ரூ 3.38 லட்ச விலையில் அறிமுகமானது 2018 டட்சன் கோ மற்றும் கோ பிளஸ்

2018 Datsun GO revealed

டட்சன் இந்தியா நிறுவனம் இறுதியாக 2018 டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேம்படுத்தப்பட்ட டட்சன் கோ கார் 3.29 லட்ச ரூபாயிலும், இதை விட அளவில் பெரிய டட்சன் கோ பிளஸ் கார் 3.83 லட்ச ரூபாயிலும் விற்பனைக்கு வந்துள்ளது. (அனைத்து எக்ஸ் ஷோ ரூம் விலை, டெல்லியில்)
2018 Datsun Go

You May Like:அறிமுகமானது 2018 டாடா டிகோர் ஃபேஸ்லிப்ட்; விலை ரூ. 5.20 லட்சம்

அறிவிக்கப்பட்டுள்ள விலைகள் இரண்டு கார்களின் அறிமுக விலையாகும். புதிய கோ வகை கார்கள் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் மேம்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, சில காஸ்மெடிக் அப்டேட்களும் செய்யப்பட்டுள்ளது. கோ மற்றும் கோ பிளஸ் கார்களில் பல்வேறு ஆடம்பர வசதிகளுடன், பாதுகாப்பு வசதிகளையும் கொண்டுள்ளது.

டட்சன் நிறுவனம் கோ மற்றும் கோ பிளஸ் இரண்டிலும் ஒரே மாதிரியான கேபின் டிசைன்களை கொண்டிருக்கும். இருந்த போதும், இரு கார்கள் இடையே உள்ள வேறுபாடு, சீட் அளவேயாகும்.

கோ வகை கார்களில் 5 சீட் ஹாட்பேக்கும், கோ பிளஸ்-சில் 7 சீட்களும் கொண்டதாக இருக்கும். தொழில்நுட்ப ரீதியாக பார்த்தால், கடைசி வரிசை சீட் வயது வந்தவர்களுக்கு ஏற்றதாக இருக்காது.
2018 Datsun GO revealed Dashboard

You May Like:ரூ. 2.19 கோடி விலையில் அறிமுகமானது புதிய 2018 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63

டட்சன் நிறுவன கார்களில் உள்அலங்காரங்கள் மிகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி புதிய டாஷ்போர்டுகளுடன், இன்ஸ்டுரூமென்ட் கிளச்சர் மற்றும் ட்ரிப் கம்ப்யூட்டர் MFD, சோர்வை ஏற்படுத்தாத முன்புற சீட்கள், குஷன்களுடன் கூடிய இன்ஸ்டுரூமென்ட் பேனல், முதல் முறையாக இந்த பிரிவில் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம், ஆண்டிராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, கூகிள் மேப் நேவிகேஷன், ஆப் சப்போர்ட் மற்றும் வாய்ஸ் மூலம் கட்டுபடுத்தப்படும் தொழில்நுட்பம் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது.

You May Like:அறிமுகமானது மாருதி சுஸுகி வேகன்ஆர் லிமிடெட் எடிசன்

இன்ஜின் ஆப்சன்களும் எந்த மாற்றமும் இல்லாமல் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்களுடன் 67 bhp ஆற்றல் மற்றும் 104 Nm உச்ச பட்ச டார்க்கியூவில் செயல்படும். இந்த மோட்டார், 5-ஸ்பீட் மெனுவல் கியர்பாக்ஸ்கள் வழக்கம் போலவே இடம் பெற்றுள்ளது. இந்தோனேசியாவில் ஸ்பெக் டட்சன் கார்களில் CVT ஆட்டோமேட்டிக் ஆப்சன்கள் இடம் பெற்றிருந்து, இந்த ஆப்சன்கள் இந்தியாவில் வெளியாக கார்களில் விரைவில் இடம் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Datsun cars
டட்சன் இந்தியா நிறுவனம் கோ மற்றும் கோ பிளஸ் கார்களுக்கான ப்ரீ புக்கிங்கை ஏற்கனவே தொடங்கி விட்டது. மேலும் இந்த காரின் டெலிவரி நேற்று முதல் தொடங்கப்பட்டு விட்டது. டட்சன் கோ ஃபேஸ்லிப்ட் கார்கள், டாடா டைகோ, மாருதி சுசூகி செலீரியா, மாருதி சுஸுகி எர்டிகாவுடன் GO+ MPV கார்களுக்கு போட்டியாக இருக்கும்.