இந்தியாவில் அறிமுகமானது ஜீப் காம்பஸ் லிமிடெட் பிளஸ், விலை ரூ 21.07 லட்சம்

Jeep Compass Limited Plus Variant Launched

ஜீப் இந்தியா நிறுவனம் தனது புதிய டாப் லைன் வகைகளான ஜீப் காம்பஸ் எஸ்யூவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வைப்ரன்ட் லிமிடெட் பிளஸ்கள், 18 இன்ச் அலாய் வீல்கள், மற்றும் புதிய இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம் மற்றும் போனோரமிக் சன் ரூப் களுடன் வெளியாகியுள்ளது. இந்த கார்களின் துவக்க விலை 21.07 லட்ச ரூபாயாக (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்) இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Jeep Compass India

You May Like:ரூ. 40 லட்சத்தில் அறிமுகமானது 2018 மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட்

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


ஜீப் இந்தியா நிறுவனம் தனது டாப் லைன் மாடல் மற்றும் பிரபலமான ஜீப் காம்பஸ் எஸ்யூவி வகைகளை முழுவதும் லோடட் வைப்ரன்ட்-ஆக இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வைப்ரன்ட், லிமிடெட் பிளஸ் என்று அழைக்கப்படுகிறது. இவை பெட்ரோல் டூவீல் டிரைவ் ஆட்டோமேட்டிக் அல்லது டீசல் டூவில் டிரைவ் மற்றும் நான்கு வீல் டிரைவ் மெனுவல் வகைகளில் கிடைக்கிறது. இந்த லிமிடெட் பிளஸ் பைப்ரன்ட்களின் துவக்க விலை 21.07 லட்ச ரூபாயாக (எக்ஸ் ஷோ ரூம் விலை டெல்லியில்) இருக்கும். இது டீசல் 4×2 மெனுவல் கார்களுக்கான விலையாகும்.
Jeep Compass Dashboard

You May Like:வெர்னா பதிப்பை வெளியிட்டு 20 ஆண்டை நிறைவை கொண்டாடும் ஹூண்டாய்

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


ஜீப் காம்பஸ் லிமிடெட் பிளஸ் வகைகளை, ஏற்கனவே ஜீப் காம்பஸ் கார்களில் இடம் பெற்ற வசதிகள் அனைத்தும் இடம் பெற்றுள்ளன. ஜீப் காம்பஸ் லிமிடெட் பிளஸ் கார்களின் புக்கிங்கள், தற்போது இந்தியாவில் அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டு விட்டது. இந்த கார்களை புக்கிங் செய்ய 50,000 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த கார்களுக்கான டெலிவரி வரும் அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. ஜீப் காம்பஸ் லிமிடெட் எடிசன் பிளஸ் 4×2 பெட்ரோல் ஆட்டோமேட்டிக் கார்களின் விலை 21.41 லட்சம் ரூபாயாகும். டீசல் மெனுவல் கார்களின் விலை 22.85 லட்ச ரூபாயாகும் ( எக்ஸ் ஷோ ரூம் விலை).
Jeep Compass Rooftop

You May Like:நிசான் சன்னி ஸ்பெஷல் பதிப்பு அறிமுகம்; விலை ரூ. 8.48 லட்சம்

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


ஜீப் காம்பஸ் லிமிடெட் பிளஸ் கார்களில் இடம் பெற்றுள்ள பெரியளவிலான கூடுதல் வசதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய கார்களில் பெரியளவிலான பான்ரோமிக் சன் ரூப்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் வசதி காம்பஸ் வகைகள் இடம் பெறவில்லை. இந்த புதிய லிமிடெட் பிளஸ் கார்கள் 18-இன்ச் வீல்களை கொண்டுள்ளது. இந்த வீல்கள் பிளாக் மற்றும் பாலிஷ்டு அலுமினியம் நிறத்தில் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி யுகனெக்ட் இன்போடேய்ன்மென்ட்களுடன் கூடிய புதிய 8.4 இன்ச் டச் ஸ்கிரினை கொண்டுள்ளது.
Jeep Compass Audio System

You May Like:புதிய வசதிகளுடன் வெளியானது மாருதி சுசூகி எஸ் கிராஸ்; விலை ரூ. 8.85 லட்சம்

இந்த வசதிகளை தவிர்த்து, ஜீப் காம்பஸ் லிமிடெட் பிளஸ்களில் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்கள், ஆட்டோமேட்டிக்காக மழை பெய்வதை அறிந்து கொள்ளும் வைப்பர்கள் மற்றும் ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிரர்களும் இடம் பெற்றுள்ளது. பாதுகாப்பு வசதிகளை பொருத்தவரையில், ஜீப் காம்பஸ் லிமிடெட் பிளஸ் கார்களில், வழக்கமாக இடம்பெறும் 6 ஏர்பேக்ஸ் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் ஜீப் காம்பஸ் வகை கார்கள், ஏற்கனவே 26,000 யூனிட்கள் விற்பனையாகிவிட்டது. தற்போது உயர்தர ஸ்பெக் உடன் வெளியாகியுள்ள புதிய வெர்சன் கார்கள் இந்த விற்பனை அளவை மேலும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Compass Limited Plus

You May Like:லெக்ஸஸ் ES 300h ஹைபிரிட் சொகுசு செடான் இந்தியாவில் அறிமுகமானது

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, டீசல் ஆட்டோமேட்டிக் கியர் உடன் கூடிய ட்ரைலஹாவ்க் வைப்ரன்ட்கள் அறிமுகம் தாமதமாகியுள்ளது. இந்த கார்கள் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.