யமஹா எம்.டி -15 பைக்களுக்கான புக்கிங் தொடங்கியது

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள யமஹா டீலர்ஷிப்களில், வரும் மார்ச் மாதம் முதல் விற்பனைக்கு வர உள்ள MT-15 பைக்களுக்கான புக்கிங் ஏற்று கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தாண்டை FZ V3.0 உடன் தொடங்கியுள்ள யமஹா மோட்டார் இந்தியா, தனது MT-15 பைக்களை இந்தாண்டின் பிற்பகுதியில் கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளை செய்து வருகிறது. யமஹா MT -15 பைக்கள், பிரபலமான YZF-R15 பைக்களின் நெக்ஸ்ட் வெர்சனாகும். மேலும் இந்த பைக்கள் வரும் மார்ச் 15-ம் தேதி விற்பனைக்கு வர உள்ளது.

அதிகாரபூர்வ அறிமுகத்திற்கு முன்பு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள யமஹா டீலர்கள், விரைவில் வெளியாக உள்ள இந்த பைக்களுக்கான புக்கிங்கை தொடங்கியுள்ளனர். இருந்தபோதும், அதிகாரபூர்வ புக்கிங் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மும்பை, புனே, டெல்லி மற்றும் மற்ற நகரங்களில் உள்ள டீலர்கள் 5,000 ரூபாய் டோக்கன் அட்வான்ஸ் பெற்று கொண்டு புக்கிங் செய்து வருவதாகவும் இந்த பைக்களுக்கான டெலிவரி வரும் ஏப்ரல் மாதம் இருக்கலாம் என்பதும் உறுதியாகியுள்ளது.

Yamaha MT-15 India launch

You May Like:2019 ஹோண்டா CBR400R ஸ்போர்ட்டி லுக்கில் வெளியானது

யமஹா எம்.டி -15 பைக்கள் R15 பைக்களுடன் பல்வேறு வகையில் ஒத்து இருப்பதுடன், அழகிய வடிவில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் டிசைன், ஏலியன்களால் கவரப்பட்டு அவற்றை போன்ற ஹெட்லேம்ப் கவுல்கள், பெரியளவிலான MT-10 மற்றும் MT-09 பைக்களில் இருந்து பெறப்பட்டதாக இருக்கும். மேலும் இந்த பைக்களில், முழு LED டூயல் ஹெட்லேம்ப் செட்டப் உள்ளது. இதுமட்டுமின்றி முழு டிஜிட்டல் இன்ஸ்டுரூமென்ட் கன்சோல், டெலஸ்கோப்பிக் முன்புற போர்க் மற்றும் பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன்களையும் கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் இந்திய ஸ்பெக் R15-ல் பெறப்பட்டதாக இருக்கும்.

சர்வதேச அளவில், MT-15 பைக்கள் அதிக வசதிகளுடன் USD போர்க்கள் பொருத்தப்பட்டு இருந்தது. ஆனால், இதே போன்ற வசதிகள் இந்தியாவில் வெளியாகும் போது விலையை கருத்தில் கொண்டு கிடைக்காது என்றே தெரிகிறது. ஆற்றலை பொறுத்தவரை எம்.டி -15 பைக்கள் 155cc சிங்கிள் சிலிண்டர், லிக்யுட் கூல்டு இன்ஜின்களுடன் வெரியபுல் வால்வ் ஆக்சலரேஷன் (VVA)-வை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இவை R15 v3.0-வில் பொருத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மோட்டார் 19bhp மற்றும் 15 Nm டார்க் ஆற்றலை உருவாக்கும் வகையில் டூயூன் செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி R15 ஆற்றல் அளவு, தவிர மற்றவை அனைத்தும் MT-15ல் உள்ளன. மேலும் இந்த மோட்டார் 6-ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி வழக்கம் போலவே டூயல்-சேனல் ABS கிடைக்கும்.

Yamaha MT-15 bookings commences

You May Like:இந்தியாவில் அறிமுகமானது 2019 சுசூகி வி-ஸ்ட்ரோம் 650XT ABS; விலை 7.46 லட்சம்

யமஹா MT-15 பைக்கள் R15 ரைடிங் பொஷிசனை விட தற்போது மிகவும் ரிலாக்ஸாக ஒட்டி செல்ல வசதியாக, உயர்த்தப்பட்ட ஹேண்டில்பார் மற்றும் சென்டர் செட் புட் பேக்ஸ், ஆகியவை R15 போன்றே டிசைன் செய்யப்பட்டுள்ளது. MT-15 விரைவாக செல்லவும், விளையாட்டு ரைடுகளுக்கும் ஏற்றதாக இருப்பதுடன், சிலிக் தோற்றம் கொண்ட மோட்டார் சைக்கிளாகவும் டிசைன் செய்யப்பட்டுள்ளது

MT-15 பைக்களின் விலை இன்னும் வெளியாகவில்லை என்றபோதும் இந்த பைக்களின் விலை 1.20 முதல் 1.25 லட்சம் ரூபாயாக (எக்ஸ் ஷோரூம் விலை) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலையை ஒப்பிடும் போது, இந்த பைக்கள் R15-ஐ விட குறைந்த விலை கொண்டதாக இருப்பதுடன், கேடிஎம் 125 டியூக் பைக்களுக்கு போட்டியாக இருக்கும்.