பெட்ரோல் செலவை குறைக்க இதுவே வழி: நிதி ஆயாக் யோசனை

Electric two-wheeler

அடுத்த ஐந்து ஆண்டுகளில் எரிபொருள் செலவை 1.2 லட்சம் கோடி ரூபாய் வரை குறைக்க, டூவிலர்களை, எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றுவதே சிறந்த வழியாக இருக்கும் என்று நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 170 மில்லியனுக்கு மேற்பட்ட டூவிலர்கள் உள்ளன. இந்த வாகனங்களால் நாள் ஒன்றுக்கு அரை லிட்டருக்கும் மேற்பட்ட பெட்ரோல் செலவிடப்படுகிறது இது ஆண்டுக்கு 200 லிட்டராக இருக்கலாம். மொத்தமாக பார்க்கையில் இந்த வாகனங்கள் மூலம் 34 பில்லியன் லிட்டர் செலவாகிறது. என்று தெரிவித்துள்ள நிதி ஆயோக், இதை குறைக்க, “ஜீரோ எமிஷன் வாகனங்கள்: ஒரு கொள்கை கட்டமைப்புக்கு நோக்கி” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


Electric Scooter

You May Like:இந்திய வரலாற்றில் முதல் முறையாக உச்சத்தை தொட்ட பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 ரூபாயாக இருக்கும் போது, இந்த செலவு 2.4 லட்சம் கோடியாக இருக்கும். இது நாட்டில் இறக்குமதி செய்யப்படும் குருட் ஆயில் விலையில் பதியாக இருக்கும் (வரிகள் மற்றும் மற்ற செலவுகள் மீதி 50 சதவிகிதமாக இருக்கும்). இதனால், புதிய கொள்கையை பயன்படுத்தி 1.2 லட்சம் கோடி மதிப்பு கொண்ட இறக்குமதி ஆயிலை சேமிக்க முடியும் என்றும் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Electric Scooter1

You May Like:பைக்கை குப்பையில் வீசியவரை கவரும் புதிய பைக்?

மேலும் அந்த அறிக்கையில், மேற்குறிய கொள்கையை சரியாக கடைபிடித்தால், அடுத்த ஐந்து ஆண்டு முதல் ஏழு ஆண்டுகளில் இதை அடைய முடியும். ஆனால், இந்த கொள்கையை அடைய நவீன தொழில்நுட்பங்களை, முறையாக கடைபிடிக்க வேண்டும். இதற்காக எலெக்ட்ரிக் வாகன திட்டத்தை முறைபடுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், எலெக்ட்ரிக் வாகன கொள்கையை, நரேந்திர மோடி வெளியிட பின்னர், இந்த கொள்கையை அறிமுகம் செய்வது முழு வீச்சில் தொடங்கியுள்ளது. இந்தியாவில், இந்த கொள்கையை அறிமுகம் செய்ய தேவையான நடவடிக்கைகளை தொடங்கப்பட்டு விட்டதாக நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

இதுமட்டுமின்றி ஆயில் இறக்குமதி செலவை தொடர்ச்சியாக குறையும். இன்டர்னல் கம்போஸ்டன் இன்ஜின் வாகனங்கள், இந்த கொள்கைகளை அடைய முக்கிய காரணமாக இருக்கும். எலெக்ட்ரிக் வாகனங்கள், கண்டிப்பாக சுற்றுச்சூழல் மற்றும் காற்றின் தரத்தை உயர்த்தும் என்பது உறுதியாகும் என்றும் நிதி ஆயோக் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
electric-two wheeler

You May Like:பைக்கை குப்பையில் வீசியவரை கவரும் புதிய பைக்?

புதிய முயற்சிகளை ஏற்று கொள்வதற்கான கொள்கைகள், இந்த புதிய தொழில்நுட்பதை பயன்படுத்த ஊக்கமளிக்கும். இதன் மூலம் இந்திய தொழில்துறைகள் உலக நாடுகளுடன் போட்டியிட்டு, இந்த தொழில்நுட்பங்களை ஏற்று கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
electric two wheeler rear

You May Like:டாட்டா நெக்ஸான் க்ராஸ் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ. 7.14 லட்சம்?

“மூவ்: உலகளாவிய மொபைலிட்டி உச்சி மாநாடு” என்ற திட்டத்தை பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக துவக்கிய பின்னர், மொபைல் புரோகிராமை கொண்டு வருவதற்காக, இந்தியாவுக்கு பயனளிக்கும் வகையில் இருப்பதோடு, பெரியளவில் பொருளாதரத்தை உயர்த்தவும் உதவதோடு, தனியார் கார் உரிமையாளர்கள் எண்ணிக்கையையும் உயர்த்தும். மேலும் புதிய மொபைல் எக்கோ சிஸ்டத்தை உருவாக்கவும் உதவும் என்று அவர் கூறினார்.