கார் ஜன்னல்களில் பனிபடர்வதை தடுப்பது எப்படி?

கார் ஜன்னல்களில் பனிபடர்வதற்கான காரணம், காரில் உள்ளே சூடான, ஈரப்பதமான காற்று உறைந்து போவதேயாகும்,

நவீன கார்கள் குறிப்பாக பனிபடர்வதை தடுக்கும் முறையிலேயே வருகிறது. இந்த கார்களின் கேபின்கள் டைட்டாக மூடி கொள்வதால், சத்தம் மற்றும் தேவையில்லாத ஈரப்பத்தை தடுக்கிறது.

காரில் பொருத்தப்பட்டுள்ள பல வசதிகள் மூலம்,  கார் ஜன்னல்களில் பனிபடர்வதை தடுக்க முடியும். கார் ஜன்னல்களில் பனிபடர்வதை தடுக்க செய்ய வேண்டிய ஐந்து முக்கிய டிப்ஸ்கள்

Aircon-ஐ பயன்படுத்தல்

You May Like:அறிமுகமானது 2018 அப்ரிலியா எஸ்ஆர்150; விலை ரூ. 70,031

ஏர்கண்டிஷனை ஆன் செய்து குறைந்த வெப்பநிலையில் வைத்தால், காரின் உள்பகுதியில் வெப்பமான காற்று பரவும், இது ஈரப்பததை தடுத்து, கார் ஜன்னல்களில் பனிபடர்வதை தடுக்கும்.

demister-ஐ பயன்படுத்தல்

You May Like:நிசான் சன்னி ஸ்பெஷல் பதிப்பு அறிமுகம்; விலை ரூ. 8.48 லட்சம்

காரில் உள்ள demister-ஐ செயல்படுத்தினால், ஈரப்பதம் படிப்படியாக மறையும். நவீன காரில் demister ஏர்-கண்டிசனர் இணைந்தே செயல்படுகிறது. மேலும் வின்ட்-ஸ்கிரினை, பேன்-ஐ பயன்படுத்தி ஈரப்பத்தை காய வைக்க முடியும்.

இதுமட்டுமின்றி காலநிலை கட்டுபாட்டு சிஸ்டம் மூலம் காரின் கேபின் பகுதியில் காற்றை உள்ளே கொண்டு வர செய்யலாம். ஹீட்டர்களை பயன்படுத்தி ஈரப்பதமாக உள்ள கண்ணடிகளில் இருந்து ஈரப்பத்தை அகற்றலாம்.

வெளியே உள்ள காற்றை காரின் உள்ளே அனுமதித்தல்


ட்விட்டர் ல் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


பெரும்பாலனவர்கள் தங்கள் காரின் ரீசர்குலேஷன் வசதியை பயன்படுத்துவதே இல்லை. வெளியே உள்ள காற்று காரின் உள்ளே வர செய்வதால், காரின் உள்ளே ரீசர்குலேஷன் ஏற்படும். இதற்காக காரின் வென்ட், அல்லது ஜன்னல் கதவுகளை சிறிது நேரம் திறந்து வைக்க வேண்டும்.. இது கார் கண்ணாடிகளில் பனி படர்வதை தடுக்க உதவும்.

defrost-ஐ அழுத்துதல்

You May Like:ராஜ்புதன கஸ்டம்ஸ் ஸ்பெஷல் எடிசன்களாக இந்தியாவில் வெளியாகிறது டுகாட்டி மான்ஸ்டர் 797

காரின் ரியர் விண்டோகளில் பொருத்தப்பட்டுள்ள defrost-ஐ  அழுத்துவதன் மூலம், ஜன்னல் கண்ணாடிகள் சுத்தமாகும். defrost, எலக்ட்ரானிக் எல்மெண்டை பயன்படுத்தி கண்ணாடிகளை ஈரப்பததில் இருந்து காக்கிறது.

கார் கண்ணாடிகளை சுத்தமாக வைத்து கொள்ளுதல்

காரின் கண்ணாடிகளில் ஆயில், குப்பை, தூசு போன்றவை படாமல் பார்த்து கொள்ள வேண்டும். மேலும் காரின் கண்ணாடிகளில் படியும் தூசுகளுடன் சேர்ந்து  ஈரப்பதம் ஏற்பட்டால், அதை அகற்ற கடினமாகி விடும். எனவே, காரின் கண்ணாடிகளை, சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். கார் ஜன்னல்களை சுத்தமாக வைத்து கொள்வதால், அதில் பனிபடர்வதை தடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *