யமஹா எம்டி-15 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ.1.36 லட்சம்

Yamaha MT-15 launched in India

முற்றிலும் புதிய 2019 யமஹா எம்டி -15 பைக்கள் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்களின் விலை 1.36 லட்ச ரூபாயாகும் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்). இந்த ஸ்ட்ரீட் பைட்டர் மோட்டார் சைக்கிள்கள், மிகவும் புதிதாகவும், அதிக வசதிகளுடன் யமஹா இந்தியா நிறுவனம் எம்டி வகை பைக்கலை வெளியிட்டுள்ளது. இதுவரை எம்டி -09 வகைகள் மட்டுமே வெளியாகியுள்ளது. இந்நிலையில் புதிய பைக்கள் CBU ரூட் வழியாக இந்தியாவிற்குள் வந்துள்ளது.

யமஹா நிறுவனம் புதிய யமஹா எம்டி -15 பைக்களை தற்போது நடத்தி வரும் ப்ளூ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே வெளியிட்டுள்ளது. இதில் மூன்று மோட்டார் சைக்கிள் இந்தியாவுக்கு வந்துள்ளது. இதில் R-சீரிஸ், FZ சீரிஸ் மற்றும் தற்போது MT சீரிஸ் போன்றவைகளை உள்ளடக்கியதாக இருக்கும். புதிய யமஹா எம்டி -15 பைக்கள், டிவிஎஸ் அப்பச்சி RTR 200 4V மற்றும் கேடிஎம் 125 டியூக் பைக்களுக்கு போட்டியாக இருக்கும்.

Yamaha MT-15 launched in India

You May Like:ஹார்லி-டேவிட்சன் 48 ஸ்பெஷல் மற்றும் ஸ்ட்ரீட் கிளைடு ஸ்பெஷல் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ.10.98 லட்ச ரூபாய் முதல்

புதிய யமஹா எம்டி -15 பைக்கள் குறித்து பேசிய யமஹா மோட்டார் இந்தியா தலைவர் மோட்டோபூமி ஷித்திரா, இந்தியாவில் மோட்டார் சைக்கிள்களில் ரைடர்களுக்கான புதிய டிரெண்டை உருவாக்கி அதில் அவர்கள் விரும்பும் ஸ்பீட் மற்றும் கண்ட்ரோல்களையும் நிறைவு செய்யும் வகையில் எம்டி -15 பைக்கள் உள்ளன.

இந்த புதிய எம்டி -15 பைக்களை அறிமுகம் செய்வதில் எங்கள் பிராண்ட் மகிழ்ச்சி அடைவதுடன், வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதிகளுடன், ஸ்டைல் மற்றும் ஸ்போர்ஸ் பைக் தோற்றம் கொண்ட டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும் இவை தனித்துவம் கொண்ட டார்க் மற்றும் அழகிய டிசைன்களுடன் இஞ்சினியரிங் செய்யப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் விற்பனை செய்யப்பட்ட M-15 பைக்களை ஒப்பிடும் போது, இந்திய-ஸ்பெக் மாடல்கள் பல்வேறு மாற்றங்களுடன் வெளியாகியுள்ளது. முக்கியமாக இதில் பல்வேறு வசதிகள் மட்டுமின்றி பெரியளவிலான உபகரணங்கள் லிஸ்ட்டும் உள்ளது.

Yamaha MT-15 India Launch

You May Like:2019 ட்ரையம்ப் டைகர் 800 XCA, ரூ.15.16 லட்ச விலையில் அறிமுகமானது

வெளிப்புறமாக பார்க்கும் போது, இந்த பைக்கள், சர்வதேச MT வகை பைக்கள் போன்று, அதிக ஆர்ப்பாட்டமான தோற்றத்துடன், உறுதியான ஸ்டைல்களுடன், டுவின் ஹெட்லேம்களுடன் வெளியாகியுள்ளது.

இந்த பைக்களின் பின்புறத்தில், குறுகிய வால் பகுதியில் வெர்டிக்கல் டைல்லைட்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கள் டார்க் மேட் ப்ளூ மற்றும் மெட்டாலிக் பிளாக் என இரு கலர் ஆப்சன்களில் வெளி வந்துள்ளது. கூடுதலாக இந்த பைக்கள், வழக்கமான டூவின் போர்க்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்தோனேசிய ஸ்பெக் மாடல்களில் இடம் பெற்ற USD போர்க்களுக்கு பதிலாக இதில் மோனோஷாக் சஸ்பென்ஷன்கள் பைக்கின் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கில் 282mm முன்புற டிஸ்க் பிரேக் மற்றும் சிங்கிள் சேனல் ABS யூனிட்களுடன் வெளியாகியுள்ளது.

You May Like:யமஹா ஃபாசினோ டார்க் நைட் பதிப்பு அறிமுகமானது; விலை ரூ. 56,793

ஆற்றலை பொறுத்தவரை எம்டி -15 பைக்கள், 155cc லிக்யுட் கூல்டு SOHC இன்ஜின்களுடன் மாறுபடும் வால்வ் அகட்யூசன் சிஸ்டம் மற்றும் சிலிப்பர் கிளட்ச்களும் உள்ளன. இவை, அழகிய மற்றும் சிறந்த செயல்திறன்களுக்காக, மற்ற பைக்களை விட சிறிதளவு டூயூன் செய்யப்பட்டுள்ளது.

இந்த பைக்கள் 19bhp மற்றும் 14.7 Nm பீக் டார்க்கில் இயங்குவதுடன், 6 ஸ்பீட் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும். யமஹா நிறுவனம் தனது இறுதி விகிதங்களை மாற்றி ECU செட்டிங்கை செய்து குறைந்த ஆற்றல் மற்றும் மத்திய தர ஆற்றலுடன் செயல்பட வைக்கிறது. இருந்தபோதும், மேலும் பைக்குள் எம்டி-15 பைக்கள் R15 பைக்களை விட அதிக ஆற்றல் கொண்டதாக இருக்கும். அதிக வேகம் கொண்ட பைக்கள் மற்ற பைக்களை விட அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.