இந்தியாவில் அறிமுகமானது சுசூகி அக்சஸ் 125 சிபிஎஸ் டிரம் பிரேக் வகை; விலை ரூ. 56,667

Suzuki Access 125 CBS Drum Brake Variant

சுசூகி அக்சஸ் 125 ஸ்கூட்டர்கள் புதிய வகைகள் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் டிரம் பிரேக்களுடன் வெளியாகியுள்ளது. புதிய அக்சஸ் 125 CBS டிரம் பிரேக் வகைகளின் விலை 56 ஆயிரத்து 667 ரூபாயாகும் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்). இது ABS பொருத்தப்படாத வகைகளை விட 690 ரூபாய் அதிக விலை கொண்டதாக இருக்கிறது.

பாதுகாப்பு வசதிகளை பொறுத்தவரை, விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ள 125cc ஆற்றல் டூ-வீலர்களுக்கான விதிமுறைகளுக்கு உட்பட்டே இந்த ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், CBS டிரம் பிரேக் அல்லாத வகைகள் இன்னும் விற்பனையில் உள்ளன. அவற்றின் விலை 55 ஆயிரத்து 977 ரூபாயாகும். (எக்ஸ் ஷோரூம் விலை) மற்றும் இவை ஸ்டாக் உள்ள வரை விற்பனை செய்யப்படும் என்று தெரிய வந்துள்ளது.

Suzuki Access 125 CBS Launched in India

You May Like:2019 ஜனவரியில் 70,000-க்கும் மேற்பட்ட பைக்களை விற்பனை செய்தது ராயல் என்பீல்ட்

புதிய வரவாக வெளியாகியுள்ள சுசூகி அக்சஸ் CBS டிரம் பிரேக் வகைகள், டிஸ்க் வகைகளை விட 1,683 ரூபாய் விலை குறைவாகும். அக்சஸ் 125 ஸ்கூட்டர்கள், 125cc ஸ்கூட்டர் வகைகளில் வாடிக்கையாளர்களை கவருவதுடன், இதன் விலையும் போட்டி நிறுவனங்களை விட குறைவாக இருப்பதால் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்று தெரிய வந்துள்ளது. இதுமட்டுமின்றி இந்த வகை ஸ்கூட்டர்களான ஹோண்டா ஆக்டா 125, ஹீரோ டெஸ்டினி, ஹோண்டா க்ராஸ்யா, டி.வி.எஸ் என்டோர்ஸ் போன்றவைகளுக்கு போட்டியாக இருக்கும்.

CBS பொருத்தப்பட்டுள்ளது தவிர்த்து, சுசூகி அக்சஸ் ஸ்கூட்டரில் எந்த மெக்கானிக்கல் மாற்றமும் செய்யப்படவில்லை. இவை 125cc ஆற்றலுடன் 8.5bhp ஆற்றலில் 7,000 rpm-லும், 10.2Nm பீக் டார்க்கில் 5,000rpm-லும் இயங்கும்,. இந்த மோட்டார்கள் CVT யூனிட் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

You May Like:ரூ. 1.15 லட்ச விலையில் அறிமுகமானது ஓகினாவா ஐ-ப்ரைஸ் இ-ஸ்கூட்டர்

இந்த ஸ்கூட்டரின் எடை 101 Kg (மொத்தமாக) இருக்கும் என்ற போதும் இது இந்த வகையில் லேசான எடை கொண்டாதாகவே இருக்கும். இந்த ஸ்கூட்டரின் சஸ்பென்சனை பொறுத்தவரையில், முன்புறம் டெலஸ்கோபிக் போர்களும் பின்புறம் மோனோஷாக்-ம் பொருத்தப்பட்டுள்ளது. டாப்-என்ட் வகை அக்சஸ் ஸ்கூட்டர்கள் முன்புறம் டிஸ்க் பிரேக்கை பெற்றிருக்கும்.