ரூ. 37.50 லட்ச விலையில் அறிமுகமானது 2018 பிஎம்டபிள்யூ X1 SDRIVE20I

BMW X1 Petrol Launched

பிஎம்டபிள்யூ X1 SDRIVE20I கார்கள், சிங்கள் வைப்ரன்ட்களுடன் BS-VI காம்பிளைன்ட் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்களுடன், 189bhp ஆற்றலை கொண்டுள்ளது.

You May Like:ரூ. 7.46 லட்சம் ரூபாயில் விற்பனைக்கு வந்தது 2018 சுசூகி வி-ஸ்ட்ரோம் 650 XT ABS

பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம், தங்கள் புதிய பெட்ரோல் வெர்சன் தயாரிப்பான X1 வகை எஸ்யூவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய காரின் விலை 37.50 லட்ச ரூபாயாகும். (எக்ஸ் ஷோ ரூம் விலை). இருந்தபோதும், பிஎம்டபிள்யூ X1 பெட்ரோல் கார்கள் BS-VI காம்பிளைன்ட் இன்ஜின்களை கொண்டுள்ளது. இந்த இன்ஜின்கள் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாத கெடுவுக்குள் அனைத்து புதிய வாகனங்களிலும் கொண்டு வரப்பட உள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 SDRIVE20I கார்களில் பிரத்தியோகமாக XLine டிசைன் வகைகளை கொண்டுள்ளது. இந்த டிசைன்கள் குறிப்பாக இந்த பிரீமியம் எஸ்யூவி மார்டன் ஸ்டைலை கொடுக்கும். பிஎம்டபிள்யூ கார்கள் X1 வெர்சனை போன்றே புதிய X1 பெட்ரோல் கார்களுடம் சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ குழுமத்தின் தயாரிப்பு ஆலையில் தயாரிக்கப்பட்டவையாகும்.
BMW X1 Petrol Dashboard

You May Like:அறிமுகமானது டாட்சன் கோ மற்றும் கோ+ ஃபேஸ்லிஃப்ட்

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 SDRIVE20I கார்கள், 2.0 லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் மோட்டார்கள், 189bhp மற்றும் உச்சபட்ச பீக் டார்க்கில் 280Nm ஆற்றலுடன், 1350-4600 rpm ஆற்றலுடன் விற்பனை வந்துள்ளது. இந்த இன்ஜின்கள் 7-ஸ்பீட் ஸ்டேப்டிரானிக் ஸ்போர்ட் ஆட்டோமேட்டிக் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. X1 பெட்ரோல் கார்கள் 0-100 kmph ஸ்பிரின்ட் 7.6 செகண்டுகள் ஆகும். இந்த காரின் அதிகபட்ச வேகம் 224 kmph ஆகும். இந்த பெட்ரோல் கார்களில் ஆல்-வீல் டிரைவ் இன்னும் வெளியாகவில்லை.

2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்1 SDRIVE20I கார்களில் இடம் பெற்றுள்ள பேட்ஜ் தவிர்த்து, வழக்கமான கார்களில் இடம்பெற்ற அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளது. இதுதவிர வேறு எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை. மேட் அலுமினியம் பினிஷ்களுடன் கூடிய உறுதியான கிட்னி கிரில்கள், அதிகளவிலான குரோம் இடம் பெற்றுள்ளது காருக்கு அழகிய வடிவமைப்பை அளிக்கிறது
sport utility vehicle

You May Like:உலகின் அதிவேகமான ஃபெராரி கார் இந்தியாவில் அறிமுகமானது

மேலும் இந்த கார்களில் 18 அங்குல ஒய்-ஸ்போக் அலாய் வீல்களும் பொருத்தப்பட்டுள்ளது. XLine டிசைன் டிரிம், அழகிய சன்ரூப்கள் மற்றும் ஆரஞ்சு மற்றும் வெள்ளை உள்ள பளபளப்பான சூரிய ஒளி மற்றும் சுற்றுச்சூழல் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி இந்த காரில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய வசதிகள் என்னவென்றால், பிஎம்டபிள்யூ X1 பெட்ரோல் கார்களில் லெதர் ஸ்டீயரிங் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இதில் சர்வொடின் ஸ்பீட்-சென்சிடிவ் ஸ்டியரிங் அசிஸ்டென்ஸ் மற்றும் பார்க்கிங் அசிஸ்டன்ட் மற்றும் சிறிய இடத்தில் காரை திரும்ப உதவும் வசதிகளையும் கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி 16.5cm டச் ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம், வயர்லஸ் ஆப்பிள் கார்பிளே, பார்கிங் டிஸ்டேன்ஸ் கண்ட்ரோல், பிஎம்டபிள்யூ ஆப், ப்ளுடூத் மற்றும் யூஎஸ்பி கனெக்டிவிட்டி போன்றவையும் இடம் பெற்றுள்ளன.

You May Like:ரூ.2.95 கோடி விலையில் இந்தியாவில் அறிமுகமானது 2019 ஆஸ்டன் மார்டின் வான்டேஜ்

இந்த எஸ்யூவி கார்களில் பாதுகாப்பு வசதிக்காக, ஆறு ஏர்பேக்ஸ், ABS, பிரேக் அசிஸ்டன்ட், டைனமிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டைனமிக் டிராக்ஷன் கண்ட்ரோல், கார்னரிங் பிரேக் கண்ட்ரோல், ஹில் டிசென்ட் கண்ட்ரோல், சைட் இம்பேக்ட் பாதுகாப்பு மற்றும் பல வசதிகள் இடம் பெற்றுள்ளது.

அனைத்து பிஎம்டபிள்யூ கார்களை போன்று X1 கார்களும், 50:50 எடை விநியோகம் மற்றும் குறைந்த அளவிலான புவியிர்ப்பு திறன் போன்றவற்றை கொண்டுள்ளது. இதன் மூலம் டிரைவிங் திறனை சிறப்பாக மாற்ற உதவும். மேலும் இந்த காரில் ஆட்டோ ஸ்டார்ட்/ஸ்டாப், எகோ புரோ மோடு, பிரேக் எனர்ஜி ரீஜெனரேசன் மற்றும் எரிபொருள் பயன்பாட்டை ஆக்கப்பூர்வமாக மாற்ற உதவும். இந்த புதிய பிஎம்டபிள்யூ X1 கார்கள், மெர்சிடிஸ் பென்ஸ் GLA, ஆடி Q3 மற்றும் வால்வோ XC40 போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும்.