Rs.1.30 லட்ச விலையில் வெளியானது யமஹா R15 V3 மோட்டோ ஜிபி பதிப்பு

Yamaha R5 V3 Moto GP Edition Car News

யமஹா நிறுவனம் புதிய முயற்சியாக, YZF-R15 பதிப்பு 3.0 மோட்டோ ஜி.பி. லிமிடெட் பதிப்பு மாடல் மற்றும் FZS-FI ஆகிய இரண்டு புதிய வண்ணங்களில் பின்புற டிஸ்க் ப்ரேக் உடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்குகளின் விலைகள், வழக்கமான பைக்குகளை விட முறையே 3000 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் அதிகமாக இருக்கும்.

Yamaha R5 V3 Moto GP News in Tamil

இந்த பைக், வழக்கமான R15 V3 இன்ஜின் மூலம் இயக்கும். மேலும் இதில் 155cc, லிகியுட் கூல்டு, எரிபொருள்-இன்ஜெக்ஷன் மோட்டார் கொண்டது. இந்த மோட்டார் 19.03hp மற்றும் 10,000 rpm மற்றும் அதிகபட்ட 8500rpm-ல் 150Nm டார்க்யூ-வை உருவாக்கும். மேலும் இந்த பைக் 6-ஸ்பீட் கியர்பாக்ஸ்களுடன் சிலிப் மற்றும் அசிஸ்ட் கிளச் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கிளச்கள் வாகனத்தை லேசாகவும் மற்றும் எளிதாகவும் இயக்க வழி வகை செய்யும்.

Yamaha R5 V3 Moto GP Edition Car News in Tamil

FZS-FI பைக்குகளை ப்ளூ கோர் தொழில்நுட்பத்துடன் உருவாகியுள்ள யமஹா நிறுவனம், இதில் ரியர் டிஸ்க் உடன் இரண்டு மெகிரீன் மற்றும் டார்க் நைட் என இரண்டு கலர்களில் அறிமுகம் செய்துள்ளது, இந்த பைக்கில் செய்யப்பட்டுள்ள மாற்றம் என்னவென்றால், விஷ்வல் மற்றும் மெக்கானிக்கல் போன்றவைகள் ஒரே மாதிரியாக உள்ளது தான்.

Yamaha R5 V3 Moto

விலையை பொறுத்த வரை, யமஹா YZF-R15 மோட்டோ GP லிமிடெட் பதிப்பு 1.30 லட்ச ரூபாயிலும், ப்ளூ கோர் தொழில்நுட்பத்திற்கு FZ-S FI ரியர் டிஸ்க் 87,042 ரூபாயிலும் கிடைக்கிறது இந்த இரண்டும் விலையும் எக்ஸ் ஷோரூம் விலை,டெல்லியில் கிடைக்கும். YZF-R15 க்கான மோட்டோ சிபி லிமிடெட் பதிப்பிற்கான முன்பதிவுகள் செப்டம்பரில் தொடங்க உள்ளது.

Yamaha R5 V3 GP Edition

இந்நிலையில், யமஹா தனது சிக்னஸ் ரே ZR ஸ்ட்ரீட் ரேலி பதிப்பை தங்கள் டீலர்கள் மூலம் விற்பனை செய்ய தொடங்கியுள்ளது.

யமஹா R15 V3 மோட்டோ ஜி.பி.
– பைக் விலை Rs. 1.30 லட்சம் (எக்ஸ் ஷோரூம் விலை , டெல்லி)
– யமஹா ப்ளூ கோர் செயல்படுத்தப்பட்ட FZ-S FI பின்புற டிஸ்க் வேரியண்ட் Rs. 87,042 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி)
– மெக்கனிக்கல் முறையில் இரண்டு பைக்களும் ஒரே மாதிரியாக இருக்கும்.