சுசூகி V-ஸ்டார்ம் 650 XT இந்தியாவில் அறிமுகமாகிறது ; ஆரம்ப விலை ரூ.7.5 லட்சம்

சுசூகி V-ஸ்டார்ம் 650 XT மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மோட்டார் சைக்கிளின் விலை 7.5 லட்ச ரூபாயாக (எக்ஸ் ஷோரூம் விலை) இருக்கும். சுசூகி டீலர்கள், V-ஸ்டார்ம் 650 மோட்டார் சைக்கிள்களுக்கான புக்கிங் தொடங்கப்பட்டு விட்டது. இந்த மோட்டார் சைக்கிளை வாங்குபவர்கள், டீலர்களிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


ஜப்பானிய மோட்டார் சைக்கிள் பிராண்டான சுசூகி நிறுவனத்தின் அடுத்த அறிமுகம் V-ஸ்டார்ம் 650 மோட்டார் சைக்கிள்களாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. V-ஸ்டார்ம் 650 மோட்டார் சைக்கிள்கள் முழுமயான இந்தியாவில் அசம்பில் செய்யப்பட்டவை. இது 645cc, லிக்யுட்-கூல்டு, நான்கு ஸ்டிரோக், V-டுவின் இன்ஜின் கொண்டதாக இருக்கும். இந்த இன்ஜின் 70bhp ஆற்றலுடன் 8,800rpm கொண்டதாகவும் உச்சபட்ச பீகில் 66Nm டார்க்யூ கொண்டதாக இருக்கும் V-ஸ்டார்ம் 650 XT மோட்டார் சைக்கிள்களின் குறைக்கப்பட்ட எடை 213kg-யாக இருக்கும்.

You May Like:விரைவில் வெளி வருகிறது ஜீப் காம்பஸ் பிளாக் பேக் பதிப்பு

சர்வதேச அளவில் சுசூகி V-ஸ்டார்ம் 650 மோட்டார் சைக்கிள்கள், ஸ்டாண்டர்டு V-ஸ்டார்ம் 650 மற்றும் V-ஸ்டார்ம் 650 XT என இரண்டு வகைகளை கிடைக்கிறது. ஸ்டாண்டர்ட் வகைகள், அலுமினியம் அலாய் வீல்களுடன், பிரிட்ஜ்ஸ்டோன் பேட்டில் விங் டயர்கள் கொண்டதாக இருக்கும். XT வெர்சன்களில், அலுமினியம் வீல்களுடன் ஸ்டையின்லெஸ் ஸ்டில் போகஸ்கள், டியூப்லெஸ் பிரிட்ஜ்ஸ்டோன் பேட்டில்எக்ஸ் அட்வென்ச்சர் டயர்களை கொண்டதாக இருக்கும், மேலும் XT வகை மோட்டார் சைக்கிள்களில், பிளாடிக் பாதுகாப்பு கொண்ட முன்புற ஹெட்டர் பைப் மற்றும் இன்ஜின் கேசஸ்கள் பொருத்தப்பட்டுள்ளது இதுமட்டுமின்றி வழக்கமாக இடம் பெறும் ஹேண்ட் கார்டு மற்றும் அதிக அதிர்வை குறைக்கும் பார்களும் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில், சுசூகி நிறுவனம் ஸ்டாண்டர்டு V-ஸ்டார்ம் 650 வகைகள் மட்டுமே அறிமுகம் செய்ய உள்ளது. இது பிளாக் மற்றும் மஞ்சள், பிளாக் மற்றும் ஒயிட் என டுயல் கலர் டோனில் கிடைக்கிறது.

You May Like:மஹிந்திரா மராஸ்ஸோ இந்தியாவில் அறிமுகமானது, விலை ரூ. 9.9 லட்சம்

சுசூகி V-ஸ்டார்ம் 650 XT மோட்டார் சைக்கிள்கள், 18 இன்ச் பிராண்ட் வீல் மற்றும் 17 இன்ச் ரியர் வீல் மற்றும் வழக்கமான டுயல் சேனல் ABS ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த ABS-களை சுவிட்ச் ஆப் செய்ய முடியாது. இதில் இடம் பெற்றுள்ள எலெக்ட்ரானிக் வசதிகளை பொறுத்தவரை, V-ஸ்டார்ம் 650 XT மோட்டார் சைக்கிள்களில் இரண்டு-லெவல் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதை தேவைப்பட்டால் சுவிட்ச் ஆப் செய்து கொள்ள முடியும். சுசூகி V-ஸ்டார்ம் 650 XT மோட்டார் சைக்கிள்கள், கவாசாகி வெர்சிஸ் 650-க்கு போட்டியாக இருக்கும், ஏன்என்றால் கவாசாகி வெர்சிஸ் 650 மோட்டார் சைக்கிள் 6.6 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) விலையில் கிடைக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


V-ஸ்டார்ம் 650 XT மோட்டார் சைக்கிள்கள், இந்தியாவில் அசம்பில் செய்யப்பட்ட மூன்றாவது பெரிய சுசூகி மோட்டார் சைக்கிளாகும். இதற்கு முன்பு சுசூகி ஹயபுசா மற்றும் சுசூகி GSX-S750 ஆகியவை இந்தியாவில் அசம்பில் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.