ரூ. 55,936 விலையில் அறிமுகமானது டி.வி.எஸ் ஜுபிடர் கிராண்ட் சிறப்பு பதிப்பு

TVS Jupiter Grande special edition

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது தயாரிப்பான ஜுபிட்டர் ஸ்கூட்டர் வகையில் புதிய படைப்பாக சிறப்பு எடிசன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய எடிசன் ஸ்கூட்டர் “ஜுபிட்டர் கிராண்ட்” என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய ஸ்கூட்டர்களில் டிரம் பிரேக் பொருத்தப்பட்டவை 55 ஆயிரத்து 936 ரூபாய் விலையிலும், டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டவை 59 ஆயிரத்து 648 ரூபாய் விலையிலும் விற்பனை வந்துள்ளது. மேற்குறிய இரண்டு விலைகளும் டெல்லியில் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
TVS Jupiter Grande special edition details

You May Like:அறிமுகமானது டாட்சன் கோ மற்றும் கோ+ ஃபேஸ்லிஃப்ட்

டிவிஎஸ் ஜுபிட்டர் கிராண்ட் ஸ்கூட்டர்களில் LED ஹெட்லைட் மற்றும் பொசிஷன் லேம்ப்களும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் எக்னோ மீட்டருடன் கூடிய டிஜிட்டல் அனலாக் மீட்டரையும் கொண்டுள்ளது. இந்த ஜுபிட்டர் கிராண்ட்டில் முதல் முறையாக டைமண்ட் கட் அலாய் வீல்களுடன், எளிதாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான ஷாக் அப்சார்கள் பொருத்தப்பட்டுள்ளதாக, டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. டி.வி.எஸ். ஜுபிடர் கிராண்ட் சிறப்புப் பதிப்புகளுக்கான புக்கிங்கள் நாடு முழுவதிலும் உள்ள டிவிஎஸ் டீலர்ஷிப்களில் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. இந்த ஸ்கூட்டர்களுக்கான டெலிவரி விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You May Like:பெட்ரோல் விலை ரூ100ஐ தொட்டால் ஏற்படும் புதிய பிரச்சினை?

டி.வி.எஸ். ஜுபிடர் கிராண்ட் சிறப்புப் பதிப்பு ஸ்கூட்டர்கள், ஸ்டாரோலைட் ப்ளூ கலருடன் பிரிமியம் கிராஸ்-ஸ்டிச்டு மெரூன் சீட் மற்று மற்றும் கிராண்ட் பேட்ஜ் உடன் கிடைக்கிறது. இதுமட்டுமின்றி இதில் பீகி பேணல்கள், பாடி கலரில் பில்லியன் ஹேண்டில் மற்றும் குரோம் ஹைலைட்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளது, இந்த ஸ்கூட்டரை அதிக அழகு நிறைந்ததாக மாற்றியுள்ளது என்று டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிவிஎஸ் ஜுபிட்டர் ஸ்கூட்டர்கள் கடந்த 2013ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இந்த ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்ட 30 மாதங்களில் ஒரு மில்லியன் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. டிவிஎஸ் ஜுபிட்டர்கள், பேஸ், ZX (டிஸ்க் மற்றும் டிரம்) மற்றும் கிளாசிக் என மூன்று வகைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

You May Like:ரியல்-டைம் கஸ்டமர் மானிட்டரிங் சேவையை தொடங்கியது ஓலா

டிவிஎஸ் ஜுபிட்டர் கிராண்ட் ஸ்கூட்டர்கள், வாடிக்கையாளர்களுக்காக அறிமுக படுத்தியுள்ள இந்தாண்டு ஆண்டுக்கான நவீன எடிசன் ஸ்கூட்டராகும். இந்த டிவிஎஸ் ஜுபிட்டர் கிராண்ட் ஸ்கூட்டர்களில் LED டெக் ஹெட்லேம், அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான ஷாக் அப்சார்பர்கள், டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், டைமண்ட் கட் அலாய் வீல் மற்றும் ஸ்டாரோலைட் ப்ளூ கலருடன் இந்த ஸ்கூட்டர் ‘Grand Irradon ki grand safari’-ஐ வாடிக்கையாளர்களுக்கு அளிக்க உள்ளது.

டி.வி.எஸ். ஜுபிடர் கிராண்ட் சிறப்புப் பதிப்பு குறித்து பேசிய டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் பயணிகள் மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் கார்ப்பரேட் பிராண்ட் துணைத்தலைவர் அனிருத்த ஹால்டர், வாடிக்கையாளர்களுக்காக ஆண்டுதோறும் நாங்கள் புதிய பிரான்ட் தீம்-ஐ உருவாக்கி வருகிறோம். இந்தாண்டுகான தீம் “பெற்றோர்கள்” என்று அழைக்கப்பட்படுகிறது. பெற்றோர் தனது குழந்தைகளை பார்த்து கொல்வதில் பெரியளவில் வெற்றி பெற்றுள்ளதை குறிக்கும் வகையில், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், டிவிஎஸ் ஜுபிட்டர் கிராண்ட் உருவாக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளை தெரிந்து கொள்ள இந்த ஸ்கூட்டரை ஒட்டி பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.