்து மேம்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த பைக்கள் அமெரிக்க, ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசிய மார்க்கெட்களில் 2019ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் என்பீல்ட் இன்டர்செப்டர் 650 மற்றும் காண்டினேட்டல் GT 650 பைக்கள் இந்த நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடல்களாக வெளியாக உள்ளது. இந்த் பைக்கள் 648cc, பெர்லல் டூவின் இன்ஜின் கொண்டதாக இருக்கும் 650 டூவின்கள் ராயல் என்பீல்ட்டின் குளோபல் தயாரிப்புகளாகும். இந்த இரண்டு மாடல்களும், மிட்-சைஸ் மோட்டார் சைக்கிள்கள் வகையில், ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் குளோபல் விற்பனையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.