2018 டாட்சன் ரெடி-கோ லிமிட்டெட் எடிசன் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ 3.58 லட்சம்

2018-datsun-redi-go-limited-edition-launched

டாட்சன் நிறுவனம், 2018 ரெடி-கோ லிமிட்டெட் எடிசன்களில் இன்று இரண்டு வகையான கார்களை, எதிர்வரும் விழாக்கால சீசனில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. டாட்சன் ரெடி-கோ லிமிடெட் எடிசன் கார்களில் 0.8L MT வெர்சன் கார்களின் விலை 3.58 லட்ச ரூபாயாகவும், 1.0L MT வெர்சன் கார்களின் விலை 3.85 லட்ச ரூபாயாகவும் இருக்கும், மேலும் இந்த கார்கள் ஒயிட், சில்வர் மற்றும் ரெட் என மூன்று கலர்களில் விற்பனைக்கு வர உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


Datsun-redi-GO-Limited-Edition-Colorvariationt

You May Like:விரைவில் வெளி வருகிறது ஜீப் காம்பஸ் பிளாக் பேக் பதிப்பு

இந்த கார்கள் அறிமுகம் குறித்து பேசிய நிசான் மோட்டார் இந்தியா நிறுவன துணை தலைவர் பீட்டர் க்ளிஸோல்ட், இந்த விழாக்கால சீசனை டாட்சன் நிறுவனம் வாடிக்கையாளர்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளது. இதற்காக அதிக திறன் மற்றும் வகைகளுடன் கூடிய ரெடி-கோ லிமிடெட் எடிசன் கார்களை அறிமுகம் செய்ய உள்ளது. புதிய டிசைன் உடன் அதிக செயல்திறன் ஆற்றல் கொண்ட இந்த கார்கள், எங்களது முழு அர்பணிப்பு உணர்வுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார்கள் வாடிக்கையாளர்களின் பயண தேவைகளுக்கு சரியான தீர்வாக இருக்கும் என்றார்.

Datsun-redi-GO-Limited-Edition-Interior

You May Like:மஹிந்திரா மராஸ்ஸோ இந்தியாவில் அறிமுகமானது, விலை ரூ. 9.9 லட்சம்

இந்த லிமிட்டெட் எடிசன் ரெடி-கோ கார்களில் புதிய வரவாக, புதிய ரூப் வார்ப், பாடி கிராப்பிக்ஸ் மற்றும் பிராண்ட் ரியர் பம்பர் கவர்கள் இடம் பெற்றுள்ளது. இதுமட்டுமின்றி, ரெடி-கோ கார்களில், பிராண்ட் சிக்னேச்சர் ரெட் உள்ளிட்டுகள் கிரில் மற்றும் ரியர் டைல்கேட் கிராப்பிக்ஸ்களை கொண்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


Datsun-redi-GO-Limited-Edition-Front

காரின் உள்புறத்தில், ரெடி-கோ ஸ்போர்ட்ஸ் ரெட் மற்றும் பிளாக் லெதர் மெத்தைகளுடன் கூடிய சீட்கள், இத்துடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஏசி வென்ட்கள், ரியர் பார்க்கிங் அசிஸ்டெண்ட் சென்சார்கள் ( Remotely Piloted Aircraft System (RPAS)தூரத்தை அளந்து தெரிவிக்கும் டிஸ்பிளே டிவைஸ், ஸ்டெயின் குரோம் கியர் பெசல் மற்றும் உள்புற கதவில் குரோம் ஹேண்டிலும் பொருத்தப்பட்டுள்ளது.